மிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்ட தால் இன்றைய சூழ்நிலையில் பல தொழிலாளர் களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ள தால் குவாரிகளை அரசு திறக்கவேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், குவாரிகளைத் திறந்தால் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இயற்கை வளங்கள் சூறையாடப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள், தொடர்ந்து குவாரிகளைத் திறக்க வேண்டாமென்று கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

Advertisment

ss

இந்நிலையில், தமிழகத்தில், 30 இடங்களில் ஆற்று மணல் குவாரிகளைத் திறக்க, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணைய ஒப்புதலை, நீர்வளத்துறை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் 12 இடங்களில் மட்டுமே மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில், ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதில் ரூ.4,730 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் மணல் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அதில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது, அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் சிக்கிய 12 குவாரிகள் மூடப்பட்டன. இந்த குவாரி களை நம்பி பிழைப்பு நடத்திய பல தொழிலாளர் களின் குடும்பங்கள் இன்று வேறு பிழைப்பு இல்லாமல் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் பெருமளவு முடங்கியுள்ளது. இதன் காரணமாகவும் கட்டுமானத் தொழிலாளர் கள் வேலையிழப்பை எதிர்கொண்டுவருகிறார்கள். மூடப்பட்ட குவாரிகளுக்கு மாற்றாக, புதிய மணல் குவாரிகளைத் திறக்காததால், கட்டுமானப் பணிக்கு ஆற்று மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஒரு யூனிட் மணலின் விலை ரூ.10,000 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்து. குவாரிகள் மூடப்பட்டு, தட்டுப் பாடு ஏற்பட ஆரம்பித்த நாள் முதல் எம் சாண்டு, பி சாண்டு விற்பனை அதிகரித்தது. ஆனால் எம் சாண்டு விலையும் இன்று ரூ.80 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் இந்த எம் சாண்டில் பவுடர்கள் கலப்படம் செய்து விற்பனை செய்வதால் தரமான எம்.சாண்டுகளும் கிடைப்பதில்லை. மற்றொரு பக்கம் மணல் திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஆறுகளிலிருந்து திருட்டுத்தன மாக மணல் அள்ளப்பட்டு, அந்த மணலை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வும் நடந்து வருகிறது. இவற்றை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை, சுரங்கத்துறை, காவல்துறை ஆகிய அனைத்துத் துறைகளுக்கும் மாதம் தவறாமல் பங்குக் காசு கொடுக்கப்படுவதால் மணல் திருடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

Advertisment

எனவே விரைவில் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர் கள், மணல் மாட்டு வண்டி உரிமையாளர்கள் அர சிடம் கோரிக்கை மனுக்களை சமீபத்தில் அளித் தனர். அதில், திருச்சி மாவட்டத்தில் அளிக்கப் பட்ட மனுவில், சுமார் 20,000க்கும் மேற்பட்ட லாரி களும், 5000க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் இயக்கப்படாமல் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களின் வாழ்வாதார மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரி இயங்காததால் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்ட சூழ்நிலையில், செயற்கை மணலான எம் சாண்ட் மற்றும் பி சாண்டு உற்பத்தியாளர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு மணலை விற்பனை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் தமிழக அரசு இன்றுவரை மணல் குவாரிகள் திறப்பதில் ஒரு நிலையான முடிவுக்கு வரவில்லை. ஏற்கெனவே எஸ்.ஆர். குரூப்ஸ் ஒரு பக்கம், ராஜப்பா குரூப் ஒரு பக்கம் என இரு தரப்பினரும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இவர்களுக்குள் இருக்கும் போட்டியில் குவாரிகள் திறக்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதனால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. மற்றொரு பக்கம் கட்டுமானத்தொழில் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. அதனைச் சார்ந்துள்ள பல துணைத் தொழில்களும் நசுக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு விரைவில் மணல் குவாரிகளைத் திறக்க முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

___________________

இறுதிச் சுற்று!

மதுரையில் துப்பாக்கிச் சூடு!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தனிப்படை காவலரான மலையரசன், மார்ச் 18ஆம் தேதி, மதுரை ரிங் ரோடு ஈச்சனோடை பகுதியில் மர்மமான முறையில் எரிந்த நிலையில் இறந்துகிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானதால், அவ்வழக்கில் ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் கைது செய்யப்பட்டார். 24ஆம் தேதி திங்களன்று, கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்திரனை, போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் எஸ்.ஐ. மாரிகண்ணனை வெட்ட முயன்று தப்ப முயற்சிக்கும் போது துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்தனர்.

-கீரன்

தமிழகம் போராடும்! தமிழகம் வெல்லும்! -முதல்வர் ஸ்டாலின்

Advertisment

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் குறித்து 24ந் தேதி திங்கள்கிழமை சட்டப் பேரவையில் பதிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது... "தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்ததையடுத்து, சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாநிலத்தில் எந்த அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப் படுகிறதோ, அதேபோல் தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முன்னெடுத்து செல்லக் கூடிய தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு துணை நிற்கும் தமிழகத்திலுள்ள பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கை குழுவில் பங்கேற்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி. "தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்!' என்ற முழக்கத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், நமது மாநில உரிமைகளை மீட்டு எடுக்கவும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிடவும், தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கிறோம்'' என்றார் முதல்வர் ஸ்டாலின்.

-இளையர்