மோடி அரசை வீழ்த்துவதற்காக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடந்தபோது அதில் பேசிய காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே,”"மோடி சர்க் காரின் விசாரணை ஏஜென்சிகளான அம லாக்கத்துறை, வருமான வரித்துறை இனி நம்மை நோக்கி வேகமாகப் பாயும். ரெய்டுகள், கைதுகள் மூலம் நம்மை ஒடுக்கத் திட்டமிடுகிறார்கள். எதையும் எதிர்கொள்ள நாம் தயராக இருக்க வேண்டும்''” என்று எச்சரிக்கை செய்திருந்தார்.

Advertisment

இந்த எச்சரிக்கையின் குரல் அடங்கு வதற்குள் தமிழகத்தின் மணல் மாஃபியாக்கள் குவாரிகளில் அதிரடி ரெய்டுகளை நடத்தி தி.மு.க. அரசுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது அமலாக்கத்துறை.

ss

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங் களில் விசாரித்தபோது, ‘’மணல் குவாரிகளையும் எம்.சாண்ட் குவாரிகளையும் மையமாக வைத்தும், அதில் தொடர்புடையவர்களோடு தி.மு.க. அமைச்சர்களுக்கு இருக்கும் பிசினசை மையமாக வைத்துமே இந்த ரெய்டுகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசே நடத்தும் இந்த மணல் மற்றும் எம்.சாண்ட் தொழில், தி.மு.க. அரசு வந்ததும் ஆன்லைன் வர்த்தகமாக மாற்றப்பட்டது.

Advertisment

மணல் அள்ள அரசு அனுமதியளித்த இடங்களில் சட்டத்துக்குப் புறம்பாக அதிக அளவிலும், அனுமதி வழங்கப்படாத இடங்களி லும் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதில் புழங்கும் கோடிகள் மலைக்க வைப்பதாக இருந்தன. தமிழகத்தில் தினமும் மூன்று லட்சம் டன்னுக்கும் அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. ஆனால், அரசு கணக்கில் அதிகபட்சம் 20,000 டன் என்ற அளவில் மட்டுமே கணக்குக் காட்டப் படுகிறது.

ss

இதுகுறித்த ஆதா ரங்கள் கடந்த சில மாதங்களாக எங்களுக்கு வந்தபடி இருந்தன. அதே சமயம், போலி ரசீதுகள் மூலம் லட்சக்கணக்கில் மணல் கொள்ளையடிக்கப் பட்டு விற்பனை செய்யப் படுவதற்கான ஆதாரங் களும் எங்களுக்கு கிடைத் தன. இதனை ஆராய்ந்த போது, தமிழக அரசுக்கு வருவாய் இழப்பும், ஜி.எஸ். டி. வரி ஏய்ப்பும் நடந்திருப் பதை கண்டுபிடித்தோம்.

Advertisment

போலி ரசீது மூலம் நடந்துள்ள வர்த்தகத்தை கணக்கிட்டபோது, மாதம் சுமார் 1,500 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரிந்தது. இதில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு மட்டுமே மாதம் 75 கோடி ரூபாய். மாதா மாதம் புழங்கும் 1,500 கோடி ரூபாயும் கணக்கில் காட்டப்படாததால் அது சட்டவிரோத பணம் தான். அந்த சட்டவிரோத பரிவர்த்தனையில் அடங்கியுள்ள அந்த பணம் எங்கே செல்கிறது? என்பதற்கான விடையும் எங்களுக்கு கிடைத்தது.

இதுகுறித்து டெல்லியிலிருந்து உத்தரவு கிடைத்ததும் களத்தில் குதித்துள்ளோம்'' என்கிறார்கள்.

மணல் விற்பனையை அமைச்சர் துரை முருகன் கட்டுப்பாட்டிலுள்ள நீர்வளத்துறை தான் மேற்கொள்கிறது. இதனால், இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு ஊழல்கள் அமைச்சர் துரைமுருகனுக்குத்தான் தலைவலியை கொடுக்கும்.

செந்தில்பாலாஜியை தொடர்ந்து 4 அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை குறி வைத்திருக்கிறது என ஜூன் 24-27 தேதியிட்ட நக்கீரனில் தனி ஸ்டோரி எழுதியிருந்தோம். இதோ…அமைச்சர் துரைமுருகனை குறிவைத்து பாய்ந்திருக்கிறது அமலாக்கத்துறை. இந்த பாய்ச்சல் மேலிடம்வரை செல்லும் என்கிறார்கள் அதிகாரிகள்.