மிழகத்தில் மணல் குவாரிகள் செயல்படாததால் கட்டுமானப் பணிகளும், அதனை நம்பியிருக்கும் லாரி தொழில்களும் முடங்கிக் கிடப்பதால், "மணல் குவாரிகளை தி.மு.க. அரசு விரைந்து துவக்க வேண்டும்' என்கிற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

தமிழகத்தில் மணல் விற்பனையை அரசே செய்துவந்தாலும், குவாரிகளிலிருந்து மணலை அள்ளி எடுத்துக் கொடுக்கும் காண்ட்ராக்ட்டை தனியாரிடம் ஒப்படைத்துவருகிறது தமிழக அரசு. அந்த வகையில், அந்த காண்ட்ராக்டை புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகிய மூவர் அணி எடுத்திருந்தனர்.

ss

இந்த காண்ட்ராக்ட் தொழிலில் புழங்கும் பல ஆயிரம் கோடிகளில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரிகளிலும் மற்றும் இந்த மூவர் அணி தொடர்பான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர்.

இந்த நிலையில், இந்த காண்ட்ராக்டை வேறு நபர்களுக்கு மாற்றிக்கொடுக்க அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டதில், மணல் குவாரிகளில் மணல் அள்ளப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இதே நிலை நீடித்துவருவதால் கட்டுமானப் பணிகளும், லாரி தொழிலும் முடங்கிக் கிடக்கின்றன.

Advertisment

தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், யாருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்ற பரபரப்புதான் குவாரி உரிமை யாளர்கள் மத்தியில் பேசப்பட்டுவருகிறது. அதில் மிகமுக்கியமாக, கடந்த அ.தி.மு.க. ஆட் சிக் காலத்திலும், தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் எஸ்.ஆர். குரூப்ஸ் கையிலிருந்த மணல் வியா பாரம் கைமாறப் போகிறது என்றும், பா.ஜ.க. விற்கு ஆதரவாக எஸ்.ஆர். குரூப்ஸ் செயல்பட்ட விவகாரமும், பாராளுமன்றத் தேர்தலுக்கு அவர்கள் செலவழித்த பணம் மற்றும் ஆள் பலம் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட பிறகுதான், இந்த மணல் ஒப்பந்தம், மயிலாடுதுறை ராஜப்பாவிற்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.

sand

இந்தத் தகவல் ஒருபக்க மிருக்க... மற்றொரு பக்கம், ஐயப்பன் குடியிருக்கும் மலையின் பெயரைக் கொண்டவர், ராமசந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் கூட்டணிக்கு இந்த ஒப்பந்தத்தை, முருகன் பெயரைக் கொண்ட ஆடிட்டரின் முயற்சியால் முதலமைச்சரின் விருப்பத்திற்கு மாறாகக் கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக செய்தி கசிகிறது.

Advertisment

கடந்த 10 ஆண்டுகளில், இந்த எஸ்.ஆர். குரூப்ஸ், கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர், பல்லாயிரம் கோடிக்கு சட்டவிரோத வரி ஏய்ப்பு செய்ததால்தான் அமலாக்கத்துறை தொடர்ந்து பல இடங்களில் அதிரடி ரெய்டுகளை நடத்தியது. அந்த ரெய்டுகளில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாக முக்கிய ஆதாரங் களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதியப் பட்டது. இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சி யர்கள் தொடங்கி கனிமவளத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

தமிழக மணல் விற்பனையில் லிப்டிங் கான்டிராக்ட் மூலம் எடுத்து, அதற்கான நீதிமன்ற உத்தரவினைப் பெற்று, சட்ட மன்றத்தில 2004ஆம் ஆண்டு சட்டமாக்கி, சட்டப்படி தமிழக அரசுக்கு வருவாயை ஏற்படுத்த முழுமையான சட்ட நடவடிக் கையை மேற்கொண்டவர் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜப்பா ஆவார். இதனால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் அதிகரித்தது.

அமலாக்கத்துறையின் சோதனையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி குவாரிகளில் ட்ரோன் மூலம் ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டது. அரசு நிலத்தில் செயல்பட்ட 17 குவாரிகள், தனியார் நிலங்களில் செயல்பட்ட 22 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள், கிராவல் மண் வெட்டியெடுத்தது உறுதியானது. பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றதோடு, கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகிய மூவேந்தர் கூட்டணி, அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தியிருந்தது. இதில் ஒரு மாவட்டத்தில் ஒரு தாலுகாவில் சுமார் 140 கோடி அளவுக்கு கனிமவளக் கொள்ளை நடந்திருப்பது ஆதாரப்பூர்வமாகத் தெரிய வந்தது.

sand

எனவே தி.மு.க. தலைமை கடந்த ஒரு வருடமாக இந்த மூவேந்தர்களையும் அப்புறப் படுத்தியிருந்தது. தற்போது தலைமையின் விருப்பத்தை மீறி, மூத்த அமைச்சரும், ஆடிட்டரும் இணைந்து, தமிழகத் திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வாரியாக மூவேந்தர்களைக் கொண்டு கிராவல், சவுடு மண் எனக் கனிம வளக் கொள்ளை மூலம் அரசுக்கு பல்லா யிரம் கோடி வருவாய் இழப்புக்கு வழி வகுத்துள்ளனர்.

இந்த மணல் மாஃபியா கும்பல், ஜம்பிங் பர்மிட் (ஒருவர் பெயரில் தரப்பட்ட பெர்மிட் அடுத்தடுத்து மாற்றப்பட்டபோதும், அதே நபரின் பெயரிலேயே நடத்தப்படும்) என்ற முறையைக் கையாண்டு, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, பொறுப்புமிக்க அதிகாரிகளைக் கையில் வைத்துக்கொண்டு தங்களுடைய குற்றவியல் நடவடிக்கைகளைத் தலைமைக்கு தெரியாமல் மறைத்து, தலைமையின் கோபப் பார்வையிலிருந்து தப்பிவிடுகின்றனர்.

கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் இந்த மூவர் கூட்டணியின் மீது தமிழக முதல்வர் சாட்டையைச் சுழற்றுவாரா?