அரசுக்கு இழப்பு, ஆட்சியாளர்களுக்கு லாபம் எனும் பாலிசிப்படி, தமிழகத்தில் வருடத்துக்கு 2 லட்சம் கோடிகள் புழங்கும் மணல், சவுடு, கிராவல், கல்குவாரி பிசினெஸில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டிப் பறந்தவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி. இவரின் ஆசியுடன் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகிய மூவர் அணிதான் ஒட்டுமொத்த குவாரி சாம்ராஜ்ஜியத்தையும் கட்டி ஆண்டது. ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்ச தொகையின் அளவைப் போல 5 மடங்கு தொகையை மணல் மாஃபியாக்கள் சுருட்டினர்.
இந்த நிலையில், தி.மு.க. ஆட்சி வந்தபிறகும், நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறையின் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து கரிகாலன் பேசிய விவகாரங்கள் அம்பலமானதில் (இதனை 2 மாதங்களுக்கு முன்பே நக்கீரனில் பதிவு செய்திருக்கிறோம்) மணல் தொழிலிலிருந்தே விலகிக் கொள்வதாக அறிவித்தார் சேகர் ரெட்டி. ஆனாலும், புதுக்கோட்டை ராமச்சந்திரன் தலைமையிலான மூவர் அணியிடமே குவாரி பிசினெஸ் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
இதுகுறித்து சுரங்கத் தொழில்துறை தரப்பில் நாம் விசாரித்தபோது, "தமிழகத்தில் தாமிரபரணி, வைகை, பாலாறு ஆகிய நதிகளில் மணல் அள்ளுவது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற ஆறுகளில் விதிகளுக்குட்பட்டு சில பாயிண்டுகளில் மட்டும் மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் சட்டத்திற்கு புறம்பாக அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதால் தமிழகத்தில் ஆற்று மணல் அள்ள முழுமையாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் எம்.சாண்ட் பிசினெஸ் தமிழகத்தில் அதிகரித்தது.
இந்த நிலையில், மணல் விற்பனையை அரசாங்கமே செய்யும் கொள்கை முடிவுக்கு தடையாக இருக்கும்

இந்த நிலையில், மணல் விற்பனையை அரசாங்கமே செய்யும் கொள்கை முடிவுக்கு தடையாக இருக்கும் நீதிமன்றத்தின் தடையாணையை உடைக் கும் வகையில் சில ஆலோசனைகள் அரசின் மேலிடத்தில் நடந்துள்ளன. ஆனால், அந்த ஆலோசனை அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை. அதேசமயம், மணலுக்கு தடையிருப்பதால் சவுடு, கிராவல், கல் உள்ளிட்ட குவாரிகளுக்கு லைசன்ஸ் வழங்குவது என அமைச் சர் துரைமுருகன் தரப்பில் விவாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக முதல்வர் குடும்பத்தில் செல்வாக்குள்ள நபரைத் தொடர்பு கொண்டுள்ளனர்.
ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவர் அணியுடன் நேரடி பிசினெஸ் தொடர்பில் சேகர்ரெட்டி இல்லையென்றாலும், மூவர் அணியை இயக்குவது சேகர்ரெட்டிதான். அதனால், சேகர்ரெட்டியுடன் பிசினெஸ் பற்றி கலந்தாலோசித்தார் ராமச்சந்திரன். அப்போது, "முதலில் சவுடு, கிராவல் பிசினெஸ்சை கைப்பற்றுங்கள்; பிறகு மணல் காண்ட்ராக்டை பார்த்துக் கொள்ளலாம். பெரிய இடத்தைச் சேர்ந்தவரை சந்தித்துப் பேசுங்கள்'' என அட்வைஸ் செய்தார் சேகர்ரெட்டி.
அதன்படி பேச்சுவார்த்தை நடத்திய புதுக்கோட்டை ராமச்சந்திரன், அரசு புறம்போக்கு நிலங்களிலும் பட்டா நிலங்களிலும் சவுடு மற்றும் கிராவல் அள்ளும் அனுமதியை தங்களிடம் ஒப்படைக்கக் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் முக்கிய நகரங்களிலுள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு வரை நியமித்திருக்கிறார் புதுக்கோட்டை ராமச்சந்திரன். இதற்காக ஸ்டார் ஹோட்டலில் நடத்திய ஒவ்வொரு நேர்காணலிலும், சுமார் 100, 150 நபர்கள் கனமான சூட்கேஸ்களுடன் கலந்துகொண்டனர். தனக்கு நெருக்கமான அதேசமயம் மாதாமாதம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை தடையின்றி தரும் நபரையே நியமித்திருக்கிறார் ராமச்சந்திரன். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 2 கோடி ரூபாய் முன்பணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக முழுவதும் மாவட்டத்தின் தன்மையை வைத்து குறைந்தது 2 கோடியும், அதிகபட்சம் 15 கோடியும் விலை நிர்ணயித்து வசூல் வேட்டையில் இறங்கிவிட்டது மூவர் அணி. நேர்காணலில் கலந்துகொண்ட வர்களிடம், இந்த விவகாரத்தை பெரிய இடத்தைச் சேர்ந்தவர் தான் பார்க்கிறார்; அவர் எங்க ளுக்கு அனுமதி தந்துவிட்டார். தமிழகம் முழுவதும் சவுடு, கிராவல் அனுமதி எங்களுக்கு கிடைத்துள்ளது என்று சொல்லி இந்த வசூல் வேட்டை நடந்து வருகிறது. ஆக, கடந்த ஆட்சி யில் கோலோச்சிய மணல் மாஃபியாக்களே மீண்டும் இந்த தொழிலின் அதிகாரத்தில் ஊடுருவியுள்ளனர்''‘என்று சுட்டிக்காட்டினார்கள்.
அரசு புறம்போக்கு நிலத்தில் சவுடு அள்ளுவதற்கு ஒரு லோடுக்கு (2 யூனிட்) 750 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும். இது, வெளிச்சந்தை யில் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. இதற்கான லைசன்ஸை யார் வேண்டுமானாலும் மாவட்ட கலெக்டரிடமிருந்து பெறலாம். ஆனால், ராமச்சந்திரனின் ஆட்களே அந்த லைசன்சை பெறுவார்கள் அல்லது அவர் சொல்லும் நபர்களுக்கே லைசன்ஸ் கொடுக்கப்படும்.
அதேபோல, மாதத்திற்கு 1000 லோடுதான் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்படுகிறபோது, அந்த 1000 லோடுக்கு மட்டும்தான் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், விதிகளுக்கு புறம்பாக 5,000 லோடுக்கும் அதிகமாக அள்ளப்படும். இதில் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் எல்லாம் மூவர் அணிக்கே போகும். அந்த வகையில், அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு. அதாவது அரசுக்கு 1000 ரூபாய் வருவாய் எனில் மூவர் அணிக்கு 50,000 ரூபாய் கிடைக்கும்.
அதேபோல, பட்டா நிலம் வைத்திருப்பவர் தனது நிலத்திலிருந்து சவுடு அள்ள மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறுகிற அவர் ஒரு லோடுக்கு அரசுக்கு 180 ரூபாய் செலுத்த வேண்டும். அப்படி அனுமதி பெற்றாலும் எளிதாக விற்க முடியாது. மூவர் அணியே அங்கேயும் நுழைந்து பட்டா நிலத்திற்குரியவரை வளைத்து 180 ரூபாயோடு 50 ரூபாய் கூடுதலாக கொடுத்து அந்த நிலத்தை தங்களின் கஸ்டடியில் கொண்டு வந்துவிடுவர். அதன்பிறகு மூவர் அணி வைப்பதுதான் சட்டம். இதற்கு, நிலத்திற்குரியவர் சம்மதிக்கவில்லையெனில், அவரால் சவுடு மணலை விற்க முடியாது.
இதனை நம்மிடம் விவரித்த நீர்வளத்துறை அதிகாரிகள், ”ஆற்றுக் கரையோரமிருக்கும் பட்டா நிலங்களை இந்த மூவர் அணி தற்போது விலை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உள்ள ஏ.டி.மைன்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் இந்த மூவர் அணியினர், "சவுடு மணல் மற்றும் கிராவல் குவாரிகளுக்கான அனுமதியை எங்களுக்கே மேலிடம் ஒப்புதல் தந்திருக்கிறது. அதனால் நாங்கள் நியமித்திருக்கும் ஆட்களுக்கு மட்டுமே லைசன்ஸ் தர வேண்டும். அவர்களுக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது'' என உத்தரவிடுகின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அதிகாரி கள், மாவட்ட கலெக்டரிடம் இதனை தெரிவித் திருக்கும் நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆட்சி மேலிடத்திலிருந்து கலெக்டர்களுக்கும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் எந்த சமிக்ஞையும் இதுவரை கொடுக்கப்படவில்லை. இந்த சூழலில், மூவர் அணியிடம் முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்துள்ள நபர்கள், தங்கள் பகுதியில் சவுடு களை அள்ளிச்செல்லும் பணியில் குதிக்க, லைசன்ஸ் இல்லாமல் சவுடு மணலை அள்ளிச்செல்வதால் லாரிகளை மடக்கிப் பிடித்து வருகிறது காவல்துறை. இதனால் ராமச்சந்திரனிடம் கொந்தளித்து வருகிறார்கள் முன்பணம் செலுத்தியவர்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த பஞ்சாயத்து துரைமுருகனிடம் செல்ல, மேலிடத்துப் பிரமுகரை கைகாட்டியுள்ளார் அவர். மேலும், சவுடு, கிராவல் காண்ட்ராக்ட் தொடர்பாக யார் தன்னை அணுகினாலும், "அதிகாரம் என்னிடமில்லை; அவரையே பாருங்கள்' என அனுப்பி வைக்கிறார் துரைமுருகன்'' என்கிறார்கள் அதிகாரிகள்.
மணல் மாஃபியாக்களின் கைகள் மீண்டும் மறைமுகமாக ஓங்கியுள்ள நிலையில், இதுகுறித்து நம்மிடம் பேசிய நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சங்கர் இடையர்,”"எந்த குவாரியாக இருந்தாலும் அதன் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும். எந்த இடைத்தரகர்களும் இருக்கக்கூடாது. இடைத்தரகர்களால்தான் அரசுக்கு வருவாய் இழப்பும், ஆட்சிக்கு கெட்டபெயரும் ஏற்படுகிறது. அதனால் இந்தத் தொழிலை முறைப்படுத்த முதல்வர் சீரியஸ் காட்டவேண்டும். முந்தைய ஆட்சியில் மாஃபியாக்களாக இருந்தவர்களை தவிர்த்துவிட்டு தகுதியுள்ள தி.மு.க.வினருக்கு லைசன்ஸ் தரப்பட வேண்டும்'' ‘’ என்கிறார். இதே குரல்கள்தான் தி.மு.க. தொழிலதிபர்கள் பலரிடமும் எதிரொலிக்கிறது.
அ.தி.மு.க. போலவே தி.மு.க.வுக்கும் தேர்தல் நிதி கொடுத்தோம் என்று உரிமை கோருகிறது மணல் மாஃபியா தரப்பு. பத்தாண்டுகளாக எதிர்க் கட்சியாக இருந்தாலும் கட்சிக்காகவே உழைத்தோம் என்கிறது தி.மு.க தொழிலதிபர்கள் தரப்பு.
இரண்டு லட்சம் கோடிகள் புழங்கும் இந்த தொழிலிலிருந்து மாஃபியாக்கள் விரட்டப்படுவார் களா என்பதே அதிகாரிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது !