பினராய் விஜயன் தலை மையிலான கம்யூ னிஸ்ட் அரசு கல்வித்துறையில் புதியதொரு முயற்சியாக, பள்ளி மாணவர்களுக்கும்- மாணவிகளுக்கும் ஒரேவித மான சீருடையை அறிமுகம் செய்துள்ளது. கோழிக் கோடு மாவட்டத்தின் பாலுசேரி அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ- மாணவி இருவருக்குமே சட்டை-பேன்ட்டை சீருடையாக அறிவித்துள்ளது.
இதற்கு மாணவர்- பெற்றோர் தரப்பி லிருந்து வரவேற்பு இருந்தாலும், அப்பகுதி முஸ்லிம் உள்ளிட்ட மத அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. "ஒரே ஸ்வதந்திரியம், ஒரே சமீபனம்'’என்னும் பெயரில் பாலின பேதத்தை அகற்றும் முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் சீருடை முயற்சியை, "ஜனநாயகப்பூர்வமற்றது' என முஸ்லிம் ஒருங்கிணைப்புக் குழு விமர்சிப்பதுடன், "இவ்விஷயத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்' என கிளம்பியுள்ளது.
"பேன்ட்-சட்டை என்பது ஆண்களுக்கான உடை. சுதந்திரம் என்ற பெயரில் தாராளமயச் சிந்தனைகளை மாணவிகளின் மீது திணிப்பது பெண்களின் பெருமைக்கு இழுக்கு' என அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக் கைக்கு எதிராக ஷன்னி மாணவர் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் லீக்கின் இந்திய அளவிலான மாணவர் கூட்ட மைப்பு பாலுசேரி பள்ளியருகே போராட் டம் நடத்தியதை அடுத்து, "மாணவர் மீது இந்தச் சீருடை விவகாரம் வலுவில் திணிக் கப்படாது' என பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றத்தைப் பரிந்துரைத்த உயர் கல்வி அமைச்சர் ஆர்.பிந்து, போராட்ட அமைப்புகளை விமர்சனம் செய் துள்ளார். "இந்த முற்போக்கான மாற்றத்தை, குழந்தைகளை நேசிப்பவர்கள் எதிர்க்கமாட் டார்கள்'' என கருத்துத் தெரி வித்துள்ளார். பொதுக்கல்வி அமைச்சர் சிவன் குட்டியும், "பாலின சமத்துவத்தை நோக்கிச் செல்லும் எந்த முன்னேற்ற கரமான யோசனையையும் அரசு ஊக்குவிக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் இந்தத் திட்டம் மாநிலம் தழுவிய அளவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. சோதனை முயற்சியாக ஒரேயொரு பள்ளியில் பதி னொன்று, பன்னிரண்டாம் வகுப்பினருக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கேரளாவில் ஒருசில குறிப்பிட்ட தனியார் பள்ளி களில் இரு பாலருக்கும் பேண்ட் -சட்டை சீருடை யாக இருக்கிறது. அதற்கடுத்தபடியாக இந்தப் பள்ளியில்தான் இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. மொத்தம் 260 பேர் படிக்கும் பள்ளி யில் 200 பேர் பெண்கள். பெரும்பகுதி பெற்றோர், அரசின் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
பழமையை கைவிட முடியாத மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். பல பள்ளிகளில் புர்கா அணியும் பழக்கம் இருக்கிறது. "பேன்ட்-சட்டையை சீருடையாக ஒப்புக்கொண்டால், புர்கா அணியும் பழக்கம் போய்விடும் என நினைப்பதால், இந்த சீருடை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெ ரிவிக்கிறார்கள்' என நவீனத் தின் பக்கம் ஆதரவு தெரிவிக்கும் இஸ்லாமிய மாணவிகளே குறிப்பிடுகிறார்கள்.