எம்.ஜி.ஆர். ஆரம்பித்த சத்துணவுத் திட்டத்தில் முட்டையை அறிமுகப்படுத்தியவர் கலைஞர். அந்த முட்டைகள் சத்துணவுக்கு வந்தது, கோழிப்பண்ணை உரிமையாளர்களை சந்தோஷப்படுத்தியது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில் ஏதாவது தவறு நேர்ந்துவிடப் போகிறதென்று, மாவட்ட கலெக்டர்களையே அதன் சப்ளைகளைக் கண்காணிக்கச் செய்தார் கலைஞர். சத்துணவுக்கான நல்ல முட்டைகளை, மாவட்ட கலெக்டர்களின் கண்காணிப்பில் அனுப்பினார்கள். மாவட்ட கலெக்டர், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களுக்கு அனுப்ப, அங்கிருந்து பள்ளிகளுக்கும் அங்கன்வாடி மையங்களுக்கும் அனுப்பப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் நல்ல முட்டைகள் சப்ளை என்ற நிலை மாறி கோழி கடைசியாகப் போடும் குட்டி முட்டைகள் சப்ளை என முறைகேடு ஆரம்பித்தது. கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கலந்துகொள்ளும் மாவட்ட வாரியான டெண்டர் என்பதை மாற்றி, நாமக்கல் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான கிறிஸ்டி என்கிற நிறுவனம் மாநிலம்
எம்.ஜி.ஆர். ஆரம்பித்த சத்துணவுத் திட்டத்தில் முட்டையை அறிமுகப்படுத்தியவர் கலைஞர். அந்த முட்டைகள் சத்துணவுக்கு வந்தது, கோழிப்பண்ணை உரிமையாளர்களை சந்தோஷப்படுத்தியது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில் ஏதாவது தவறு நேர்ந்துவிடப் போகிறதென்று, மாவட்ட கலெக்டர்களையே அதன் சப்ளைகளைக் கண்காணிக்கச் செய்தார் கலைஞர். சத்துணவுக்கான நல்ல முட்டைகளை, மாவட்ட கலெக்டர்களின் கண்காணிப்பில் அனுப்பினார்கள். மாவட்ட கலெக்டர், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களுக்கு அனுப்ப, அங்கிருந்து பள்ளிகளுக்கும் அங்கன்வாடி மையங்களுக்கும் அனுப்பப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் நல்ல முட்டைகள் சப்ளை என்ற நிலை மாறி கோழி கடைசியாகப் போடும் குட்டி முட்டைகள் சப்ளை என முறைகேடு ஆரம்பித்தது. கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கலந்துகொள்ளும் மாவட்ட வாரியான டெண்டர் என்பதை மாற்றி, நாமக்கல் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான கிறிஸ்டி என்கிற நிறுவனம் மாநிலம் முழுக்க முட்டை சப்ளை செய்யும் என்ற நிலை உருவானது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முட்டை ஊழலை நக்கீரன்தான் முதன்முதலில் அம்பலப்படுத்தியது.
கிறிஸ்டி நிறுவனம் கலந்துகொள்ளும் வகையில் டெண்டர் விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. கோழிப் பண்ணை உரிமையாளர்கள் வழக்குப் போட்டனர். தி.மு.க. வழக்கறிஞர்கள்தான் அந்த வழக்கை நடத்தினார்கள். சென்னை உயர்நீதிமன்றம், கிறிஸ்டி நிறுவனம் பயன்பெறும் வகையில் டெண்டரை மாற்றியமைத்தது தவறு என தீர்ப்பளித்தது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வின் ஊழலை வன்மையாகக் கண்டித்தார். "தி.மு.க. ஆட்சி வந்ததும் முட்டை சப்ளை செய்வது கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்'' என்றார்.
தி.மு.க. ஆட்சி வந்ததும் முட்டை எப்படி சப்ளையாகிறது என கோழிப்பண்ணை உரிமையாளர் களிடம் கேட்டோம். "இன்னும் கிறிஸ்டி நிறுவனம்தான் முட்டை சப்ளையில் ஆதிக்கம் செலுத்துகிறது. பாதி அளவு முட்டையை அந்த நிறுவனம்தான் சப்ளை செய்கிறது. மீதியை கோழிப்பண்ணை உரிமையாளர் சங்க தலைவர்களான சின்னராஜு மற்றும் வான்ங்ளி ஆகியோருக்கு அளித்துள்ளது.'' என்கிறார்கள்.
"தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி முட்டை என வாரத்திற்கு 5 நாள் கணக்கில் ஆண்டுக்கு 260 நாட்களுக்கு 260 கோடி முட்டை சப்ளை நடக்கிறது. முட்டை விலை குளிர்காலத்தில் குறையும், வெயில் காலத்தில் அதிகரிக்கும். குளிர்நிறைந்த இந்தக் காலத்தில் சென்னையில் முட்டை விலை ரூ.4.65, நாமக்கல்லில் ரூ.4.05. ஆனால் ஒரு முட்டை, சத்துணவு மையத்திற்குச் செல்ல அரசு கொடுக்கும் விலை 5 ரூபாய் 25 பைசா. பழைய நிலையே தொடர்கிறது.
மார்க்கெட் விலையை விட ஒன்றரைரூபாய் குறைத்துதான் கிறிஸ்டி நிறுவனம் கோழிப் பண்ணையாளர்களிடம் வாங்கும். இரண்டரை ரூபாய்க்கு முட்டை வாங்கி ஐந்தேகால் ரூபாய்க்கு சப்ளை செய்தால் 90 சதவிகிதம் விலையில் மட்டும் கொள்ளை நடக்கிறது. ஒரு வருடத்தில் சுமார் ரூ.400 கோடி முட்டை கொள்முதலிலேயே ஊழல் நடக்கிறது'' என்கிறார்கள் பண்ணை உரிமையாளர்கள்.
"கோழிப் பண்ணையிலிருந்து புல்லட் முட்டைதான் வாங்கப்படுகிறது. அதற்கு நார்மல் முட்டை விலையை விட அதிக விலை கொடுக்கப் படுவதற்குக் காரணம் போக்குவரத்துச் செலவுகள் தான். அதிலும் பி.டி.ஓ. அலுவலகத்திலிருந்து பள்ளிகளுக்கு முட்டைகளை எடுத்துச் செல்ல தனியாக அரசு செலவிட வேண்டும். அதற்காகும் செலவுகளையும் ஈடுகட்டத்தான் முட்டைக்கு அதிக விலை தருகிறோம்'' என்கிறார்கள் சமூகநலத்துறை அதிகாரிகள்.
"சென்னை மற்றும் தமிழகத்தின் தென்பகுதிக்கு முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனம் வெறும் பில் போடும் நிறுவனம் மட்டுமே. கோழிப்பண்ணையோ, குடோனோ, போக்குவரத்து வாகனங்களோ அதனிடம் கிடையாது. அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய கிறிஸ்டி, இப்பொழுது தமிழகத்தின் பாதி விநியோகத்தை கையிலெடுத்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்தது போலவே வருடாந்திர விலை நிர்ணயம் செய்யாமல் கலைஞர் ஆட்சியில் செய்தது போல மாதந்தோறும் டெண் டர் என தி.மு.க. அரசு செய்திருக்கலாமே? கிறிஸ்டி யை அனுமதிக்காமல் பண்ணை உரிமையாளர்கள் மட்டும் முட்டை சப்ளை என திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால், தி.மு.க. அரசின் மீது ஊழல் கறை படிந்த குற்றச்சாட்டு வந்திருக்காது'' என்கிறார்கள் கோழிப்பண்ணை உரிமையாளர்கள்.
இதுபற்றி சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் கேட்டோம். "தி.மு.க. ஆட்சியில் வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. கிறிஸ்டி நிறுவனம் முட்டை சப்ளை செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பண்ணை உரிமை யாளர்களும் முட்டை சப்ளை செய்கிறார்கள். இது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னறிவிப் போடு நடந்த டெண்டர். இதில் முறைகேடுகள் எதுவும் இல்லை'' என்றார்.
"அரசுக்கு வருமானம் குறைவான இந்த காலத்தில் அரசின் பணம் விரயமாக ஏன் கிறிஸ்டியை அனுமதித்தீர்கள்?'' என தொடர்ச்சி யாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "எனக்கு விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை, அதிகாரிகளைக் கேட்டுவிட்டு தொடர்புகொள் கிறேன்'' என்றார்.