திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்ச மாலை வரிசையில் அம்பேத்கருக்கு காவிச்சட்டை, திருநீறு, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டி கலவரத்துக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
அம்பேத்கரின் 66-வது நினைவுதினத்தை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளரான கும்பகோணம் குருமூர்த்தி, அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்து, விபூதி பூசி, குங்குமம் வைத்து சித்தரிக்கப்பட்ட படத்துடனான போஸ்டரை கும்பகோணம் முழுவதும் ஒட்டினார். இந்த போஸ்டர் ஒட்டுமொத்த அம்பேத்கரியவாதிகளையும் கொதிப்படையச் செய்தது. இதற்கெதிராக... விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரும் ஒன்றுதிரண்டு கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து குருமூர்
திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்ச மாலை வரிசையில் அம்பேத்கருக்கு காவிச்சட்டை, திருநீறு, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டி கலவரத்துக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
அம்பேத்கரின் 66-வது நினைவுதினத்தை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளரான கும்பகோணம் குருமூர்த்தி, அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்து, விபூதி பூசி, குங்குமம் வைத்து சித்தரிக்கப்பட்ட படத்துடனான போஸ்டரை கும்பகோணம் முழுவதும் ஒட்டினார். இந்த போஸ்டர் ஒட்டுமொத்த அம்பேத்கரியவாதிகளையும் கொதிப்படையச் செய்தது. இதற்கெதிராக... விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரும் ஒன்றுதிரண்டு கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து குருமூர்த்தி கைதுசெய்யப்பட்டதோடு. போஸ்டர்களை போலீசாரே ஆள்வைத்து கிழித்தனர்.
இதுகுறித்து குருமூர்த்தி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "அம்பேத்கர் இந்தியாவி லுள்ள அனைவருக்கும் பொதுவானவர். அவர் பௌத்த மதத்தைத் தழுவி இறந்தார். அந்த மதமும் இந்து மதத்தை சார்ந்ததாகும். பௌத்த மதத்தின் நிறமும் காவியாகும். அவரை ஒரு சமூகத்தினர் சாதியரீதியாகக் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் அம்பேத்கர் இந்து மதத்தைச் சார்ந்த பௌத்த மதத்தை சேர்ந்தவர் என உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்படும்'' என்றார்.
இது ஒருபுறமிருக்க, சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 66-ஆவது நினைவு தினத்தை ஒட்டி தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள மறியல் கிராமத்தில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பா.ஜ.க. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். டாக்டர் அம்பேத்கரின் கோட்பாடுகளுக்கு எதிரான கட்சி எனக் கூறி மாலை அணிவிக்கவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறுபுறம், மாலை அணிவிக்க விடமாட்டோம் எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரே இடத்தில் சாலை மறியல், ஆர்ப் பாட்டம் என பதட்டமான சூழ்நிலை உருவானது. ஒருகட்டத்தில் மாலை போடுவதற்காக பா.ஜ.க.வினர் ஆவேச மாக எழுந்து கோஷ மிட்டவாறு சிலையை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மாலை போட அனுமதிக்க மாட் டோம் எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் அம்பேத்கர் சிலையைச் சுற்றி அரணாக நின்றுகொண்ட னர். மீண்டும் பதட்டமான சூழ்நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து 5 பெண்கள் உட்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் கூறுகையில், "பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயத்திற்காக இதனைச் செய்கிறார்கள். மறியல் கிராமம் தலித் மக்கள் பெரும் பான்மையாக வசிக்கும் பகுதி. அங்கே ஆதித் தமிழர் பாது காப்புப் பேரவை வலு வாக உள்ளது. பேரவையின் அலுவலகக் கட்டி டத்தின் முன்பாக அம்பேத்கர் சிலை அமைக்கப் பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதேபோல அம்பேத்கரின் சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவிக்க வந்தனர். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து திரும்பிச் சென்றனர்.
இந்த ஆண்டு முன்கூட்டியே திட்டமிட்டு பிரச்சனை செய்திருக் கின்றனர். பா.ஜ.க.வினர் அங்கே மாலை அணிவிக்க முயற்சிக்கக் கூடும் என உளவுத்துறையினர் முன்னறிவிப்பும் செய்திருந்தனர். அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி அவருக்கு மரி யாதை செலுத்தவேண்டும் என பா.ஜ.க.வினர் உண்மையிலேயே நினைத்திருந்தால் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்து அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கலாம். அல்லது மறியல் கிராமத்தின் அதே பகுதி யில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் பொது இடத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்திருக்கலாம். கலவரத் தைத் தூண்டும் நோக்கத்தோடு அம்பேத்கரை இந்த முறை கையில் எடுத்துள்ளனர்'' என்கிறார்கள்.