Advertisment

கல்விக்குள் "காவி'! ஒன்றிய அரசு திட்டம்!

rss

ந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவான (யூ.ஜி.சி.) பாடத்திட்டத்தில் மனுதர்மம், அர்த்தசாஸ்திரம், பஞ்சாங்கம் பார்க்க கற்பித்தல் போன்றவற்றைப் புகுத்தி கல்வியை காவிமயமாக்கத் திட்டமிட்டுள்ளது.  

Advertisment

இதனை நாக்பூர் கல்வித்திட்டம் என்பதே சரியான பார்வையாக இருக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள். ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமான நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழுவின் ஏ.பி.வி.பி சார்ந்த ராஜ்சரன்சாகி மற்றும் வீரேந்திரசிங் சோலங்கி ஆகியோரிடம் திட்டம் வகுத்துக் கொடுத்து இத்திட்டத்தை 2020- 2026 ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்தவேண்டும். மேலும் 2040-ஆம் ஆண்டிற்குள் நாக்பூரின் கல்வித்திட்டமே இந்தியா முழுவதும் இருக்க வேண்டும் என முடிவுசெய்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.

Advertisment

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் கல்வியமைச்ச ரான தர்மேந்திர பிரதானைச் சந்தித்த அந்தக் குழு இத்திட்டத்தை நடைம

ந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவான (யூ.ஜி.சி.) பாடத்திட்டத்தில் மனுதர்மம், அர்த்தசாஸ்திரம், பஞ்சாங்கம் பார்க்க கற்பித்தல் போன்றவற்றைப் புகுத்தி கல்வியை காவிமயமாக்கத் திட்டமிட்டுள்ளது.  

Advertisment

இதனை நாக்பூர் கல்வித்திட்டம் என்பதே சரியான பார்வையாக இருக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள். ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமான நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழுவின் ஏ.பி.வி.பி சார்ந்த ராஜ்சரன்சாகி மற்றும் வீரேந்திரசிங் சோலங்கி ஆகியோரிடம் திட்டம் வகுத்துக் கொடுத்து இத்திட்டத்தை 2020- 2026 ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்தவேண்டும். மேலும் 2040-ஆம் ஆண்டிற்குள் நாக்பூரின் கல்வித்திட்டமே இந்தியா முழுவதும் இருக்க வேண்டும் என முடிவுசெய்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.

Advertisment

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் கல்வியமைச்ச ரான தர்மேந்திர பிரதானைச் சந்தித்த அந்தக் குழு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சொல்லியது. உடனடியாக அமைச்சர் தேசிய கல்விக்கொள்கை மூலமாக 30 ஜூலை 2020-ல் புதிய கல்வித் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாகப் பிரித்து நாக்பூரின் யோச னைகளை படிப்படியாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டனர். அதில் 1. இதற்கான பாடத் திட்டங்களை வகுத்தல், 2. அதற்கான ஆசிரியர்களை நியமித்தல், 3. இதை நடைமுறைப் படுத்துதல், மேலும் 10 வருடம் கழித்து மூன்று ஆண்டாக உள்ள இளங்கலை பட்டப்படிப்பை நான்கு ஆண்டாக மாற்றுவது. முதல் வகுப்பிலிருந்து ஆராய்ச்சிப் படிப்புவரை ஒரு மாணவரின் அனைத்துத் தகவலும் உள்ளபடி ஒரு ஆதார் கார்டு போன்ற ஒன்றை உருவாக்குவது என்பதே இவர்களின் திட்டமாக உள்ளது. 

rss1

ஒவ்வொரு பாடத்திட்டங்களிலும் பாரம்பரிய சமஸ்கிருத மையக் கருத்துக்கள், வேதங்கள், ஆயுர்வேதம், ஹோமியோபதி, கோவில் கட்டட கணிதம் என  பலவும் பாடத்திட்டத்தில் புகுத்தப் பட்டுள்ளது. அதில் கணித பாடத்தில்: “கால கணனா” எனப்படும் பரந்த அண்டச்சுழற்சிகளை அளவிடுதல், வானியல் கணக்கீடுகளைப் பயன்படுத்தி படைப்பு மற்றும் அழிவின் சுழற்சித் தன்மையை, யுகங்கள் மற்றும் மகாயுகங்கள்வரை என பிரம்மாவின் ஆயுள்காலம் வரை நீண்டுள்ளதை அளவீடுசெய்து காலத்தைக் கணித்தல். மத அமைப்புகள் தங்களின் நிதிப் பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்து நிர்வகித்து பொறுப்பு களை உறுதிசெய்யும் கணக்கியல் முறையான “சமய கணக் கியல்,’“மண்டல வடி வியல்,’ஆன்மீக தியானம், “ரங்கோலி கோயில் கட்டி டக்கலை”என பலவற்றை யும் கணிதப் பாடத்தில் சேர்த்துள்ளனர். 

அதேபோல வேதி யியலில் ஆயுர்வேதம், யோகா மற்றும் பஞ்சகர்மா போன்ற நுட்பங்கள் மூலம் மனம், உடல், ஆன்மாவை சமநிலைப்படுத்துவதன் மூலம் நோயைத் தடுப்பது, குணப்படுத்துவது, பாரம்பரிய நொதிக்கப்பட்ட பானங்கள், தானியங்கள், பழங்கள், பால் போன்ற பொருட்களை நுண்ணுயிர் நொதித்தல் மூலம் உருவாக்கப்படுவது பற்றி பாடமாக வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து பொருளியலில்: அர்த்தசாஸ்திரம், பகவத்கீதை, இராமாயணம் போதனைகளையும் இடம்பெறச் செய்துள்ளனர். மானுடவியலில்: சரகர்,  சுஷ்ருதர், சித்தர்களைப் பற்றி பாடமாக வைத்துள்ளனர். அரசியல் அறிவியலில்: இந்து வேதங்களின் உபநிடதங்கள், பிரம்மம், ஆத்மா போன்ற பாடத்திட்டங்களையும், சாவர்க்கர் பற்றிய பதிவுகளையும் பாடத்திட்டங்களையும் வைத்துள்ளனர். 

இதனால் திராவிட சிந்தனை, அறிவியல் மனப்பாங்கு, மதச்சார்பின்மை வலுவாக உள்ள மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மாநிலக் கல்விக் கொள்கைகளுக்கு முரண்பாடு கொண்டதாக இவை உள்ளன. தமிழகத்தை மீண்டும் 50 ஆண்டுகளுக்குப் பின்னுக்குக் கொண்டுசெல்லும், இந்த பாடத்திட்டங்களை மாநிலங்கள் ஏற்கமறுத்தால் அம்மாநிலங்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்கு இந்த பாடத்திட்டங்களிலிருந்தே கேள்விகள் கேட்க திட்டங்கள் வைத்துள்ளனர். 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், நீட், கேட் போன்ற அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டுமென்றால் நிச்சயம் இந்தப் பாடத்திட்டத்தைப் படித்தாலே தேர்வாகமுடியும் என்ற வகையில் திட்டமிட்டுள்ள னர். இந்தப் பாடத்திட் டத்துக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அவர்களின் மெஜாரிட்டி யை வைத்து இப்பாடத் திட்டத்தை நடைமுறைப் படுத்த தயாராகிவிட்ட தாகவும் சொல்லப்படுகிறது. 

இதனை எஸ்.எஃப்.ஐ. உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் எதிர்த்து தமிழகத்தில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரிபவன் முன்பாக முற்றுகைப் போராட்டத் தில் ஈடுபட்டனர். யு.ஜி.சி. வரைவு அறிக்கையை தீயிட்டுக் கொளுத்தினர். 

இதுகுறித்து பேசிய எஸ்.எப்.ஐ. மாநிலத் தலைவர் மிருதுளா, "இந்த வரைவு கல்வித் தரத்தை பாதிப்பதோடு, பல்கலைக்கழகங்களின் சுயாட்சியையும் அச்சுறுத்துவதாக உள்ளது. இது பா.ஜ.க. இராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கின் கொள்கைகளைத் திணிக்கும் முயற்சி என்பது வெட்டவெளிச்சமாகிறது. விஞ்ஞானத்தை அழித்து அஞ்ஞானத்தை வளர்க்கும் முயற்சி''’என குற்றம்சாட்டினார்.  

திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறப்பன் இதுகுறித்துக் கூறுகையில், "ஒட்டுமொத்தமாக இந்தியாவையே ஆரிய கோட்பாட்டைக் கொண்டு இயங்கவும் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் சீர்குலைக்கவும், மன்னர் ஆட்சியை நிலை நிறுத்தவுமே மாணவர்களுக்கு இதுபோன்ற கல்வி யைப் புகட்ட ஆயத்தமாகிவருகிறார்கள்'' என்றார். 

-சே 

nkn011025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe