Advertisment

தேவாலயத்தில் காவிக்கொடி! மத்திய பிரதேச பரபரப்பு!

cc

த்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவி லில் பாலராமர் சிலை கண் திறப்பு நிகழ்வை, மிகப் பெரிய அளவிலான நிகழ் வாக ஜனவரி 22ஆம் தேதி, ஒன்றிய அரசும், இந்துத்வா அமைப்பினரும் கொண்டாடி னர். அதையொட்டி நாடு முழுக்க இந்துத்வா அமைப் பினர், அந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாகக் கண்டுகளிப்பது, தீபங்கள் ஏற்றி வழிபடுவது எனப் பலவகையில் பங்கெடுத்தனர்.

Advertisment

இத்தகைய கொண்டாட் டங்களை ஓட்டரசியலை முன்னிட்டு, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் தீவிரமாக ஆதரித்தன. இந்நிலையில், மத்திய பிரதே

த்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவி லில் பாலராமர் சிலை கண் திறப்பு நிகழ்வை, மிகப் பெரிய அளவிலான நிகழ் வாக ஜனவரி 22ஆம் தேதி, ஒன்றிய அரசும், இந்துத்வா அமைப்பினரும் கொண்டாடி னர். அதையொட்டி நாடு முழுக்க இந்துத்வா அமைப் பினர், அந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாகக் கண்டுகளிப்பது, தீபங்கள் ஏற்றி வழிபடுவது எனப் பலவகையில் பங்கெடுத்தனர்.

Advertisment

இத்தகைய கொண்டாட் டங்களை ஓட்டரசியலை முன்னிட்டு, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் தீவிரமாக ஆதரித்தன. இந்நிலையில், மத்திய பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது ஏறிய இந்துத்வா அமைப் பைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் கையிலிருந்த காவிக் கொடியை அதில் ஏற்றிய சம்பவம் குறித்த வீடியோ வைரலாகப் பரவியது.

Advertisment

cc

மத்திய பிரதேசத்திலுள்ள ஜபுவா மாவட்டம் ராணாபூர் அருகிலுள்ள தப்தலை என்ற கிராமத்திலுள்ள தேவாலயத் தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ராமர் கோவில் திறப்புக்கு முந்தைய நாளான ஞாயிறன்று, அந்த தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்துத்வா அமைப்பைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'ஜெய்ஸ்ரீராம்' என்ற கோஷத் துடன் அங்கு வந்தவர்களில் சிலர் தேவாலயத்தினுள் நுழைந்து கோஷமிட, மேலும் சிலர் விறுவிறுவென தேவாலயத்தின் மீது ஏறி, அங்கிருந்த சிலுவை வடிவத்தின்மீது காவிக்கொடி யைக் கட்டி, "ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்டனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்த மதபோதகர் அமலியார், அங்கு வந்த இந்துத்வா இளை ஞர்களில் சிலரை அடையாளம் தெரிந்ததால் அவர்களிடம், "இதுபோல் நீங்கள் செய்வது தவறு. எங்கள் பிரார்த்தனைக்கு இடையூறு செய்யாதீர்கள்." என்று எடுத்துக்கூறியும் அவர்கள் கேட்கவில்லை. காவிக்கொடியை ஏற்றிய வெற்றிக்களிப்போடு கோஷமிட்ட பின்னரே அங் கிருந்து சென்றுள்ளனர். இச் சம்பவம் குறித்து மதபோதகர் அமலியார் கூறுகையில், "இது போல் இதற்கு முன் ஒருபோதும் இவர்கள் நடந்துகொண்ட தில்லை. எனவே அதிர்ச்சியாக இருந்தது. அவர்களின் செயல் குறித்து எடுத்துக்கூறினேன். அப்போதும் கேட்கவில்லை. பின்னர், இங்கு பிரார்த் தனையிலிருந்த அனைவரும் சொன்ன பிறகே தவறை உணர்ந்து திரும்பிச்சென்றனர்'' என்றார்.

காவல்துறை தரப்பிலோ, "தேவாலயம் இருப்பது தனி நபருக்கு சொந்தமான வீடு. இது தேவாலயம் இல்லை. பிரார்த் தனைக்காக அவர் பயன்படுத்தி வருகிறார். எனவே தான் இது தொடர்பாக நாங்கள் வழக்கு பதிவு செய்யவில்லை'' என்றனர். காவல்துறை சொல்வதுபோல் "இது எனது தனி வீடெல்லாம் இல்லை. கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து வழிபாட்டுத் தலமாகத்தான் பயன்படுத்து கிறோம்'' என்று காவல்துறை யின் கருத்தை அமலியார் மறுத் தார். நாடு மதத்தீவிரவாதம் நோக்கி நகர்வது, நாட்டின் அமைதியான வாழ்க்கைச் சூழலுக்கு உகந்ததல்ல.

nkn310124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe