சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு வாங்குவது சூடு பிடித் திருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளை பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சு வார்த்தையும் வேகமெடுத் துள்ளது.
இந்த முறை, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சி களின் சிட்டிங் தொகுதிகளில் சிலவற்றை தி.மு.க.வும், தி.மு.க. வின் சிட்டிங் தொகுதிகளை தோழமைக் கட்சிகளும் எடுத்துக் கொள்ள விரும்புகின்றன. அதனால், சிட்டிங் தொகுதிகளில் பல மாற்றங்கள் இருக்கும் என தி.மு.க. வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங் கிரஸுக்கு-25, ம.தி.மு.க. -வி.சி.க. -சி.பி.ஐ., -சி.பி.எம். ஆகிய கட்சி களுக்கு தலா -6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் கொ.ம.தே. கட்சிக்கு தலா- 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு-2, த.வா.க., அகில இந்திய பார்வர்ட் பிளாக், ஆதி தமிழர் பேரவை ஆகியவைகளுக்கு தலா 1 என சீட்டுகளை பகிர்ந்தளித்தது தி.மு.க.
இந்தமுறை காங்கிரஸ் உள்பட தோழமைக் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.விடம் கூடுதல் சீட்டுகளை எதிர்பார்க்கின்றன. அதேசமயம், தி.மு.க. கூட்டணிக்குப் புதிய வரவாக தே.மு.தி.க. வந்திருப்பதால் டபுள் டிஜிட்டில் சீட்டுகளை எதிர்பார்க்கிறார் பிரேமலதா.
கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கும் சீட் ஒதுக்க வேண்டும்.
அதனால், தோழமைக்கட்சிகளுக்கு கூடுதல் சீட்டுகளை தி.மு.க.வால் கொடுக்க முடியுமா? புதிதாக வந்த தே.மு.தி.க.வுக்கு கணிசமான சீட்டுகளை ஒதுக்கவேண்டியிருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? தே.மு.தி.க.வை காரணம் காட்டி கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்குமா? என்கிற கேள்விகள் தமிழக அரசியலில் பரபரத்துக் கிடக்கின்றன.
கூட்டணிக் கட்சிகளுக்கு எண்ணிக்கையை இறுதிசெய்வது தி.மு.க.வுக்கு ஒரு சவாலாக இருக்கும் அதே நேரம், தொகுதிகளை அடையாளம் காண்பதும் பெரிய சவாலாகவே இருக்கும் என்கிறார்கள் சீனியர் உடன்பிறப்புகள்.
காரணம், கூட்டணிக் கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளின் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று சபரீசனின் பென் அமைப்பும், உளவுத்துறையும் தனித்தனியாக பல சர்வேக்களை எடுத்து முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றன; அதன் ரிசல்ட்டுகளை வைத்து கூட்டணிக் கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளை மாற்றி, வேறு சில தொகுதிகளை ஒதுக்க நினைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து தி.மு.க.வின் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிட்டிங் தொகுதிகளை அதிகம் வைத்திருப்பது காங்கிரஸ் கட்சிதான். அதாவது, கடந்த தேர்தலில் 25 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் 18 தொகுதிகளில் ஜெயித்தது. இதில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவை அடுத்து நடந்த அத்தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது அந்த தொகுதியை தி.மு.க. எடுத்துக் கொண்டது. அதனால் காங்கிரசிடம் தற்போது இருப்பது 17 சிட்டிங் தொகுதிகள். தோழமைக் கட்சிகளில் காங்கிரசிடம்தான் அதிக சிட்டிங் இருப்பதால் கிட்டத்தட்ட 8 தொகுதிகளையாவது மாற்றித்தர வேண்டும் என தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, "காங்கிரஸ் வெற்றிபெற்ற 17 தொகுதிகளில் சென்னை வேளச்சேரி, விருத்தாச்சலம், ஊட்டி, மயிலாடுதுறை அல்லது சோளிங்கர், சிவகாசி, தென்காசி, நாங்குநேரி அல்லது விளவங்கோடு, காரைக்குடி உள்ளிட்ட 8 தொகுதிகளில் மாற்றமிருக்கிறது. தொகுதிகளை மாற்றுவதற்கு பல காரணிகள்
சர்வே ரிப்போர்ட்டுகளில் கொடுக்கப்பட்டி ருக்கின்றன.
அதாவது, காங்கிரஸ் போட்டியிடும் சிட்டிங் தொகுதிகளில் அக்கட்சியை எதிர்த்து அதிக இடங்களில் அ.தி.மு.க.வும் சில தொகுதிகளில் பா.ஜ.க.வும் போட்டியிட திட்டமிட்டுள்ளன. காங்கிரசின் சிட்டிங் தொகுதிகளில் கடும் அதிருப்தியும், எதிர்ப்புகளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களுக்கு இருப்பதால் மீண்டும் அதே தொகுதிகளை ஒதுக்கினால் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி காங்கிரசை வீழ்த்திவிடும். அந்த தோல்வி காங்கிரசை மட்டும் பாதிக்காது. தி.மு.க.வையும் பாதிக்கும். காங்கிரசைப் போலவே கூட்டணியிலுள்ள மற்ற சில கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளிலும் மாற்றம் நடக்கவிருக்கிறது'’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களைப் பற்றி சர்வே எடுத்தது போல, தங்கள் கட்சியின் சிட்டிங் தொகுதிகளையும் சர்வே எடுத்துள்ளது தி.மு.க. நிறைய தொகுதிகளில் அதிருப்திகள் இருப்பது தெரிந்தது. அந்த வகையில், தென் மாவட்டங்களிலுள்ள தி.மு.க.வின் சிட்டிங் தொகுதிகளின் கள நிலவரம் பற்றி கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டுகளில் எதிர்மறை யான பிரச்சனைகள் இருப்பதால், அதைப்பற்றி விசாரிக்குமாறு சபரீசனிடம் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதனடிப்படையில், கடந்த 10 நாட்கள் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் தி.மு.க.வினரிடம் கள ஆய்வு நடத்தியுள்ளார் சபரீசன்.
இந்த கள ஆய்வில், அதிகம் சிக்கியது பாளையங்கோட்டை தொகுதிதான். இந்த தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அப்துல் வஹாப். மீண்டும் சீட் கேட்கிறார். இவரையடுத்து, முன்னாள் அமைச்சர் மைதீன்கானும், அயலக தமிழர் நலவாரியத்தின் உறுப்பினரான துபாய் மீரான் ஆகியோரும் இத்தொகுதியை குறி வைத்துள்ளனர்.
சபரீசனின் விசாரணையில் தொகுதியி லுள்ள தி.மு.க.வினரிடமும் முஸ்லீம் ஜமாத் மக்களிடமும் அப்துல் வஹாப்புக்கு எதிரான அதிருப்தி இருப்பதை உடன்பிறப்புகள் விவரித்திருக்கிறார்கள். இதேபோல மேலும் சில தொகுதிகளிலும் இதேமாதிரியான பிரச்சினைகள் இருக் கின்றன. அதனால் "தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களிடமும் மாற்றம் இருக்கிறது' என்கிறார்கள் தி.மு.க.வின் மேலிடத் தொடர் பாளர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/sabreesan-2026-02-23-16-12-50.jpg)