பெருகிவரும் கள்ளக் காதல் கலாச்சாரத்தால் எப்படிப்பட்ட விபரீதங்கள் ஏற்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பகீர் எடுத்துக்காட்டு.
திருச்சி மாவட்டம் குஜிலியம்பாறை அருகே இருக்கிறது ஆலம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 9ஆம் தேதி இரவு, ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் போனது,
பரபரப்பான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குவாரிக் குட்டையில் வீசப்பட்டி ருந்த உடலை கைப்பற்றினர். கொலையுண்ட நபரின் கை, கால்கள் கட்டப்பட்டு, கொடூரமாகக் கல்லைக் கட்டி குளத்தில் மர்ம நபர்கள் வீசியிருந்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
அப்போதுதான் கொல்லப்பட்டவர் கருங்குளத் தைச் சேர்ந்த 23 வயதே ஆன மணி என்பது தெரியவந் தது. இவர் மாடுபிடி வீரராம். அதனால் அடிக்கடி பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜல்லிக்கட்டுப் போட்டி யில் பங்கேற்பது அவரது வழக்கமாம். எனவே அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மணி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாகச் சென்றது.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த மூக்காயி மற்றும் கரூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, அவரது மகன் பரத்ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்களுக் கும் மணியின் கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னணி குறித்து விசாரித்த போதுதான், அந்தக் கள்ளக்காதல் விவகாரம் வெளியே வந்தது.
நடந்தது குறித்து விசாரணைக் காக்கிகளிடம் கேட்டபோது விவரிக்கத் தொடங்கினர்... "கருங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி மூக்காயி. பாலசுப்பிரமணி, தன் குடும்பத்துடன் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு பிழைப்புக்காக கரூர் மாவட்டத்தில் குடி யேறியுள்ளார். அவர்களுக்கும் கரூரில் வசித்து வரும் பாலு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் பாலசுப்பிரமணி, அந்த பாலுவிடம் கடன் வாங்கி இருக் கிறார். கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்காக பாலசுப் பிரமணி வீட்டுக்கு பாலு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மூக்காயிக்கும், பாலுவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட, அது கள்ளக்காதலாகவும் மாறி இருக்கிறது. இதையறிந்த அதிர்ச்சியான பாலசுப்பிரமணி, மனைவி மூக்காயியைக் கண்டித்துள்ளார். கூடவே குடும்பத்தோடு கருங்குளத்துக்கு குடியேறி இருக்கிறார். இதனால், தான் கொடுத்த பணத்தை பாலசுப்பிரமணி யிடம் இருந்து வசூலிக்கும் பொறுப்பை, தன் நண்பனான ஜல்லிக்கட்டு மணி யிடம் ஒப்ப டைத்திருக்கிறார் பாலு. அப்படி பண வசூலுக்கா கப் போன மணி யோடும், மூக்கா யிக்கு கள்ளக் காதல் ஏற்பட்டி ருக்கிறது. இதை யறிந்த பாலு, தன் கள்ளக்காதலியை அபகரித்துக்கொண்ட மணி மீது கடுங்கோபம் கொண்டார். அதனால் மணியைத் தீர்த்து கட்டும் முடிவிற்கு அவர் வந்திருக்கிறார்.
இந்த நிலையில் மணிக்கு கரூரில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டிய பாலு, அவரை கடந்த 4 ஆம் தேதி கரூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு மூக்காயி கணவர் பாலசுப்பிரமணி, அவரது மகன் பரத் ராஜ், அவர் உறவினர் சுரேஷ் ஆகியோர் காத்திருக்க, அவர்கள் நான்கு பேருமாகச் சேர்ந்து, மணியை ஒரு வேனில் குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தத்தில் உள்ள கொடியரசு என்பவரின் வீட்டிற்குக் கடத்திச் சென் றனர். அங்கு வைத்து மணியை சரமாரியாகத் தாக்கினர். அதில் மயங்கிய மணியை, கை கால்களைக் கட்டி, ஒரு சாக்குமூட்டையில் பேக் செய்து, வேனில் ஏற்றிக்கொண்டு போய், அந்தக் கல்குவாரிக் குட்டையருகே வைத்து, கழுத்தை அறுத்து, வீசி இருக்கிறார்கள். மூக்காயி விரித்த காதல் வலையில் விழுந்த மணி... அநியாயமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்''’என்று அவர்கள் சொல்லி முடித் தபோது நமக்கே வியர்த்தது. இப்போது குற்றவாளிகள் அனைவரும் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
"ஆண்ட்ராய்டு போன்களால் தற்போது கள்ளக் காதல் உள்ளிட்ட சமூகக் குற்றங்கள் பெருகிவருகின்றன. முறையற்ற உறவுகளைப் பற்றவைத்து, சமூகத்தைப் பாழடித்து வருகின்றன. எனவே, ஆண்ட்ராய்டுகளின் டேஞ்சரஸ் குறித்த விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்த வேண்டும்.’என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
எத்தனையோ காளைகளை ஜல்லிக்கட்டில் அடக்கிய மணியை, அவரது சபலமே மரணத்தில் வீழ்த்தி இருக்கிறது.
-துரை.மகேஷ்