ருகின்ற 27-01-2024 அன்று பொள்ளாச்சி, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் நாடாளு மன்றத் தொகுதிக்கான "நிர்வாகிகள் சந்திப்பு' என்றது முரசொலி. அறிவிப்பு வந்தடவுனேயே தனக்கு சீட் கிடைத்துவிட்டதுபோல் தலைகால் புரியாமல் ஆடுகின்றனர் மா.செ.க்கள். "அவர்களுக்கு சீட்டை கொடுத்து தொகுதியை வீணடித்துவிடாதீர்கள்' என கோவை மாவட்ட தி.மு.க.வினர் அறிவாலயத்திற்கு புகார் கடிதம் அனுப்பிய நிலையில், நடிகர் கமலஹாசனோ, கோவை நாடாளுமன்றத் தொகுதியினை குறிவைத்து வாக்கு கேட்க... உறைந்துபோயுள்ளனர் மா.செ.க்கள்.

17 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள கோவை தொகுதியில் இதுவரை தி.மு.க. 2, அ.தி.மு.க. 1, காங்கிரஸ் 5, சி.பி.எம்.3, சி.பி.ஐ. 5, பா.ஜ.க. 2 தடவையும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட இரண்டாவது பாராளுமன்றத் தொகுதி கோவை. கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம் பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் பல்லடம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை பாராளுமன்றத் தொகுதியில் சுமார் 21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வருகின்ற 2024 தேர்தல் தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கிடையேயான மும்முனை போட்டியாக இருக்க வாய்ப்புண்டு. அதுபோக ஆள்கின்ற தி.மு.க.வே போட்டியிட்டால் எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம். இதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் அதிக வெற்றியை பெற்றுள்ளோம் என மா.செ-க்களான மாநகர் மா.செ. நா.கார்த்திக், வடக்கு மா.செ. தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மா.செ.வான தளபதி முருகேசன் ஆகியோர் கணக்கிட்டு வருகின்றனர்.

kamal

"அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதன் விளைவாகத் தான் கோவை மாவட்டத்தில் 97 சதவிகித வெற்றியை பெற்றது தி.மு.க. அவர் சிறைக்கு சென்றநிலையில்... கோவை மாவட்டத்தில் தி.மு.க.வினை பூதக்கண்ணாடி கொண்டு தான் பார்க்க வேண்டும். கோவையைப் பொறுத்தவரை அடுத்த பொறுப்பு அமைச்சராக முத்துசாமியை நியமித்தாலும் அது ஏர்போர்ட் தி.மு.க. என்கின்ற அளவில் தான் இருக்கின்றது. சென்னையிலிருந்து கோவை வருவார். பேட்டி கொடுப்பார்.! புறப்பட்டு செல்வார்! என்கின்ற நிலை அவருக்கு. கட்சிக்காரனின் பிரச்சனையை காது கொடுத்து கேட்பதில்லை. ஏதாவது கூற நினைத்தாலும் மா.செ.கிட்ட கூறு என விலகிக்கொள்வார். மா.செ-க்களோ, தகுதியை வைத்து பதவி வழங்காமல், கொடுப்பது கொடுத்தால் கிடைப்பது கிடைக்கும் என்ற ரீதியில் கட்சிப் பதவிகள் வழங்குகின்றனர். உண்மையாக உழைக்கக்கூடிய தொண்டர்கள், "நமக்கு எதற்கு வம்பு?' என்று ஒதுங்கி உள்ளனர். இங்கு கட்சி என்பதே இல்லை. தன்னுடைய தேவைக்கு மட்டுமே கட்சி என்றால் என்ன செய்வது..? கடந்த இரண்டு ஆண்டுகள் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் எப்போதும் எதிர்கட்சித் தலைவர்கள் போல சண்டை போடும் மண்டல தலைவர்களால் மாநகராட்சிப் பணிகளும் முடங்கிபோயுள்ளது. இதில் ஆண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டில் தன் மனைவியை கவுன்சிலராக்கி மேயர் ஆக்கிவிடலாம் என கனவு கண்ட முன்னாள் எம்.எல்.ஏ.வின் கனவு பலிக்கவில்லை என்பது நாடறிந்தது. எனினும், மாநகராட்சிப் பணிகளின் தொய்வுகளுக்கு அவரும் ஒரு காரணம். இப்படியிருக்க அவருக்கு சீட் கொடுத்தால் யார் ஓட்டு போடுவது..? இதையே கடிதமாக அறிவாலயத்திற்கு அனுப்பி யுள்ளோம்'' என்கின்றனர் மாநகர உடன்பிறப்புக்கள்.

சட்டமன்றத் தேர்தலின் பொழுது கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கி பா.ஜ.க. வேட்பாளரிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற மக்கள் நீதி மய்யத்தின் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க ஆரம்பித்துவிட்டார் எனலாம். கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு செல்லும் தானியங்கி அழைப்பு, "கமலஹாசன் போட்டியிட்டால் அவருக்கு உங்களது வாக்கினை செலுத்துவீர்களா..? ஆம் எனில் பதிலளிக்கவும். இல்லை எனினும் பதில் அளிக்கவும். போட்டியிட்டால் யோசிப்பீர்களா?' என கேள்விகளை முன்வைக்கின்றது. இதன்மூலம் கூட்டணிப் பேச்சு வார்த்தையின் போது கோவை தொகுதியில் என்னை இத்தனை வாக்காளர்கள் ஆதரிக்கிறார்கள் என நடிகர் கமல் தனது வாதத்தினை பதிவு செய்யலாம் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

கட்சியோடு இணக்கமாக இருக்கின்றார் கமலஹாசன் என்பதனையறிந்த கோவை தி.மு.க.வினர், "கூட்டணி என்றால் கமலுக்கு எஸ்' என அவரை முன்னிறுத்துகின்றனர். உடன்பிறப்பு ஒருவரோ, "கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க. அலை வீசிய போதும் கோவை மாவட்டத்தில் மட்டும் எந்த புயலும் வீசவில்லை. 10 தொகுதிகளிலும் படு தோல்வி? சரி....! புதிதாக மா.செ.க்களை நியமித்தால் அவர்களில் ஒருவர்கூட மக்களுடன் நேரில் சென்று அரசின் சாதனைகளை கூறுவதாக தெரியவில்லை. மாநகர மா.செவைக்கூட கட்சி போஸ்டரில் பார்த்துவிட லாம். ஏனெனில் போஸ்டரில் மட்டுமே அரசியல் செய்கின்றார். மற்றைய இரண்டு மாவட்ட செயலாளர் யார் என்று கட்சியினருக்கு இன்றுவரை சரிவர அடையாளம் தெரியுமா என்பது கூட கேள்விக்குறிதான்! கட்சியின் பெயர் சொல்லும் விதத்தில் எவ்வித செயலை யும் செய்ததில்லை இவர்கள். மாவட்டத் தில் அ.தி.மு.க.விற்கு இணையாக பா.ஜ.க. போட்டிபோடும் நேரத்தில் நாம் ஏன் களத்திற்கு செல்லணும்? மக்களை சந்திக்கனும்.? நினைப்பு இவர்களுக்கு.. அதை விடுத்து கோவை மாவட்ட மா.செ.களுக்கு சீட் வழங்கப்படும் நிலையில் தி.மு.க.வின் வெற்றி என்பது கானல் நீர்தான். அதனையும் தாண்டி தி.மு.க.தான் இங்கு போட்டியிட வேண்டுமென்றால் ஒரு நட்சத்திர வேட்பாளர் அல்லது கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள் இவர்கள் வேட்பாளராக அடை யாளம் காட்டப்பட்டால் மட் டுமே வெற்றியை நெருங்கலாம். அதுவும் கோவையைப் பொறுத்தவரை தி.மு.க. மூன்றா மிடம்தான்'' என்கிறார் அவர்.

சமீபத்தில் நடந்து முடிந்த சேலம் இளைஞரணி மாநாட்டிற்குச் செல்லவேண் டும். பொறுப்பிலுள்ளவர்கள் இன்னார் இவ்வளவு கொடுத்துவிட வேண்டும் என்பதனை கணக்கிட் டுள்ளனர் மா.செ.க்கள். அதனையும் தாண்டி மாநாட்டிற்கு இத்தனை பேருந்துகள், இத்தனை தொண்டர்கள் வரு வார்கள் என நம்பமுடி யாத எண்ணிக்கை அளவில் கணக் கினைக் கூறி தலைமையிடம் சபாஷ் வாங்கி யுள்ளது மா.செ.க் கள் டீம். ஆனால் 50 நபர்கள் செல்லக்கூடிய ஒரு பேருந்தில் 10 அல்லது 15 நபர் களே சென்று, பேருந்தை மட்டும் கணக்கு காண்பித்த குட்டு தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. இதனைக் கண்டறிய கோவை -சேலம் நெடுஞ் சாலையிலுள்ள கரு மத்தம்பட்டி டோல்கேட் டில் பேருந்தை நிறுத்தி கணக்கிட்டுள்ளது அமைச் சர் உதயநிதியின் டீம் என்பது குறிப்பிடத்தக்கது.

"சமீபத்தில் நடத்திய 74வது வட்ட கழகம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில், விழாவிற்கு ஸ்பான்சர் செய்தவர் சிறப்பு அழைப்பாளராக அழைக் கப்பட்டார்.

தனியார் நிறுவன முதலாளியான அவர் உற்சாக வெள்ளத்தில், "அனைத்திற்கும் காரணம் இந்த வட்டச் செயலாளர் தான். அவர் இல்லையேல் கட்சி இல்லை'' என பொங்கல் விழா விற்கு வந்த கட்சியினர் எகிற... அடக்கி வாசிக்கப்பட்டது.

அந்தளவிற்கு மாவட்டத் தினைப் பொறுத்தவரை தனிமனித துதியே பிரதானம். கட்சியை தேட வேண்டும். துவக்கத்தில் தெருமுனை பிரச்சாரம், அரசின் சாதனைகளை நாடகம் வாயிலாக எடுத்துரைத்த பூங்குயில் பாபு, ஜி.டி.இராஜேந் திரன் போன்ற கழக உணர்வாளர்கள் காணாமல் போய்விட்டனர். அப்படியிருக்க கட்சி இங்கு நின் றால் வெற்றி என்பது கேள்விக் குறிதான். முதலில் கட்சியை இங்கு கட்டமையுங்கள். அதன் பின் தேர்தலில் நேரடியாக இறங்குங்கள். யாராலும் தி.மு.க.வினை வீழ்த்தமுடியாது'' என்கிறார் கட்சியின் மூத்த முன்னோடி ஒருவர்.

Advertisment