"யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்பது பழமொழி. என்னதான் ரஷ்யா வீழ்ச்சியில் இருந்தாலும், அது வல்லரசு. அமெரிக்க தேர்தலில் அதிபரை மறைமுகமாகத் தீர்மானிக்கக்கூடிய வல்லமை உண்டு. உக்ரைனுடனான போர் விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரத் தடைகளை விதித்ததையும், வங்கிக் கணக்குகளை முடக்கியதை யும் ரஷ்யா கூர்மையாகக் கவனித்துக்கொண்டு இருந்தது.
நீங்கள் வாயில் அடித்தால் நான் வயிற்றில் அடிக்கமாட்டேனா என ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் எரிவாயு விநியோகத்தை 40 சதவிகிதமாகச் சுருக்கியது ரஷ்யாவின் கேஸ்ப்ராம் நிறுவனம். ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள் விநியோகத் தில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் ரஷ்யாவை நம்பியே இருக்கிறது என்பதை இங்கு நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
தேவைகளைச் சுருக்கியும், பிற நாடுகளிட மிருந்து எரிபொருள் வாங்கியும் ஐரோப்பிய நாடுகள் ஒருவாறாகச் சமாளித்து நிமிர்ந்த நிலையில் ரஷ்யா அடுத்த அடியை இறக்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகம் நார்ட் ஸ்ட்ரீம் 1, நார்ட் ஸ்ட்ரீம் 2 எனும் எரிவாயுக் குழாய் இணைப்புகள் வழியாகத்தான் நடைபெறுகிறது. இதில் நார்த் ஸ்ட்ரீம் 1 வழியாகத்தான் ஐரோப்பிய நாடுகளுக்கான பெரும்பகுதி எரிவாயு செல்கிறது. அதில் பழுது ஏற்பட்டுள்ள தாகக் கூறி, எரிவாயு விநியோகத்தை 20 சதவிகிதமாகக் குறைத்துள்ளது ரஷ்யா.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயுவின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ரஷ்ய எரிவாயுவை நம்பியிருக்கும் ஜெர்மனியின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கியுள்ள நிலையில் அதன் எரிவாயு நுகர்வு இனிதான் அதிகரிக்கும். ரஷ்யா முற்றிலுமாக எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால் ஐரோப் பிய நாடுகளின் பணவீக்கம் தாறு மாறாக அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
தவிரவும், இது வெறும் தொழில்நுட்பச் சிக்கல் அல்ல என்பதை கேஸ்ப்ராம் தலைமைச் செயல் அலுவலரான அலெக்ஸி மில்லரின் கருத்தும் உறுதிப்படுத்தியுள்ளது. "எங்களுடைய தயாரிப்பை எங்களுடைய விதிகளின்படிதான் வழங்க முடியும். யாரோ உருவாக்கிய விதிகளுக்கு ஏற்ப ஆட முடியாது''’என கருத்துத் தெரிவித் திருக்கிறார்.
இப்போதே ஜெர்மனியில், எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்டவை விலை எகிறியுள்ளன. சுற்றியுள்ள ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளும் முனகத் தொடங்கியுள்ளன. குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, ரஷ்யா முழுமை யாக எரிவாயுவை நிறுத்தினால் என்ன செய்வ தென்ற அச்சத்தில் நடுங்க ஆரம்பித்துள்ளன.
சதுரங்கத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது. எந்தக் காயை நகர்த்தி அமெரிக்கா ஆட்டத்தை தன் வசம் கொண்டுவரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியலில் எழுந்துள்ளது.