Advertisment

ஓடியது ஜெம்! வருகிறது இன்னொரு பூதம்! -நெடுவாசல் நிஜ நிலவரம்

neduvasal

ராண்டுக்கு மேலான போராட்டம். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் திட் டத்தை உறுதியாக எதிர்த்து நிற்க... தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு துணை நின்றனர். இரட்டை வேடம் போட்ட மத்திய-மாநில அரசுகளின் பிரதி நிதியாக போராட்டக் களத்திற்கு வந்த ஆட்சியர் கணேஷும் அப்போதைய எஸ்.பி. லோகநாதனும் "போராடியவர்கள் மீது வழக்குப் போடமாட்டோம்' என்று உறுதியளித்தனர். ஆனால் ஆழ் குழாய்க் கிணறுகளை அகற்றவில்லை; மாறாக ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடியதாக கீரமங்கலத்தில் 7, வடகாடு 9, நல்லாண்டார்கொல்லை 4, ஆலங்குடியில் 42 என்று 62 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்திற்கு இழுத்துள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த வாரம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்துள்ள ஜெம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹரிகிருஷ் ணன்... ""திட்டத்தை செயல்படுத்த நில குத்தகையை எங்கள் நிறுவனப் பெயருக்கு மாற்றித்தரக் கேட்டு தமிழ் நாடு அரசுக்கு 10 முற

ராண்டுக்கு மேலான போராட்டம். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் திட் டத்தை உறுதியாக எதிர்த்து நிற்க... தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு துணை நின்றனர். இரட்டை வேடம் போட்ட மத்திய-மாநில அரசுகளின் பிரதி நிதியாக போராட்டக் களத்திற்கு வந்த ஆட்சியர் கணேஷும் அப்போதைய எஸ்.பி. லோகநாதனும் "போராடியவர்கள் மீது வழக்குப் போடமாட்டோம்' என்று உறுதியளித்தனர். ஆனால் ஆழ் குழாய்க் கிணறுகளை அகற்றவில்லை; மாறாக ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடியதாக கீரமங்கலத்தில் 7, வடகாடு 9, நல்லாண்டார்கொல்லை 4, ஆலங்குடியில் 42 என்று 62 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்திற்கு இழுத்துள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த வாரம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்துள்ள ஜெம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹரிகிருஷ் ணன்... ""திட்டத்தை செயல்படுத்த நில குத்தகையை எங்கள் நிறுவனப் பெயருக்கு மாற்றித்தரக் கேட்டு தமிழ் நாடு அரசுக்கு 10 முறையும், மத்திய அரசுக்கு 3 முறையும் கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை. நாங்கள் லாப நோக்கம் கொண்ட வியாபாரிகள். காலம் கடப்பதால் இழப்பு ஏற்படுகிறது. அதனால் எங்களுக்கு நெடுவாசல் வேண் டாம் வேறு இடம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

Advertisment

neduvasal

இந்தத் தகவல் வெளிவந்த நாளில் நெடுவாசலில் திரண்ட விவசாயிகள் பட்டாசு வெடித்து "முதல் சிறு வெற்றி கிடைத்துவிட்டது' என்று மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் நில உரிமையாளர் சுப்பிரமணியனோ... ""நான் இன்னும் யாருக்கும் குத்தகை எழுதிக் கொடுக்கவே இல்லை. அதையும் மீறி யார் வந்தாலும் என்ன நடக்கும்னு தெரியாது. என் உயிர் போனாலும் உயிர் போறதுக்குள்ள எதையாவது செஞ்சுட்டுத்தான் போகும்'' என்றார்.

Advertisment

கடந்த 13-ந் தேதி நெடுவாசல் போராட்டக்குழு தலைவர் மாஜி ச.ம.உ. புஷ்பராஜ் தலைமையில் ஆலங்குடி எம்.எல்.எ மெய்யநாதன் உள்பட 10 பேர் கொண்ட குழு வினர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் கணேஷ்... ""ஓ.என்.ஜி.சி. கிணறுகளை அகற்ற நிறைய செலவாகும், மேலும் நில குத்தகை வாங்கிக் கொண்டு இருப்பதால் ஆழ்குழாய்க் கிணறுகளை அகற்றுவது கடினம்'' என்றார். இதனால் அப்செட்டாகி வந்துவிட்ட போராட்டக் குழுவினர் அடுத்தகட்ட போராட்டம் பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மற்றொரு ரகசிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. அதாவது ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ள நிலத்திற்கு வடகிழக்கு பகுதியில் உள்ள neduvasalபகுதி முடுக்குவயல். அந்த பகுதியில் ஒரு விவசாயி மற்றொரு விவசாயியிடம் வாங்கிய நிலத்தை பத்திரம் பதிவு செய்ய கீரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றபோது... "அந்த இடம் ரயில்வே ட்ராக் என்று காட்டுகிறது, அதனால் ரயில்வே துறையில் தடையில்லா சான்று வாங்க வேண்டும்' என்று அனுப்பி உள்ளனர். ஆனால் கிராமக் கணக்கில் அப்படி எந்த ரயில்வே டிராக்கும் இல்லை. அதாவது ஹைட்ரோ கார்பன் பிளான்ட் அமைக்கப்பட்டால் அதனை கொண்டு செல்ல ஒரத்தநாட்டில் புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி ரகசியமாக நிலம் தேர்வு செய்துள்ளதோ என்கிற சந்தேகம் கிளம்பியுள்ளது. (தஞ்சை டூ பட்டுக் கோட்டைக்கு 1947-க்கு முன்பே ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு செயல் படுத்தப்படாமல் உள்ளது. இப்போது நெடுவாசலில் இருந்து ஒரத்தநாட்டில் இணைத்து பட்டுக்கோட்டை -தஞ்சை பாதையையும் செயல்படுத்த திட்டம் என்று பார்க்கப்படுகிறது. அதிலும் ஒரத்தநாடு தொகுதியில் சுமார் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு திட்டமிட்டுள்ள கிராமங்கள் வழியாகவே இந்த தடம் அமைய உள்ளதாக தகவல்)

போராட்டக்குழு தங்க.கண்ணன்... ""இதுவரை எங்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அதனால்தான் ஜெம் நிறுவனம் திரும்பி ஓடுகிறது. அதேபோல மத்திய அரசும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மாநில அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். ஆனால் பாதுகாப்போடு ஜெம் நிறுவனத்தையோ வேறு நிறுவனத்தையோ மத்திய அரசு அழைத்துக்கொண்டு வரலாம். எப்படி வந்தாலும் ஊருக்குள் நுழைய முடியாது. எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவேண்டும். திட்டத்தை கைவிட வேண்டும்.

ஆற்றுல மணலை அள்ளிட்டா ஆத்துல எங்கே தண்ணி ஊறும்? இந்த நிலையில் ஆற்றுப் படுகையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீரை எடுத்து அதை ஆற்றில் விட்டு, தண்ணீர் ஓடுவதுபோல காட்டுவதற்கு முதல்வர் எடப்பாடியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ரகசியமாக சொல்லியிருக்கிறாராம்'' என்றார்.

தெட்சிணாமூர்த்தி... ""ஜெம் நிறுவனம் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் மத்திய- மாநில அரசுகள் எந்த பதிலையும் சொல்லாமல் இருப்பதுதான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. தற்போது போராடும் மக்களை மிரட்டும்விதமாக வழக்குகளை போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்.

விவசாயிகளையும் அவர்களின் பிள்ளைகளையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கூலிக்கு வேலை செய்யும் அவல நிலைக்குத் தள்ளத்தான் இந்த பேரவல ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு துணிந்துவிட்டது'' என்றார் காட்டமாக.

-இரா.பகத்சிங்

neduvasal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe