வதந்திகளை நொறுக்கும் ஸ்ரீமதியின் பெற்றோர்! -பள்ளி நிர்வாகம் மீது பகீர் புகார்!

aa

மீப காலத்தில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைப் போல தமிழக மக்களை உலுக்கிய விஷயம் வேறெதுவும் இல்லை. மகள் இறந்த துக்கத்தைவிடவும், அவள் சாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கமே ஸ்ரீமதியின் பெற்றோரைப் பிடித்தாட்டுகிறது. ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான கேள்விகளுடன் அவர்களை நேரில் சந்தித்தோம்.

srimathi parents

நக்கீரன்: ஸ்ரீமதிக்கு தமிழ் எந்த அளவுக்குத் தெரியும்?

செல்வி, ராமலிங்கம்: ஸ்ரீமதி நல்லா தமிழில் பேசுவார், எழுதுவார். 11-ஆம் வகுப்பில் அவர் தமிழ்ப் பாடத்தில் 93 மதிப்பெண் பெற்றவர். அவர் தமிழை ஆங்கிலத்தில் எழுதி நான் பார்த்ததில்லை. முதல்முறையாக அந்த மர்ம கடிதத்தில்தான் தமிழை, ஆங்கிலத்தில் எழுதியுள்ளதைப் பார்க்கிறேன்.

ஸ்ரீமதி எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தை எப்போது பார்த்தீர்கள்?

செல்வி: 13-ஆம் தேதி மாலை 4 மணி இருக்கும். போனில் காட்டினார் கள். அதைப் பார்த்த உடனேயே அது ஸ்ரீமதி கையெழுத்து இல்லை என தெரிய வந்தது. அவளின் கையெ ழுத்து எனக்கு நன்றாகத் தெரியும். (ஸ்ரீமதி எழுதிய நோட்டைக் காண்பிக்கிறார்)

அந்தக் கடிதத்தில் கணிதம், வேதியியல் ஆசிரியர்கள் என இரண்டு ஆசிரியர்களைப் பற்றி சொல்லுகிறார்கள். அந்த ஆசிரியர்களைப் பற்றி என்றைக் காவது உங்களிடம் புகார் சொல்லியிருக்கிறாளா?

செல்வி: கணித ஆசிரியர் மாணவர்களுக்குத்தான் வகுப்பு எடுப்பார். ஆனால் விடுதி வார்டனாகவும் இருக்கிறார். ஸ்ரீமதி விடுதிக்கும் அவர்தான் வார்டன். வேதியியல் ஆசிரியர் கிளாஸ் மிஸ். ஸ்ரீமதி அந்த மாதிரி எந்த புகாரும் சொன்னதில்லை.

மாணவிக்கு வேறொரு பள்ளியில் கட்டணம் கட்டியதால், எங்கள் பள்ளியில் கட்டவில்லை. அதற்கு கால அவகாசம் தருகிறோம் என ப

மீப காலத்தில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைப் போல தமிழக மக்களை உலுக்கிய விஷயம் வேறெதுவும் இல்லை. மகள் இறந்த துக்கத்தைவிடவும், அவள் சாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கமே ஸ்ரீமதியின் பெற்றோரைப் பிடித்தாட்டுகிறது. ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான கேள்விகளுடன் அவர்களை நேரில் சந்தித்தோம்.

srimathi parents

நக்கீரன்: ஸ்ரீமதிக்கு தமிழ் எந்த அளவுக்குத் தெரியும்?

செல்வி, ராமலிங்கம்: ஸ்ரீமதி நல்லா தமிழில் பேசுவார், எழுதுவார். 11-ஆம் வகுப்பில் அவர் தமிழ்ப் பாடத்தில் 93 மதிப்பெண் பெற்றவர். அவர் தமிழை ஆங்கிலத்தில் எழுதி நான் பார்த்ததில்லை. முதல்முறையாக அந்த மர்ம கடிதத்தில்தான் தமிழை, ஆங்கிலத்தில் எழுதியுள்ளதைப் பார்க்கிறேன்.

ஸ்ரீமதி எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தை எப்போது பார்த்தீர்கள்?

செல்வி: 13-ஆம் தேதி மாலை 4 மணி இருக்கும். போனில் காட்டினார் கள். அதைப் பார்த்த உடனேயே அது ஸ்ரீமதி கையெழுத்து இல்லை என தெரிய வந்தது. அவளின் கையெ ழுத்து எனக்கு நன்றாகத் தெரியும். (ஸ்ரீமதி எழுதிய நோட்டைக் காண்பிக்கிறார்)

அந்தக் கடிதத்தில் கணிதம், வேதியியல் ஆசிரியர்கள் என இரண்டு ஆசிரியர்களைப் பற்றி சொல்லுகிறார்கள். அந்த ஆசிரியர்களைப் பற்றி என்றைக் காவது உங்களிடம் புகார் சொல்லியிருக்கிறாளா?

செல்வி: கணித ஆசிரியர் மாணவர்களுக்குத்தான் வகுப்பு எடுப்பார். ஆனால் விடுதி வார்டனாகவும் இருக்கிறார். ஸ்ரீமதி விடுதிக்கும் அவர்தான் வார்டன். வேதியியல் ஆசிரியர் கிளாஸ் மிஸ். ஸ்ரீமதி அந்த மாதிரி எந்த புகாரும் சொன்னதில்லை.

மாணவிக்கு வேறொரு பள்ளியில் கட்டணம் கட்டியதால், எங்கள் பள்ளியில் கட்டவில்லை. அதற்கு கால அவகாசம் தருகிறோம் என பள்ளிச் செயலாளர் சாந்தி கூறியிருந்தார். ஆனால் கடிதத்தில் பள்ளிக் கட்டணத்தை அப்பா, அம்மாவிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்லப்பட்டிருந்ததாக சொல்லுகிறார்கள். இது முரண்படுகிறதே...

srimathi parents

செல்வி: இது பொய் சார். சாரி அம்மா, சாரி அப்பா என எழுதப்பட்டிருக்கிறபோது, சாரி தம்பி என எழுதாமல், சாரி சந்தோஷ் என ஏன் எழுதணும். அந்தப் பள்ளியிலேயே படிப்பதனால் தம்பியின் பெயர் சந்தோஷ் என தெரிந்திருக்கிறது. அம்மா, அப்பா, தம்பி என வந்திருக்கவேண்டும். இதிலே எங்களுக்கு சந்தேகம் வந்தது. அதுவும் இங்கிலீஷில் தமிழ் எழுதியிருந்ததும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. கையெழுத்தில் சந்தேகம். இன்னொன்று கடிதம் முழுவதும் ரெட் இங்க்கால் எழுதப்பட்டிருக்கிறது. நான் ரெட் இங்க் பேனா வாங்கிக் கொடுக்கவில்லை.

அருகிலுள்ள சத்திய சாய் என்ற பள்ளியில் நாங்கள் எங்கள் இரண்டு குழந்தைகளையும் சேர்த்துவிட்டோம். 10 நாள் அந்தப் பள்ளிக்கு ஸ்ரீமதி சென்றாள். அந்த மேடம் (சாந்தி) நான்கு நாள் போன் பண்ணி, சக்தி பள்ளியிலேயே சேர்த்துடுங்கள் என்று கட்டாயப்படுத்தினார். நான், என் கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னேன். நான் அந்தப் பள்ளியில் பீஸ் கட்டி, புக், யூனிபார்ம் தைக்க கொடுத்துவிட்டோம் என்றோம். அதற்கு, அங்கு கட்டிய கட்டண ரசீதுடன் வாங்க, நாங்க இங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். நீங்க மீதி கட்டினால் போதும். நீங்க அந்த ஸ்கூல்ல கட்டிய கட்டணத்தை கேட்கவே வேண்டாம் என்றார்.

புதிதா முழு பீஸ் கட்டியாகணும் என சக்தி ஸ்கூல் சொல்லியிருந்தால் என் பெண்ணே ஆசைப்பட்டிருந்தாலும் நான் சேர்த்திருக்க மாட்டேன். சத்திய சாய் பள்ளியில் இருவருக்கும் ரூ. 51,600 கட்டியிருந்தோம். அந்த ரசீதைத்தான் கொடுத்தோம். மீதிக் கட்டணத்தை கட்டிவிடு கிறோம் என்றோம். கட்டணமே கட்டவில்லை என்று எப்படி சொல்லலாம். சத்திய சாய் பள்ளியில் கட்டணமே இல்லாமல் சேர்த்துக்கொள்வார்களா... இங்கும் மீதித் தொகையை இரண்டு தவணையில் கட்டலாம் என்றுதானே சொன்னார்கள்.

srimathi parents

ஏன் சக்தி பள்ளியில் சேர்த்தீர்கள். அப்படி என்ன அந்தப் பள்ளியில் இருக்கிறது...

செல்வி, ராமலிங்கம்: 6-ஆம் வகுப்பில் இருந்து அங்கே படிப்பதால் அங்கேயே படிக்கட் டும் என இருந்தோம். ஸ்கூல் பஸ் ஊருக்குள் வராமல் மெயின் ரோட்டில் செல்கிறது. ஸ்பெஷல் பஸ்ஸும் 6 அல்லது 7 பேர் இருந்தால்தான் ஊருக்குள் வரும். காலையிலும், மாலையிலும் போய் அழைச்சிட்டு வரணும். அதனால்தான் நாங்கள் பள்ளியை மாற்றினோம். இந்தப் பள்ளிக்கு (சத்திய சாய்) 10, 20 நிமிடத்தில் போய்விடலாம்.

ஸ்ரீமதிக்கு நீட் தேர்வு எழுதணும், டாக்டர் ஆகணும் என கனவு இருந்ததாக சொல் கிறார்களே..

ராமலிங்கம்: டாக்டர் ஆகணும், இல்லன்னா… ஐ.ஐ.டி.யில் படித்து பெரிய போஸ்ட்டில் இருக்கிற மாதிரி ஆகணும் என்ற கனவு இருந்தது. 560 மார்க் மேலே எடுக்கிறேன். அப்பா, நீங்க என்ன சொல்றீங்களோ அதைப் படிக்கிறேன்னு சொன்னாள்.

பிரேதப் பரிசோதனையில் படக்கூடாத இடத்திலெல்லாம் அடிபட்டுள்ளது என்ற தகவலை எப்படி பார்க்கிறீர்கள்...

ராமலிங்கம்: தலையின் பின்பக்கம் நான் பார்க்கவில்லை. ஆனால் காயம் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் முடியில் இரத்தம் மின்னுவதுபோல் கலர் தெரிந்தது. வலது பக்க கையில் உரசல்போல் இருந்தது. மார்பகத்தில் காயம் என்றார்கள். அதனை பார்க்க எனக்கு ஒரு மாதிரியா இருந்தது. மூக்கில் காயம்.

என் பொண்ணு மாதிரி பார்க்கிறேன். என்னால தகவல் சொல்ல முடியல. போலீஸ் தடுத்துட்டாங்கன்னு சொல்றாங்களே சாந்தி?

ராமலிங்கம்: அவர்கள்தான் போலீஸை வரவழைத்தார்கள். அவர்களை எப்படி போலீஸ் தடுப்பார்கள்.

செல்வி: குழந்தையை ஒப்படைத்த பெற்றோ ரிடம் நடந்ததை சொல்லக்கூடிய கடமை இருக்கிறதா? இல்லையா? முதல் நாள் பதட்டமாக இருந்திருப் பார்கள் என்று அடுத்த நாள் 14-ஆம் தேதி போன் போட்டேன். சாந்தி மேடமும் எடுக்கவில்லை. வார்டனும் எடுக்கவில்லை. நேர்லகூட போலீஸ் தடுக்கலாம். போன் பண்ணிச் சொல்லியிருக்கலாமே. நான்கு நாள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

உங்க பொண்ணுக்கு இந்த மாதிரி ஆயிடுச்சின்னு போன் பண்ணி சொல்றப்ப, நான் அழுத்தம் திருத்தமாக சொன்னேன், என் பொண்ணோட அங்கேயே இருங்கன்னு. அங்க போனால் என் பொண்ணே இல்ல. பிண அறையில் இருக்கிறாள். identify பண்ணாமல் போட்டுருக்காங்க சார்.

identifyயே பண்ணவில்லையா... அதெப்படி அடையாளம் காணாத உடலாக போடமுடியும்.

செல்வி: என் பொண்ணு என்ன அனாதையா? அதைத்தான் சார் நானும் இவ்வளவு நாளா கேட் கிறேன். காலையில் 6.20-க்கு தகவல் சொல் கிறார்கள். 7.20க்கெல்லாம் வந்துவிடப்போகிறோம். ஒரு மணி நேத்திற்குள்ளாகவா அம்மாவிடம் காட் டாமல் பிண அறையில் போடுவார்கள்? கழுத்தில் போட்ட ஒரு பவுன் செயின், காதில் போட்டி யிருந்த கால் பவுன் தோடு இதுவரை வரவில்லை.

அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ஏதோ தகராறு. அதைக் கண்டுபிடித்தால் எல்லா உண்மையும் தெரியும் என சாந்தி சொல்கிறாரே...

செல்வி: நான்தான் திருடன் என குற்றவாளி ஒத்துக்கொள்வானா. வீட்டிலேயே ஒரு பொண்ணு தற்கொலை செய்துகொண்டால், பெற்றோரையே ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள். உன் நிர்வாகத் தில் என் குழந்தை உயிர் போயிருக்கிறது. பதில் சொன் னால் வேலை முடிந்துவிடும். ஒரு மணி நேரத்து வேலை. நாங்கள் எங்கள் போனைத் தருகிறோம். 12-ஆம் தேதியே கொன்றுவிட்டு யார் யாருக்கெல் லாம் பேசியிருப்பார்கள். அவர்கள் போனிலிருந்து போன அழைப்புகள் சரிபார்க்கப்படுமா?

அம்மாவுக்கும் பொண்ணுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள். மேலும் காதல் விவகாரம் எனச் சொல்லுகிறார்கள்...

செல்வி: என் பொண்ணு இதுவரைக்கும் காதல் பண்ணல சார். அது திசைதிருப்பும் வேலை. அப்படியே லவ் பண்ணியிருந்தால்கூட, இந்த சம்பவம் திட்டமிட்ட கொலைதான்.

இந்தக் கொலைக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ராமலிங்கம்: அங்க பார்ட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த பார்ட்டியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். எங்க மகள் சரிந்து விழுந்ததில்கூட போதைப் பொருள் கலந்திருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. அவர்கள் (தாளாளர்) பசங்க சரியில்லாதவர்கள் எனச் சொல்கிறார்கள்.

இப்ப அவர்கள் இங்கு இல்லை என்கிறார்களே..

ராமலிங்கம்: அவர்கள் ஏன் வெளிநாடு போகிறார்கள்.

தாளாளர் தம்பி என ஒருவரை சொல்கிறார்கள்.

ராமலிங்கம்: அவரும் வெளிநாடு கிளம்பிவிட்டார் என்கிறார்கள். ரவிக்குமார் ஏன் டெல்லி சென்றார்? அரசு அதிகாரிகள், கலெக்டர், போலீஸ் இருக்கும்போது இவர் ஏன் டெல்லி சென்றார்?

செல்வி: என் பொண்ணு மீது தவறு இருந்தால் இவர்கள் ஏன் சார் கைதாகிறார்கள்? 5 மணிக்கு பார்த்ததா சொல்வதே பொய். இது திட்டமிட்ட கொலைதான். ஆதாரம் பூராவும் பள்ளியிடம்தான் இருக்கிறது. எல்லா சி.சி.டி.வி. பதிவையும் வெளியே விடுங்க.

-நேர்காணல்: தாமோதரன் பிரகாஷ்

தொகுப்பு: வே.ராஜவேல்

படங்கள்: நவீன், அஜீத்

nkn300722
இதையும் படியுங்கள்
Subscribe