தன்னார்வலர்களோ, அரசியல்கட்சியை சேர்ந்தவர்களோ மக்களுக்கு உதவி செய்யக்கூடாது. எதுவாக இருந்தாலும் தமிழக அரசின் மூலம்தான் நடைபெற வேண்டும். நிதியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என அறி விக்கப்பட்டுள்ளது. காரணம், அரசியல்தான்.
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சருமான சீனிவாசன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார். அத்தியாவசியப் பொருட்களுக்கு கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் கவனிக்கிறார். எனினும், ஆளுங்கட்சியின் அமைச்சரிடம் மக்கள் எதிர்பார்க்கும் வேகம் அவரிடம் இல்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/coronafight.jpg)
நிலக்கோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழியோ மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாவதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள மகள் வீட்டிலேயே டெண்ட் அடித்துவிட்டார். வேடசந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவமும் கூட மாவட்டம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் அவ்வப்போது கலந்து கொண்டுவிட்டு திண்டுக்கல் வீட்டில் முடங்கி விடுகிறார் என்கிறார்கள் கட்சிக் காரர்களே. முதல்வர் எடப்பாடி சொல்வதுபோல் விழித்திரு விலகிஇரு வீட்டில் இரு என்ற நடை முறையை கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஆத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தனது இரண்டு யூனியனில் உள்ள 46 பஞ்சாயத்துத் தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து கிருமிநாசினி, முகக்கவசம். சோப்பு, கையுறை போன்ற கொரோனா தடுப்பு உபகரணங்களை தனது சொந்தப் பணம் 30 லட்சத்திற்கு வாங்கி அந்தந்த பகுதிகளுக்கு சென்று வழங்கிவருகிறார். திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வினரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற் கொண்டுள்ளனர். தி.மு.க.வின் உள்ளாட்சி பிரதிநிதிகளையும் பொறுப்பி லுள்ள உ.பி.களையும் களத்தில் இறங்கி வேலை செய்யும்படி செய்திருக்கிறார். அவரும் தனது தொகுதியில் வலம் வருகிறார்.
அதுபோல் ஒட்டன்சத்திரம் திமுக சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற திமுகவின் கொறடாவுமான சக்கரபாணி தனது தொகுதியில் உள்ள 20 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விசிட் அடித்து தேவையான கொரோனா ஒழிப்பு உபகரணங்களை வாங்கி கொடுத்தார். அதுமட்டுமின்றி, ஒட்டன்சத்திரத்தில் கொரோ னாவால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள சில வார்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்று எஸ்.பி.யை சந்தித்து வலியுறுத்தியதுடன் மட்டுமல்லாமல் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்துள்ளார்..
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/coronafight1.jpg)
பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் கொடைக்கானல், பழனி நகராட்சி அதிகாரிகளை யும் வட்டாட்சியர்களையும் சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உசுப்பிவிட்டு வருகிறார். தொகுதி மக்களுக்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பி லான உபகரணங்களை பஞ்சாயத்துத் தலைவர்களிடம் கொடுத்து வழங்க சொல்லியிருக்கிறார்.
நத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினரான ஆண்டிஅம்பலமும் தனது தொகுதியில் உள்ள நத்தம், சாணார்பட்டி யூனியனில் வாழும் மக்களுக்காக, ரூபாய் 10 லட்சம் செலவில் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார். கட்சி சார்பில்லாமல் அனைவருக்கும் இந்த உபகரணங்களை வினியோகிக்கும் அதேசமயம், அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவோரையும் கணக்கெடுக்கும்படி கூறியிருக்கிறார்.
ஊரடங்கு அறிவித்ததில் இருந்து, ஆளுங் கட்சியை விட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்தான் வீட்டை விட்டு வெளியே வந்து கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
-சக்தி
___________
அரசியல் பகை! அல்லாடும் அப்பாவி மக்கள
தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரான சென்னை கே.கே.நகர் தனசேகரன், தனது அறக்கட்டளையின் கீழ் ஏழு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம், தனது கட்சித் தலைமை உத்தரவிட்டபடி ஊரடங்கு நேரத்தில் எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளைச் சேர்ந்த ஐந்நூறு குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஏப்ரல் 6ந்தேதி காலை இந்த இரண்டு பகுதிகளின் போலீஸ் ஸ்டேஷனிலும், 144 தடை உத்தரவை மீறியதாகவும், கூட்டத்தைக் கூட்டியதாகவும் கே.கே.நகர் தனசேகரன், துரைராஜ், உமாபதி உள்ளிட்ட பத்துபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன் பின்னணியை ஆராய்ந்தோம். ஏப்ரல் 2ந்தேதி ரேசன் அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், சென்னை விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. வி.என்.ரவி கேகே.நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கூட்டிவந்து ஊரடங்கைக் கேலிக்கூத்தாக்கினார். இதைப் பார்த்த கே.கே.நகர் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வி.என்.ரவியின் செயல் குறித்து சமூக வலைதளத்திலும் பரப்பி னார்கள். இதில் கடுப்பான வி.என்.ரவியின் தூண்டுதல் பேரில்தான், கே.கே.நகர் தனசேகரன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இதுகுறித்து கே.கே.நகர் தனசேகரனிடம் கேட்டோம். ""2005ல் அப்போதைய முதல்வர் ஜெ. ஆட்சியில் வெள்ள நிவாரண நிதி வழங்கியபோது, மக்களிடையே வதந்தியைப் பரப்பியதாக என்மீது குண்டாஸ் வழக்குபோட்டனர். சுப்ரீம் கோர்ட் வரை சென்று உடைத்து வந்தேன். இப்போது போட்டிருக்கும் பொய் வழக்குகளையும் தூள் தூளாக்குவேன்''’ என்றார் ஆவேசமாக.
- ஈ.பா.பரமேஷ்வரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04-15/coronafight-t.jpg)