Advertisment

ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி கூட்டணி! மார்க்கெட் டெண்டரில் 'மெகா' ஊழல்!

salem

சேலம் சின்னக்கடை வீதியில் பழமையான வ.உ.சி. பூ மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், புதிதாக கட்டும் பணி நடந்துவருகிறது. இதை யடுத்து, சேலம் போஸ் மைதானத்திற்கு தற் காலிகமாக வ.உ..சி. மார்க்கெட் மாற்றப்பட்டது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சக்திவேல், அளித்த அழுத்தத்தின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் கடைகளின் எண்ணிக்கையை 204-ல் இருந்து 326 ஆக அதிகரித்தது. அதாவது, 122 கடைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதையடுத்து, வ.உ.சி. நாளங்காடிக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்திவேல் ஆதரவுடன் லோகேஷ் தரப்பைச் சேர்ந்த முருகனுக்கு முடிவுசெய்யப்பட்டது.

Advertisment

salem

இதற்கு முன்பு பழைய வ.உ.சி. மார்க்கெட் ஒப்பந்தம் ஆண்டுக்கு 1.90 கோடிக்கு மேல் ஏலம்போகாத நிலையில், நடப்பு ஆண்டில் ஆறு கோடிக்கும் அதிகமாக ஏலம்போனதில் மாநகராட்சிக்கும் பரம திருப்திதான். ஆனால் குத்தகைதாரர் தரப்பு, அதிக தொகைக்கு ஏலம் முடிவானதால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மார்க்கெட்டுக்கு வரு

சேலம் சின்னக்கடை வீதியில் பழமையான வ.உ.சி. பூ மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், புதிதாக கட்டும் பணி நடந்துவருகிறது. இதை யடுத்து, சேலம் போஸ் மைதானத்திற்கு தற் காலிகமாக வ.உ..சி. மார்க்கெட் மாற்றப்பட்டது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சக்திவேல், அளித்த அழுத்தத்தின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் கடைகளின் எண்ணிக்கையை 204-ல் இருந்து 326 ஆக அதிகரித்தது. அதாவது, 122 கடைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதையடுத்து, வ.உ.சி. நாளங்காடிக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்திவேல் ஆதரவுடன் லோகேஷ் தரப்பைச் சேர்ந்த முருகனுக்கு முடிவுசெய்யப்பட்டது.

Advertisment

salem

இதற்கு முன்பு பழைய வ.உ.சி. மார்க்கெட் ஒப்பந்தம் ஆண்டுக்கு 1.90 கோடிக்கு மேல் ஏலம்போகாத நிலையில், நடப்பு ஆண்டில் ஆறு கோடிக்கும் அதிகமாக ஏலம்போனதில் மாநகராட்சிக்கும் பரம திருப்திதான். ஆனால் குத்தகைதாரர் தரப்பு, அதிக தொகைக்கு ஏலம் முடிவானதால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மார்க்கெட்டுக்கு வரும் பூ, காய்கறி, பழக்கடைக் காரர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பதன் மூலம் மட்டுமே லாபம் சம்பாதித்துவிட முடியாது என்பதால், கடைகளை சட்டவிரோத மாக விற்பனைசெய்ய திட்டமிட்டிருந்தனர்.

Advertisment

பழைய வ.உ.சி. மார்க்கெட்டில் கடை வைத்திருந்த 204 கடைக்காரர்களுக்கும் புதிய இடத்தில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்படி, அவர்களுக்கு தற்காலிக மார்க்கெட்டிலும் இடம் ஒதுக்கப்ப ட்டது. இந்த 204 கடைகள் போக, எஞ்சியுள்ள 122 கடைகளை தலா 6 முதல் 10 லட்சம் ரூபாய் வரை பகடியாக விற்பனை செய்துவிட்டாலே போட்ட காசை எடுத்துவிடலாம் என லோகேஷ் தரப்பினர் கணக்குப் போட்டனர்.

ஆனால் நடந்த விஷயமே வேறு என்கிறார் லோகேஷ். அதுகுறித்து அவரையே கேட்டோம்.

“""அதிகபட்ச விலைப்புள்ளி கோரியதன் பேரில் எங்களுக்கு டெண்டர் முடிவானது. பழைய கடைக்காரர்களுக்கு ஒதுக்கியது போக, எஞ்சியிருந்த 122 கடைகளில் எம்.எல்.ஏ. சக்திவேல், ஆளுங்கட்சி பிரமுகர்களை 'கவனிக்க' வேண்டும் என்று கூறி 46 கடைகளை எடுத்துக் கொண்டார். மீதமுள்ள 76 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு 22 கடைகள், தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த் திபன், தி.மு.க. எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோருக்கு 'மரியாதை' செய்யும் வகையில் தலா 5 கடைகள் கொடுத்தோம். இதன் பிறகு எங்களுக்கு 44 கடைகள் கிடைத்தன. இந்நிலையில், வ.உ.சி. மார்க்கெட் சங்கத் தலைவரான பூக்கடை ராஜூ, திடீரென்று எனக்கு எதிராகத் திரும்பினார். அவர் தன் குடும்பத்தினருக்கு 9 கடைகளை ரிசர்வ் செய்துகொண்டார். தவிர, பா.ம.க. நிர்வாகிகள் தரப்பிலும் குடைச்சல் அதிகமானதால், அக் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு 7 எல் அளவுக்கு மரியாதை செய்தோம்'' என்றார் லோகேஷ்.

salem

முன்னாள் சேலம் மாநகராட்சி கமிஷனரும், தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலருமான சதீஷுக்கு 5 கடைகள், அம்மா பேட்டை மண்டல உதவி ஆணையர் ராம்மோகனுக்கு 1 கடை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் குத்தகைதாரர் தரப்பிலிருந்து தரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ. சக்திவேலிடம் கேட்டபோது, ''வ.உ.சி. மார்க்கெட்டை டெண்டர் எடுப்பதில் போட்டி நிலவியது. அப்போது லோகேஷ் என்னிடம் சில உதவிகளைக் கேட்டது உண்மை. ஆனால் அதற்காக அவரிடமிருந்து நான் எனக்காகவோ பிறருக்காகவோ எந்த கடைகளையும் கேட்டு வாங்கவில்லை. அப்படி கொடுத்ததாக சொன்னால் என் முன்னால் வந்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்,'' என்று ஒரே போடாகப் போட்டார்.

இந்த மார்க்கெட் டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் திடீரென்று போராட்டத்தில் குதித்தார். இதுதொடர்பாக எஸ்.பார்த்திபனிடம் பேசினோம். ''அ.தி.மு.க. ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து சாக்பீஸில் கோடு போட்டு கடைகளின் பரப்பளவைக் குறைத்து விற்பனை செய்துள்ளனர். பூக்கடை ராஜூ, லோகேஷ், முருகன் ஆகியோருக்கு பூ மார்க்கெட்டை ஒன்றும் பட்டா போட்டுக்கொடுக்கவில்லை.

இவர்களுடன் அம்மாபேட்டை மண்டல உதவி கமிஷனர் ராம்மோகன், மாநகராட்சி முன்னாள் கமிஷனர் சதீஷ் ஆகிய அனைவருமே கூட்டுக் களவாணிகள்தான். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்திவேலின் மிரட்டலுக்கு பயந்து அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். இப்போதைய டெண்டரை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறேன். அப்படி இருக்கும்போது நான் எதற்காக லோகேஷிடம் கடைகளைக் கேட்கவேண்டும்?'' என்றார்.

இவர்கள் ஒருபுறமிருக்க, மாநகராட்சி முன்னாள் ஒப்பந்ததாரர்களுள் ஒருவரான சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த வரதராஜன், வ.உ.சி. மார்க்கெட் டெண்டரில் நடந்துள்ள ஊழல்களையும் முறைகேடுகளையும் அடிப்படை விதிமீறல் களையும் குறிப்பிட்டு முதல்வரின் தனிப்பிரிவு, உயர்நீதிமன்ற பதிவாளர், விஜிலன்ஸ் உள்ளிட்ட பலருக்கும் விரிவாக ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார்.

“மாநகராட்சி விதிகளை மீறி, கடைக்காரர்களிடம் இங்கு 100 முதல் 500 ரூபாய் வரை சுங்கம் வசூலிக்கின்றனர். இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்யவேண்டும்,'' என்றார் வரதராஜன்.

மாதந்தோறும் சேலத்துக்கு விசிட் அடிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சுரண்டல் தெரியாமல் போனது எப்படி என்பதுதான் புரியவில்லை என்கிறார்கள் பூக்கடைக்காரர்கள்.

-இளையராஜா

nkn231220
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe