"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் தொடர்பா, புதுசு புதுசா சர்ச்சைகள் கிளப்பி விடப்படுது.''”

Advertisment

"ஆமாம்பா, குடும்பச் சுற்றுலான்னு விமர்சனம் செய்த பா.ஜ.க. தரப்பு, இப்ப வேற மாதிரி இந்த விவகாரத்தைத் திசை திருப்பத் திட்டமிடுது.''”

"உண்மைதாங்க தலைவரே, தொழில் முனைவோரை ஈர்ப்பதற்காக அரசுமுறைப் பயணமாக தனி விமானத்தில் துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின், கூடவே தன் குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் அழைத்துச் சென்றார். இது பற்றிய விமர்சனம் வந்ததும், விமானத்துக் கான செலவை தி.மு.க.தான் செய்யுதுன்னு தொழில்துறை அமைச் சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டார். இதைத்தான் இப்ப, ஒன்றிய பா.ஜ.க அரசு, தங்களுக்கு சாதகமான ஆயுதமாகக் கையில் எடுக்குது. தி.மு.க. என்னும் அரசியல் கட்சியின் செலவில்தான் அந்தத் தனி விமானம் எடுக் கப்பட்டது என்றால், அதில் அரசுப் பொறுப்பில் இருக் கும் முதல்வரும், அமைச்ச ரும், நிதித்துறை, தொழில் துறையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பயணம் செய்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பி, டெல்லி பா.ஜ.க. தரப்பு, தி.மு.க. அரசுக்கு செக் வைக்கத் தயாராகுதாம். விவரம் அறிந்த தரப்போ, அரசுச் செலவில் தனி விமானத்தை எடுத்தால்தான் செலவினம், கட்சியின் தலைவராக இருக்கும் முதல்வரின் பயணச் செலவை யார் ஏற்றாலும் அதில் அதிகாரிகள் பயணிக்கலாம். அம்பானி, விஜய் மல்லையா செலவில் மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் ஒன்றிய அரசு அதிகாரிகளும் தனி விமானத்தில் பயணிக்கவில்லையா என்று கேட்கிறது.''”

"முதல்வரைப் போல் துபாய்க்குப் போக நினைத்த அமைச்சர் துரைமுருகனுக்கு ஏர்போர்ட்டில் க்ரீன் சிக்னல் கிடைக்கலையே?''”

Advertisment

duraimurugan

"ஆமாங்க தலைவரே, 29-ந் தேதி நள்ளிரவில், துபாய் சென்ற முதல்வர் சென்னை திரும்பிய நிலை யில், அடுத்த கொஞ்ச நேரத்தில் துரைமுருகன் துபாய்க் குச் செல்ல ஏர்போர்ட்டுக்குச் சென்றார். அங்கே அவரது பாஸ்போர்ட்டை பரிசீலித்த அதிகாரிகள், அதில் உள்ள விசா எண் தவறாக இருக்கிறது என்று கூறி அவரை துபாய் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அப்செட்டான அமைச்சர், அந்தப் பயணத்தை ரத்து செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பினார். இதன்பின் பாஸ்போர்ட்டில் விசா எண்களை சரியாக திருத்தம் செய்துவிட்டு, மீண்டும் அன்று மாலையில் துபாய்க்குச் செல்ல குஷி மூடில் கிளம்பினார் துரைமுருகன். சோதனைகள் அனைத்தும் முடிந்து உள்ளே சென்றவர், அடுத்த 15 நிமிடத்தில் மீண்டும் பயணத்தை ரத்து செய்து விட்டு சோகமாக வீட்டுக்குத் திரும்பிவிட்டார். காரணம் மேலிடத்தில் இருந்து வந்த போன்தான் என்கிறார்கள்.''”

"அமைச்சர் ராஜ.கண்ணப்பன் பீஸ் பிடுங்கப் பட்ட நிலைக்கு ஆளாகிவிட்டாரே?''”

"ஆமாங்க தலைவரே, அதுபற்றி நம்ம நக்கீரனில் இரண்டு கட்டுரைகள் விரிவா வந்திருக்குது. எனக்குத் தெரிஞ்ச தகவல்களைச் சொல்றேன். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், முதன்முறையாகத் தனது அமைச்சரவையில் இலாகா வை மாற்றி அமைத்திருக்கிறார் முதல்வரான ஸ்டாலின். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனிடமிருந்து அவரது துறை பறிக்கப்பட்டுள் ளது. அவருக்குப் பதில் போக்குவரத்துத் துறையின் புதிய அமைச்சராக சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டி ருக்கிறார். சிவசங்கரிடமிருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ராஜ கண்ணப்பனுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதில் ராஜ கண்ணப்பன் படு அப்செட்டாம்.''”

Advertisment

ss

"கொஞ்சம்கூட அசராம தன் விருப்பப்படி எல்லாம் கண்ணப்பன் ஆட்டம் போட்டதாச் சொல்றாங்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, ராஜ கண்ணப்பன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே இருந்தது. அதுபற்றி நாமும் பேசியிருக்கோம். அவரது துறையின் இணை இயக்குநர் அலுவலகத்திலேயே நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டும், அங்கு கரன்சிக் கட்டுகள் கைப்பற்றப்பட்டதும் அவரோட இமேஜை உடைச்செறிஞ்சிடுச்சி. இந்த விவகாரம் எல்லாம் அடங்குவதற்குள், முதுகுளத்தூர் பி.டி.ஓ. ராஜேந்திரனைச் சாதி ரீதியாக கண்ணப்பன் விமர்சனம் செய்ததாக அவர் மீது அதிரடிப் புகார் எழுந்திருக்கு. இதுதான் தி.மு.க.வின் சமூகநீதியான்னு கமல்ஹாசன் தொடங்கி பலரும் விமர்சனம் வைச்சிருக்காங்க. இதுக்கிடையில் இப்ப அவர் மீது இன்னொரு அணுகுண்டுப் புகாரும் எழுந்திருக்கு.''”

"டீசல் விவகாரமா?''”

"கப்புன்னு ஸ்மெல் பண்ணிட்டீங்களே தலைவரே, அதாவது, ஒவ்வொரு டெப்போவிலும் பேருந்துகளுக்கு டீசல் போடும் போது, பெட்ரோல் பங்குகளிடம் லிட்டருக்கு 30 காசுகள்னு அ.தி. மு.க. ஆட்சியில் கமிஷனாக வாங்கப் பட்டதாம். அதை இந்த ஆட்சி வந்ததும் அமைச்சர் கண்ணப்பன் தரப்பு, லிட்ட ருக்கு 1 ரூபாய் 30 காசுகள் வீதம் தர ணும்னு அநியாயக் கமிஷன் கேட்டதாம். இதனால் ஷாக்கான பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் பலரும், அரசுக்கு புகார்களை அனுப்பியதோடு, அமைச்ச ரின் அடாவடியைக் கண்டித்துப் போராட்டம் நடத்தவும் ரெடியானாங்க. இதெல்லாம் முதல்வர் கவனத்துக்குப் போனதால்தான், டென்ஷனான அவர், முதலில் அவரது பவரைக் குறைக்கும் வகையில் இலாகா மாற்றியிருக்கிறார். அவர் மீது விரைவில் விசாரணை வரும்னு சொல்லப்படுது.''”

"பரஸ்பர இலாகா மாற்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகி யிருக்கிறாரே எஸ்.எஸ்.சிவசங்கர்?''”

"தி.மு.க.வின் அரியலூர் மா.செ. வான சிவசங்கர், பாரம்பரிய தி.மு.க.காரர். அவருடைய அப்பா முன்னாள் ராஜ்யசபா எம்.பி. யான மறைந்த சிவசுப்பிரமணி யன் உறுதியான திராவிட இயக்கப் பற்றாளர். அவரைப் போல வே சிவசங்கரும் திராவிட இயக்கக் கொள்கை வழி பயணித்து, மக்களின் ஆதரவையும், தொண்டர்களின் அன்பையும் பெற்றவர். திராவிடக் கொள்கை வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருபவர். திராவிட மாடல் பற்றி அவர் பயிற்சி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது தான் இலாகா மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகி, அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கு. பஸ் ஸ்டியரிங் பிடிக்கத் தெரிந்தவர் சிவசங்கர். அவரிடமே போக்குவரத்து துறையைக் கொடுத்திருக்கிறார் முதல்வர்.''”

"தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மண்டலக் குழுத் தலைவர்களும், நிலைக்குழுத் தலைவர்களும், உறுப் பினர்களும் தேர்வு செய்யப்பட்டிருக்காங்களே?''

"ஆமாங்க தலைவரே, சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் இந்த பதவிகளில் தி.மு.க. மட்டுமே உட்கார்ந்தது. அதன் கூட்டணிப் கட்சிகளுக்கு இதில் இடம் கிடைக்கலை. இதனால் அதன் தோழமைக் கட்சிகளிடம் ஒருவித சலிப்பு தெரியுது. இது ஒருபுறமிருக்க, மாநகராட்சிகளில் வெற்றிபெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்கள், இப்பவே கட்டிங் கேட்டு கோதாவில் இறங்கிவிட்டதாகப் புகார்கள் எழ ஆரம்பிச்சிடுச்சி. குறிப்பாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களில் 90 சதவீத பேர் இந்த கோதாவில் குதிச்சிருக்காங்களாம். விளை யாட்டுத் திடல்கள், பொதுக் கழிப்பிடங்கள், மாநகராட்சி சுடுகாடுகள், டாஸ்மாக் பார்கள்னு எல்லாவற்றிலும் மாதாமாதம் கட்டிங் தரணும்னு மிரட்டறாங்களாம்.''”

"வாட்ஸ்ஆப்பில் வெளியான சில வீடியோக்களை நானும் பார்த்தேம்ப்பா.'' ”

"ஆமாங்க தலைவரே... பெண் கவுன்சிலர் களிலும் 90 சதவீதம் பேர், கட்சி நிர்வாகியா இருக்கும் தங்கள் கணவர்களை கட்டிங் வசூலில் இறக்கிவிட்டிருக்காங்களாம். இது தவிர, மெட்ரோ வாட்டர் கனெக்சன்கள், கழிவு நீரகற்றும் கனெக்சன்கள், புதிதாக வீடு கட்டும் குடியிருப்புகள்ன்னு எதுவாக இருந்தாலும் அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு தந்துவிட வேண்டுமாம். கவுன்சிலர்களுக்கு தெரியாமல் எந்த கனெக்சனும் கொடுக்கக்கூடாதாம். எந்தப் பணியாக இருந்தாலும் ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து வசூலிக்கிறார்களாம்.''

"வாட்ஸ்ஆப் வீடியோவில் வந்த கவுன்சிலரின் கணவர் யாரு?''”

mm

"சென்னையின் 34-ஆவது வார்டு கவுன் சிலர் ஷர்மிளாவும், அவர் கணவர் கருணாநிதி யும்தான். அவர்கள் பகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூரில் சொந்தமாக வீடு கட்டி வரும் ரேவதி என்ற பெண்ணிடம் ’கட்டிங்’ கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இது குறித்து அவர்களிடம் ரேவதி நியாயம் கேட்கும் வீடியோதான் சமூக ஊடகங்களில் வைர லாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருது. தி.மு.க. கவுன்சிலரின் இந்த அடாவடியை எதிர்க்கட்சி யினர் கடுமையாக விமர்சித்து, தி.மு.க. அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்காங்க. மேலும் ஷர்மிளாவின் கணவர் கருணாநிதி, சீனிவாசா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மாநகராட்சி காண்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்து வருகிறாராம். இப்படி மாநக ராட்சி ஒப்பந்த வேலைகளைச் செய்யும் குடும் பத்தைச் சேர்ந்த ஷர்மிளா எப்படி தேர்தலில் நின்று கவுன்சிலர் ஆனார் என்றும் எதிர்க்கட்சி கள் இப்போது வரிந்துகட்ட ஆரம்பித்துவிட்டன.''

"காவலர்களை காவல்துறையே பரிதவிக்க விடுதேப்பா?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்காக ஆட் களைத் தேர்வு செய்ய இருக்காங்க. இதற்கான தேர்வு விரைவில் நடக்கப்போகுது. இதற்கு ஏப்ரல் 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். துறையில் காவலர்களாக இருப்பவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம். பணிபுரியும் காவலர்களுக்காக குறிப்பிட்ட சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கு. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் காவலர்கள், அந்தந்த மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் என்.ஓ.சி. பெறணும். ஆனால், இந்த என்.ஓ.சி. சான்றிதழை எஸ்.பி. அலுவலகம் பலவும் கிடப்பில் வைத்திருக்குதாம். அதனால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பரிதவிக்கிறாங்க. முதல்வர்தான் தங்களுக்கு உதவணும்னு அவங்க கேட்கறாங்க.''

"மாஜி மந்திரி எஸ்.பி. வேலுமணி மேலே அறப்போர் இயக்கம் இன்னொரு குற்றச்சாட்டை ஆதாரத் தோடு வெளியிட்டிருக்கே?''”

ss

"ஆமாங்க தலைவரே... வருமானத் துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக மாஜி அ.தி.மு.க. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது, லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தியிருக்கும் நிலையில்... அவர் சென்னை மாநகராட்சிப் பகுதியில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கும் விவகாரத்திலும் 400 கோடி ரூபாய் அளவிற்கு கடந்த ஆட்சிக் காலத்தில் முறைகேடு செய்திருப்பதாக, அறப்போர் இயக்கம் புதிய குற்றச்சாட்டை எழுப்பியிருக்கு. அதேபோல் கோவை மாநகராட்சிப் பகுதியிலும் பேருந்து நிறுத்தம் அமைப்பதாக வேலுமணி தரப்பு, சில நூறு கோடிகளை விழுங்கிவிட்டது என்று, அங்கிருக்கும் சமூக நல ஆர்வலர்களும் அதிர்ச்சி அலைகளை எழுப்பறாங்க.''”

rr

"நான் இப்போதைய அமைச்சர் மகன் சம்பந்தப் பட்ட ஒரு தகவலைச் சொல்றேன். கூட்டுப் பாலியல் கொடுமையில் சிக்கிய பெண் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வரும் மாவட்டத்தின் சீனியர் அமைச்சருடைய இளைய மகன், கட்சியின் மகளிர் தொண்டரணியில் உள்ள முத்தானவரிடம் நெருக்கமாக இருப்பது பற்றி அவரது அப்பா வரை தகவல் போயிருக்கிறது. அத்துடன், அமைச்சரிடம் மனு கொடுக்க வரும் பெண்களுக்கும் இளைய மகன் வலை வீசுவதாக புகார் கிளம்பியுள்ளது. அமைச்சரின் இளைய மகனோ இந்தப் புகார்களை மறுக் கிறார். அரசியல் எதிரிகள், அமைச்ச ரின் பதவிக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கை இது என்றும் சொல்லப்படுகிறது. எப்படியோ, புகைச்சல் தெரிகிறது. நெருப்பை அணைக்க வேண்டியது அவசியம்.''”