ன் பிக்சர்ஸின் படத்தில் பிஸியாக இருக்கும் ரஜினி, சில நாட்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கான விதிமுறைகளையும் கடுமையான கட்டுப்பாடுகளையும் கொண்ட 36 பக்க புத்தகத்தை மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில் ஜாதி, மத சங்கங்களில் இருப்பவர்கள் ரஜினி மன்றத்தில் உறுப்பினராக சேர அனுமதியில்லை. கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மன்றக்கொடியைப் பயன்படுத்தக்கூடாது. மன்றப் பொறுப்பாளர்கள் அந்தப் பகுதியில் வசிப்பவராக அல்லது பணிபுரிபவராக இருக்க வேண்டும். மாவட்ட அலுவலகங்களுக்கு வரும் புகார்கள் மீது 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இப்படி ஏகப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அந்தப் புத்தகத்தில் உள்ளன.

rajini

ரஜினியின் இந்த கட்டளைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் வரவேற்பும் முணுமுணுப்பும் சரிசமமாகவே இருக்கிறது. இதுபற்றி டெல்டா மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ. ஒருவர் நம்மிடம் பேசத்தொடங்கினார். ""ஜாதி, மத சங்கங்களில் இருப்பவர்களை சேர்க்கக் கூடாதுங்கிறது ரொம்ப நல்ல பாலிஸிதான். அதே மாதிரி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும், தீய பழக்கங்களுக்கு ஆளாகக்கூடாதுன்னு தலைவர் சொன்னதை எல்லோரும் வரவேற்கிறோம். ஆனா மன்றப் பொறுப்பாளர்கள் அந்தப் பகுதியில் வசிப்பவராகத்தான் இருக்க வேண்டும் என்பதை முக்கிய விதியாகச் சொல்லிருக்காரு.

Advertisment

எங்க புதுக்கோட்டை மாவட்ட பொறுப்புக் கமிட்டியில அமெரிக்காவில் இருக்கும் முருகுபாண்டியனைப் போட்டிருக்கிறார்கள். வருஷத்துக்கு ஒருவாட்டிதான் புதுக்கோட்டை வரும் அவரிடம் மன்ற நிர்வாகிகள் எப்படி தொடர்புகொள்ள முடியும்? இதேபோல் பல ஒன்றிய, நகரச் செயலாளர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மேலிடத்தில் இருப்பவர்கள் தலைவருக்குத் தெரியப்படுத்துகிறார்களா எனத் தெரியவில்லை''’ என்றவர், ""மாவட்ட அலுவலகங்களுக்கு வரும் புகார்கள் மீது 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதி குறித்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் உங்களிடம் பேசுவார்''’என்றார்.

rajiniசிறிதுநேரத்தில் நமது செல்பேசிக்கு வந்த அந்த நிர்வாகி, “""எங்க மாவட்ட மகளிரணிச் செயலாளர் சுந்தரிக்கு கொஞ்சநாளைக்கு முன்னால பிறந்தநாள் வந்தது. மாவட்டத்துல இருக்கும் ஒன்றிய மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகளிடம் பிறந்தநாள் விழா வசூல் வேட்டை நடத்துனாங்க. சுந்தரிக்கு சப்போர்ட்டா மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி இருந்ததால, எல்லோரும் பணம் கொடுத்தாங்க. இந்த கலெக்ஷன் மேட்டர் மாநில மகளிரணிச் செயலாளர் காயத்ரி துரைசாமிக்குத் தெரிஞ்சு, பணம் கொடுத்தவர்களையும் பணம் வாங்கிய சுந்தரியையும் சத்தம் போட்டாரு. அத்தோடு சரி... சுந்தரிமேல எந்த நடவடிக்கையும் இல்ல. வாங்கிய பணத்தையும் சுந்தரி திருப்பிக் கொடுக்கல. இப்ப மறுபடியும் என்னன்னா, மகளிரணி போஸ்டிங் வாங்கித் தர்றேன்னு வெயிட்டான பார்ட்டிகளிடம் கலெக்ஷனை ஆரம்பிச்சுட்டாங்க. உங்க மூலமாவது தலைவர் கவனத்துக்குப் போனா சரி''’என்றார் விரக்தியுடன்.

அரசியல் கட்சி என வந்துவிட்டால், ஒன்றிரண்டு இடங்களில் இத்தகைய குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதேசமயம் கட்சிப் பெயரை ரஜினி எப்போது அறிவிக்கப்போகிறார்? என்பது குறித்து தென்மாவட்ட நிர்வாகிகள் சிலரைச் சந்தித்து கேட்டபோது, “""பூத் கமிட்டி அமைப்பதில் பல மாவட்டங்களில் சுணக்கம் இருப்பதை சரிசெய்த பின்தான் கட்சிப் பெயரை அறிவிக்க வேண்டும் என்பதில் தலைவர் உறுதியா இருக்கார்.

Advertisment

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விலிருந்து சிலர் இடம் பெயரலாம் என்பதால், அவர்களுக்கு எந்தவகையில் முக்கியத்துவம் கொடுப்பது, தனது மன்றத்தின் பழையஆட்களை எப்படி திருப்திப்படுத்துவது என்பது குறித்தெல்லாம் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். பழைய ஆட்கள் மனம் கோணாமல் இருப்பதற்காக, சத்தியநாராயணனுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கும் ஐடியாவும் தலைவருக்கு இருக்கிறது.

அதேபோல் பி.ஜே.பி.யுடன் கூட்டணி இல்லை என்பதை, தன்னைச் சந்திக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்களிடம் தெளிவாகவும் உறுதியாகவும் கூறியிருக்கிறார். செப். 05-ஆம் தேதி அழகிரி நடத்தப்போகும் பேரணியையும் கவனிக்கிறார். இதற்கெல்லாம் பிறகு, கட்சிப் பெயரை தலைவர் அறிவிக்கலாம். டிசம்பர் அல்லது ஜனவரியில் மாநாடு நடத்தும் ஏற்பாடுகளும் இருக்கின்றன. விரைவில் நல்லசேதி வரும்''’என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

-பரமு