மவுனம் காத்தார். சாமியாடினார். மயங்கி விழுந்தார். ஒவ்வொருமுறை கோர்ட்டுக்கு வரும்போதும் நிர்மலாதேவி செய்தியாகிறார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஆஜராவதற்காக 9-ஆம் தேதி பேரா சிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள விருதுநகர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத் துக்கு வந்திருந்தார். அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் கண்களை மூடி தியானித்தபடியே அமர்ந்திருந்த அவர் திடீரென்று மயங்கிச் சரிந்து கீழே விழுந்தார். உடனே, அங்கிருந்த மகளிர் காவலர்களும், வழக்கு நிமித்தமாக கோர்ட்டுக்கு வந்திருந்தவர்களும் அவரைத் தரையில் உட்காரவைத்து, பாட்டில் தண்ணீரால் மாறி மாறி முகத்தில் அடித்தனர்.
முதலுதவி கிடைக்கப்பெற்று ஆசுவாச மடைந்த பிறகு, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் நிர்மலாதேவி. உடல் நிலையைக் கருத்தில்கொண்டு தரையில் உட்காருவதற்கு அவரை அனுமதித்த நீதிபதி பரிமளா, குற்றச்சாட்டு வனைவினை (ஸ்ரீட்ஹழ்ஞ்ங் ச்ழ்ஹம்ங்) பதிவு செய்துவிட்டு, கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு முயற்சித் தது, தவறான பாதைக்கு அவர்களை வழிநடத்திட கூட்டுச்சதி செய்தது என நிர்மலாதேவி மீது 9 பிரிவுகளிலும், முருகன் மற்றும் கருப்பசாமி மீது 7 பிரிவுகளிலும் பதிவாகியிருக்கும் குற்றச்சாட்டு விபரங்களைக் கூறி, "இந்தக் குற்றங்களைச் செய்தது உண்மையா?'’என்று கேட்டார். உதவிப் பேராசிரியர் முருகன், "இதெல்லாம் புனையப்பட்ட கட்டுக்கதை'’என்றும், கருப்பசாமி, "எல்லாம் பொய்... பொய்...'’ என்றும் மறுத்திட... நிர்மலாதேவியோ, "மாணவி களை நான் குழந்தைகளாகவே பார்த்தேன். தவறான நோக்கத்தில் நான் பேசவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை'’என்றார் அழுத்தமான குரலில். மூவரும் குற்றச்சாட்டை மறுத்த நிலையில், அக்டோபர் 23-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி பரிமளா.
நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ""நேற்று இரவு 2 மணிக்கு என்னுடன் தொலைபேசியில் பேசினார். "யாரோ மிரட்டுகிறார்கள். மிரட்டுபவர்கள் யாரென்று சொன்னால் என்னுடைய குழந்தைகளுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும்'’என்கிறார்.
கல்லூரி நிர்வாகத்தில் இயங்கும் இரண்டு பிரிவுகளில், நிர்மலாதேவிக்கு வேண்டப்படாத பிரிவு பழி வாங்குவதற்காக இதைச் செய்திருக்கிறது. இந்த வழக்கில் அரசியல் விளையாட்டும் உண்டு. கிண்டி நபரே, முழுமையான ஒரு சந்தேகத்தை அல்லது அவரே அதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஏற்படுத்திவிட்டார். எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், இந்த வழக்கைக் கையில் வைத்துக்கொண்டு, கவர்னரை மிரட்டிக் கொண்டி ருக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டை இங்கே நான் பதிவுசெய்கிறேன்''’என்றார் அதிரடியாக.
-ராம்கி
படங்கள்: அண்ணல்