amman

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயிலிலும் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் அசையா சொத்துகள் ஆகியவற்றை கோயில் நிர்வாக அதிகாரிகள் மூலம் மறுமதிப்பீடு செய்வதும், அதுதொடர்பான அறிக்கையை தணிக்கைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்பதும் விதி.

Advertisment

ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கடந்த 1997ஆம் ஆண்டு, அப்போது பணியிலிருந்த துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்த்தல் குழுவினர் மூலமாக மறு மதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது அந்த நகை மறுமதிப்பீட்டுக் குழுவில் இருந்த தொழில்நுட்ப வல்லுநர், 1993 முதல் 96 வரை பல்வேறு முறைகேடுகள் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு தற்கா-கமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இருந்தும் அப்போது எவ்வளவு நகைகள் திருடப்பட்டது என்கிற விபரங்கள் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

இதனால், கோயிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை சாதகமாக்கிக்கொண்ட நபர்கள், கடந்த 2011 முதல் 2021 வரை ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

Advertisment

அதிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டெல்லிபாபு, இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோதுதான் இந்த மெஹா மோசடி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இதுகுறித்து நாம் அந்த டெல்லிபாபுவிடமே கேட்டபோது.. “""சார் நாங்கள் இதுவரை தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட கோயில் சொத்துக்கள் குறித்து, தகவல் உரிமை சட்டத்தில் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டு, அவற்றில் நடந்துவரும் மோசடிகளை அம்பலப்படுத்தி வருகிறோம். இதனால் எங்களுக்கு அரசுத் தரப்பி-ருந்தே பல்வேறு நெருக்கடிகளும் மிரட்டல்களும் வந்ததோடு, பொய் வழக்குகளையும் போட்டு அலைக்கழித்தனர். கடந்த எடப்பாடி ஆட்சியில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சொத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பியதால், கோயிலின் செயல் அலுவலர் தியாகராஜனை மிரட்டியதாக எஃப்.ஐ.ஆர். போட்டு என்னைக் கைது செய்தார்கள். ஆனால் அதற்கு எந்தவித ஆதாரமும் முகாந்திரமும் இல்லாததால் நீதிபதி என்னை விடுவித்தார். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயி-ல் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மதுரை வந்து ஆய்வு செய்தோம். அப்போதுதான் கோயி-ல் உள்ள அலுவலர்கள் தரப்பில் இருந்தே திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அது என்னவன்றால், அம்மனின் வைரகிரீடக் கற்கள் திருடப்பட்டுவிட்டதாம். மேலும் மும்பையில் உள்ள தங்க நகை உருக்கு ஆலைக்கு 79 கிலோ அளவுக்கு சாமியின் தங்க நகைகளை உருக்க அனுப்பியதில், அவர்கள் சுத்த தங்கமாக 69 கிலோ நகையைத் திருப்பி அனுப்பியதாக ஆர்.டி.ஐ.யில் பதில் வந்தது. ஆனால் அந்த 69 கிலோ தங்க நகை மீனாட்சி அம்மன் கோயி-ன் பதிவேட்டில் வரவு வைக்கப்படவில்லை. மேலும் மீனாட்சி அம்மனின் வைர கீரீடம் 1994-ல் காணாமல் போயிருக்கிறது. இது 97-ல் நடந்த தணிக்கைக் குழு ஆய்வில் தெரியவர, அப்போது கோயிலின் நிர்வாகத்தில் இருந்த நான்கு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யபட்டார்கள். ஆனால் காணாமல் போன வைர கிரீடத்தை அவர்களிடம் இருந்து இன்றுவரை மீட்கவில்லை.

இதேபோல் 4 கிலோ நகைகள் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தற்போது என்ன ஆனது என்று எந்தத் தகவலும் இல்லை. அதுகுறித்த விபரங்களைக் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் சொத்துக்களும் விற்கப்பட்டுள்ளன. அதற்கெல்லாம் முறையாக தணிக்கை அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. எப்போதுமே வருடா வருடம் ஒவ்வொரு கோயிலிலும் அங்கிருக்கும் இணை ஆணையர், நகை மதிப்பீட்டாளர் மற்றும் அறங்காவலர்கள் கொண்ட குழுவை அமைத்து, தணிக்கை செய்வார்கள். அதுவும் 2018ல் இருந்து செய்யப்படவில்லை.

மேலும் கடந்த 10 வருடத்திற்கு ஒருமுறை மாநில அளவில் தணிக்கை குழு வந்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் இதுவரை செய்யப்படவில்லை. கடந்த 2018ல் இருந்து பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் மூலம் தங்க நகைகள், வைரம் வைடூரியம் போன்றவை காணாமல் போயிருக்கிறது என்ற விபரம் தற்போதைய ஆர்.டி.ஐ, மூலம் தெரிய வருகிறது''’என அதிர்ச்சிதரும் தகவல்களைப் பட்டிய-ட்டவர்.....

amman

""இதேபோல் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் நகைகள் முறையாக கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதுபோல மீனாட்சி அம்மன் கோயி-ன் சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் பெரிய பெரிய வணிக வளாகங்களாக இருக்கிறது. அதுபோக கோயிலைச் சுற்றி வடநாட்டு மார்வாடிகளுக்கு மிகக்குறைந்த மதிப்பில் குத்தகைக்கு விடப்பட்டும், சில சொத்துக்கள் விற்கப்பட்டும் இருக்கிறது. இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் குழு அமைத்து, முழுதாக தணிக்கை செய்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். கடந்த ஆட்சியில் கூட்டுக் கொள்ளை அடித்த அதிகரிகள் மற்றும் அப்போதைய ஆளும் அரசியல் புள்ளிகளிடம் விசாரணை நடத்தி, தகுந்த தண்டனை பெற்றுத் தந்து, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நகைகளையும், வைரக் கிரீடத்தையும் உடனடியாக மீட்க வேண்டும். அதேபோல் முறைகேடாக விற்கப்பட்ட கோயில் சொத்துக்களையும் மீட்டெடுக்கவேண்டும். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளரிடம் புகார்கள் கொடுத்துள்ளோம். இந்த மோசடிகள் குறித்து தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்று முடித்துக்கொண்டார் அவர்.

இதுகுறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் துணை ஆணையாளர் கிருஷ்ணனிடம் நாம் கேட்டபோது, ""ஆர்.டி.ஐ.யில் குறிப்பிடப்படும் வருடத்தில் நான் இங்கு பணியில் இல்லை. கோயிலில் வருடா வருடம் தணிக்கை செய்யபடுகிறது. கடந்த 10 வருடங்களாக தணிக்கை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைத்திற்கும் சரியான கணக்கு உள்ளது. ஒவ்வொரு வருடமும் இணை ஆணையாளர், தங்க நகை மதிப்பீட்டு ஆய்வாளர், வைர மதிப்பீட்டாளர் போன்ற குழுவினர் மூலம் பக்தர்களின் காணிக்கை நகைகள், சாமியின் நகை இருப்பு எல்லாவற்றையும் ஆய்வுசெய்து, நகை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்துவருகிறோம். இருந்தும் சமூக ஆர்வலர்கள் என்றபெயரில், ஆர்.டி.ஐ. மூலம் விளக்கம் கேட்டு, தேவையில்லாத நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள்''’என்றார் நிதானமாக.

மீனாட்சி அம்மன் கோயி-ன் அலுவலர் நம்மிடம், ""இங்கு எல்லோருமே கூட்டு களவாணிகள். இவர்கள் அனைவருமே கூட்டு சேர்ந்து கடந்த 10 வருடமாக 2011 முதல் 2021வரை, பல்வேறு முறைகேடுகளைச் செய்திருக்கிறார்கள். அடுத்து 2018ல் இருந்து கடைசி 4 வருடத்தில் அடித்த கொள்ளையே பல நூறு கோடியைத் தாண்டும். நகைகள் குறித்து இவர்கள் சொல்வதுதான் கணக்கு. 2018ல் மீனாட்சி அம்மன் கோயி-ன் இணை ஆணையாளராக இருந்த செல்லத்துரை, அ.தி.மு.க. அமைச்சர்களோடு மிகவும் நெருக்கமாக இருந்தார் அந்த காலகட்டத்தில்தான் பல்வேறு முறைகேடுகள் நடந்தேறின. இப்பொது ஆர்.டி.ஐ.யில் வெளிவந்திருப்பது நூற்றுக்கு நூறு உணமை''’என்றார் கிசுகிசுப்பாக.

கோயில் நகைகளையும், சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?