ழிக்கப்படும் ஆரோவில் குறித்து விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி, விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் ஆகியோர் ஆரோவில் நிர்வாகத்திற்கு கடிதமெழுதினர். கடிதத்துக்கு பதி-ல்லை. ஆரோவில் ஒர்க்கிங் கமிட்டியின் முந்தைய நிர்வாகி கள் அமித்ஷாவை நேரில் சந்தித்து பலரும் முறையிட்டனர், எதுவும் நடக்கவில்லை. இங்கு நடக்கும் ஊழல்கள், மோசடிகள் குறித்து ஆதாரங்களோடு பிரதமர், உள்துறை, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர்களுக்கு புகார்கள் தந்தும் நடவடிக்கை இல்லையென்கிறார்கள்.

Advertisment

ஆரோவில்லில் ஆர்.எஸ்.எஸ். தென்னிந்திய தலைமையகம் அமைக்க முயற்சிசெய்வதாக அச்சம்கொள் கின்றனர் ஆரோவில்வாசிகளில் சிலர், அதுகுறித்து நம்மிடம் பேசியபோது...  "2021-ல் கவர்னரிங் போர்டு அமைக்கப்பட்டது. சேர்மனாக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, உறுப்பினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர், கூடுதல் உறுப்பினர்களாக பேரா.நிரிமா, எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன், பேரா.கௌதம் கோசல், ஐதராபாத் பல்லைக்கழகத்தின் இந்தித் துறை தலைவர் சர் ராஜ்யூ, கர்நாடகா வைச் சேர்ந்த நந்தன குருப்பா பசவப்பா, ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர்கள் நீட்ட பிரசாத், சஞ்சய்கபூர் ஆகியோர் நியமிக்கப் பட்டனர். ஆளுநர் ரவி, எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன், பசவப்பா, சர் ராஜ்யூ பின்னணி குறித்து விசாரித்தபோது, இவர்கள் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர்கள். இவர்கள் வந்தபின்தான் அமைதி, சமத்துவக் கொள்கையோடு இயங்கிவந்த இடம், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே இருக்கும் இடமாகவும், இயற்கை அழிப்பு, கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவு போன்றவை நடந்தன. 

pondy1

2020-க்கு முன்புவரை ஒன்றிய அரசு ஆரோவில் மேம்பாட்டுக்காக 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிவந்தது. 2021-க்கு பின்பு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. திடீரென இவ்வளவு பெரிய தொகை நிதியாக ஒதுக்கியது மகிழ்ச்சிதான். அந்த நிதியை எப்படி செலவு செய்வது எனத்தெரியாமல் ரோடு போடுகிறோம், கட்டடம் கட்டுகிறோம், வெளிமாநில பல்கலைக்கழகங் களோடு ஒப்பந்தம் போடுகிறோம் என்கிற பெயரில் ஆரோவில்லின் இயற்கையை அழித்துக்கொண்டிருக் கிறார்கள். மூன்றாயிரம் பேர் மட்டுமேயுள்ள இந்த ஆரோவில்லை நிர்வாகம் செய்ய, ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, ஒரு ஐ.எஃப்.எஸ். அதிகாரி, 10 அலுவலக உயரதிகாரிகள் என நியமித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஆரோவில்லில் அடுக்குமாடி குடியிருப்பு களாக ஆயிரம் வீடுகள் கட்டி குஜராத்திகளை இங்கே கொண்டுவந்து தங்கவைக்கும் திட்டம் நிர்வாகத்திடம் இருக்கிறது'' என்கிறார்கள் அச்சத்துடன். 

இதுகுறித்து ஆரோவில் பவுண்டேஷன் அலுவலக நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். நமது கேள்விகளுக்கு அவர்கள் அனுப்பிய பதில்கள் தொகுப்பு, "ஆரோவில் வளர்ச்சி முழுமையாக “கேலக்ஸி திட்டம்’ (ஏஹப்ஹஷ்ஹ் டப்ஹய்) அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது. இது 2025, மார்ச் 17 ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஆரோவில் மாஸ்டர் பிளானின் முக்கிய அங்கமாகும். எங்கு மரங்களை அகற்றுவது தவிர்க்கமுடியாததாக இருக்கிறதோ அங்கு ஈடுசெய்யும் மரநடவு மேற்கொள்ளப்படுகிறது. குடியிருப்பாளர்கள் எவரும் மிரட்டப்படுவதில்லை. குடியிருப்பாளர்கள் மீது எவ்வித ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது ஆரோவில் பவுண்டேஷன் (குடியிருப்பாளர்களின் சேர்த்தல் & நீக்கம்) விதிகள், 2023-ன்படியே மட்டுமே மேற்கொள்ளப்படும். 

Advertisment

pondy2

135 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள அன்னபூர்ணா பண்ணையில் வெறும் 35 ஏக்கரை மட்டுமே சாகுபடிக்குப் பயன்படுத்திவருகிறது. தற்போது சுமார் 3000 பேர் கொண்டுள்ள ஆரோவில் சமூகத்தின் உணவுத் தேவையில் மிகச்சிறிய பகுதியை மட்டுமே இது பூர்த்திசெய்கிறது. இருந்தபோதிலும், அன்னபூர்ணா பண்ணையின் நிர்வாகிகளுக்கு ஆரோவில் பசுமைப் பட்டையில் (ஏழ்ங்ங்ய்க்ஷங்ப்ற்) மாற்று நிலப்பரப்பு வழங்கப்பட்டு, வேளாண்மையைத் தொடரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணா பண்ணை அழிக்கப்படுகிறது அல்லது சோதனைப் பாதை அமைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

ஆரோவில் பவுண்டேஷன் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டது. வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக் கான விசா பரிந்துரைகள் எப்போதும் இந்திய அரசின் விதிமுறைகளுக்கு இணங்க மட்டுமே வழங்கப்படும். ஒருபோதும் தன்னிச்சையான முறை யில் மறுக்கப்படுவதில்லை. வீடுகள் சட்டவிரோதமாக இடிக்கப்படுவ தில்லை. நில ஒதுக்கீடு செய்யப்படாத இடங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களே உரிய சட்ட நடைமுறையின்மூலம் அகற்றப் படுகின்றன. தற்போது 59 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். ஒரே (குஜராத்) மாநிலத்தவர்களுக்கே வீடுகள் ஒதுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. மாஸ்டர் பிளான்படி, 2035-க்குள் உலகம் முழுவதிலிருந்தும் 50,000 குடியிருப்பாளர்களை ஆரோவில்லில் தங்கவைக்கும் இலக்குள்ளது.

ஆரோவில் பவுண்டேஷன் இந்திய அரசின் கல்வி அமைச்சகத் தின் கீழ் இயங்கும் சட்டபூர்வ நிறுவனம். எந்த அரசியல் கட்சியாலும் அல்லது அமைப்பாலும் இவை பாதிக்கப்படுவதில்லை. ஆரோவில்லில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் கொண்டு வரப்படுகிறதென்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்கிறது அது. எனினும், இவர்கள் கூறியுள்ள மாஸ்டர் ப்ளான் அறிவிப்பு, ஆரோவில்வாசிகளின் அச்சத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.

Advertisment

-தமிழ்குரு