நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அசாமில் மட்டுமே ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கொடுக்கப்பட்ட பலத்த அடியில் ஆடிப்போயிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். இந்த 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்கள் உணர்ந்திருந்தாலும், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவும் கொடுத்த வியூகங்களிலும், நம்பிக்கையிலும் கௌரவமான இடங்களைக் கைப்பற்றுவோம் என மனக் கோட்டை கட்டியிருந்தனர். ஆனால், அந்த கோட்டை சரிந்ததில் அவர்களுக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி. இதனால், மோடி மற்றும் அமித்ஷாவிடம் கடந்த வாரம் விவாதித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
இதுகுறித்து நம்மிடம் மனம் திறந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு தொடர்புடைய பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர், ‘’சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஏற்பட்ட தோல்விகள் குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசிற்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் குறித்தும் ஆலோசனை நடத
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அசாமில் மட்டுமே ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கொடுக்கப்பட்ட பலத்த அடியில் ஆடிப்போயிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். இந்த 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்கள் உணர்ந்திருந்தாலும், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவும் கொடுத்த வியூகங்களிலும், நம்பிக்கையிலும் கௌரவமான இடங்களைக் கைப்பற்றுவோம் என மனக் கோட்டை கட்டியிருந்தனர். ஆனால், அந்த கோட்டை சரிந்ததில் அவர்களுக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி. இதனால், மோடி மற்றும் அமித்ஷாவிடம் கடந்த வாரம் விவாதித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
இதுகுறித்து நம்மிடம் மனம் திறந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு தொடர்புடைய பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர், ‘’சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஏற்பட்ட தோல்விகள் குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசிற்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதில், பேசிய தலைவர்கள், மோடி-அமித்ஷாவின் வியூகங்கள் செல்லுபடியாகவில்லை; தமிழக தேர்தல் குறித்து நாம் கொடுத்த ரிப்போர்ட்டில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க. கட்சியைப் பற்றியும் மாநில அரசாங்கத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள, தங்களின் நம்பிக்கைக்குரிய சிலரை வளர்த்து வைத்துள் ளது ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தின் மீது பற்றுள்ள சில ஐடியா -ஜிஸ்டுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களோடு தொடர்பிலிருக் கிறார்கள். இவர்கள் தங்களின் பெயர் -அடையாளம் பொது வெளியில் தெரியக்கூடாது என் பதில் கவனமாக இருப்பார்கள். இந்த ஐடியாலஜிஸ்ட்களை ஆர்.எஸ்.எஸ்.சின் உளவுப்பிரிவு என்று சொல்வதுண்டு. தேவைப் படுகிறபோது அவர்களை வாரணாசிக்கு ரகசியமாக அழைத்தும் விவாதிப்பார்கள். அந்த உளவாளிகளை மத்திய அரசும் தங்களுக்கு நெருக்கமாக வைத்துக்கொள்ளும்.
அந்தவகையில், தமிழகத் தில் நான்கைந்து பேர் இருந்தாலும் திருச்சியை சேர்ந்த நித்தமும் ஆனந்தமுமான பெயர் கொண்ட மருத்துவம் சார்ந்த தொழிலதிபர் ஒருவர், ஆர்.எஸ். எஸ்.சின் ஐடியாலிஜிஸ்ட்டாக இயங்கி வருகிறார். அவர் கொடுத்த பல தகவல்களை மத்திய அரசும் ஆர்.எஸ். எஸ்.ஸும் பயன்படுத் திக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, கடந்தவருடம் கொரோனா முதல் அலையின் போது, கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்முதல் அதிகா ரத்தை, அ.தி.மு.க. அரசிடம் ஒப்படைத்தால் பெரியளவிலான ஊழல்கள் நடக்கும் என்றும், மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து மாநில அரசுக்கு கொடுக்கலாம் என்றும், அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கமான மருத்துவ பினாமி நிறுவனங்கள் குறித்தும் தகவல் அனுப்பினார். அதனடிப்படையில்தான், கொள்முதல் விவகாரங்களை எடப்பாடி அரசின் கட்டுப்பாட் டில் கொடுக்க மறுத்தது மத்திய அரசு. ஆனால், இரண்டாவது கொரோனா அலையில் பா.ஜ.க. வின் செயல்பாடு ஆர்.எஸ்.எஸ். தரப்புக்கு திருப்தி தரவில்லை.
இந்தநிலையில், தமிழகத் தின் தேர்தல் குறித்து ஒரு ரிப் போர்ட்டை கேட்டிருந்தது ஆர்.எஸ்.எஸ். அதன்படி, "பார்ட்டிஸ் ட்ரெண்ட் இன் தமிழ்நாடு' என்கிற தலைப்பில் 90 பக்க அறிக்கை ஒன்றை தேர்த லுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் சமர்பித்திருக்கிறார் நித்தமும் ஆனந்தமுமான நபர். மத்திய அரசிடமும் அந்த ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 90 பக்க அறிக்கையில், தமிழக அரசியல் கட்சிகளின் வலிமை குறித்தும், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்தும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்ட அடிப் படைத் தகவல்களின்படியே தேர்தல் முடிவுகளும் வந்துள்ளன.
குறிப்பாக, ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும்; அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தோல்வியடையும்; அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தது தவறு. அ.தி. மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 3 அல்லது 4 இடங்களில் வெற்றி கிடைக்கும். தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்கும் வலிமையான தலைவர்கள் இல்லை என்று அந்த ரிப்போர்ட் டில் சொல்லப்பட்டுள்ளது.
அந்த ரிப்போர்ட் குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸும், பா.ஜ.க.வும் அப்போதே விவாதித்திருக் கின்றன. ஆனால், அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டதால் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய பா.ஜ.க. தலைமையால் முடியவில்லை. அதேசமயம், பா.ஜ.க. தலைமையோ, ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் வலிமையாக இருப்பதால், 10 தொகுதிகளுக்கும் அதிகமாக நாம் (பா.ஜ.க.) ஜெயிப்போம் என ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு நம்பிக்கை கொடுத்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் 90 பக்க ரிப் போர்ட்படிதான் வந்திருக்கிறது.
தேர்தல் தோல்வியால் கவலையடைந்துள்ள ஆர்.எஸ். எஸ். இயக்கத் தலைவர்கள் மோடியிடமும், அமித்ஷாவிடமும் ஆலோசனை நடத்தினர். பொதுவாக, "உங்களின் வியூகங் களை இனி ஒருமுறைக்கு பல முறை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் உத்தரவுகளில் கவனம் செலுத் துங்கள் என கேட்டுக் கொண் டுள்ளனர்' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதற்கிடையே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பற்றிய ஊழல் ரெக்கார்டுகளை ஆதாரப்பூர்வ மாக நித்தமும் ஆனந்தமுமான ஆர்.எஸ்.எஸ். ஐடியா-ஜிஸ்ட் சேகரித்து வைத்திருப்பதால் அதனை டெல்லிக்கு அனுப்பும் முயற்சியில் இருக்கிறார் என்கிற தகவலும் பா.ஜ.க. தரப்பிலிருந்து கசிகின்றன.