Advertisment

பள்ளிக்குள் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலா? -கலைஞர் ஊரில் சர்ச்சை!

ss

ர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது கலைஞர் படித்த திருவாரூர் பள்ளி. கமலாலயக் குளத்தின் தென்கரையில் அமைந்திருக்கும் வ.சோ.ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, 1916-இல் போர்டு ஹைஸ்கூல் எனத் தொடங்கப்பட்டது.

Advertisment

அரசுப் பள்ளியாக இருந்ததை 1961-62இல் அப்போதைய முதல்வராக இருந்த காமராஜர், அந்தக்காலப் பண்ணையாரான வி.எஸ்.டி. என்று அழைக்கப்பட்ட வி.எஸ்.தியாகராஜ முதலியாரிடம் ஒப்படைத்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கினார். அது இப்போது வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் இயங்கி வருகிறது.

Advertisment

dd

இந்த ஆண்டு, +1 வகுப்பில் வரலாற்றுப் பாடப்பிரிவை பள்ளி நிர்வாகம் நீக்கி அதிர்ச்சி தந்தது. இதற்கு எதிராக முற்றுகைப் போராட்டம், கையெழுத்து இயக்கப் போராட்டம் என பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால், வரலாற்றுப் பாடப் பிரிவை மீண்டும் கொண்டுவருவ தாகச் சொல்லியிருக்கிறது பள்ளி நிர்வாகம். எனினும், பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத

ர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது கலைஞர் படித்த திருவாரூர் பள்ளி. கமலாலயக் குளத்தின் தென்கரையில் அமைந்திருக்கும் வ.சோ.ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, 1916-இல் போர்டு ஹைஸ்கூல் எனத் தொடங்கப்பட்டது.

Advertisment

அரசுப் பள்ளியாக இருந்ததை 1961-62இல் அப்போதைய முதல்வராக இருந்த காமராஜர், அந்தக்காலப் பண்ணையாரான வி.எஸ்.டி. என்று அழைக்கப்பட்ட வி.எஸ்.தியாகராஜ முதலியாரிடம் ஒப்படைத்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கினார். அது இப்போது வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் இயங்கி வருகிறது.

Advertisment

dd

இந்த ஆண்டு, +1 வகுப்பில் வரலாற்றுப் பாடப்பிரிவை பள்ளி நிர்வாகம் நீக்கி அதிர்ச்சி தந்தது. இதற்கு எதிராக முற்றுகைப் போராட்டம், கையெழுத்து இயக்கப் போராட்டம் என பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால், வரலாற்றுப் பாடப் பிரிவை மீண்டும் கொண்டுவருவ தாகச் சொல்லியிருக்கிறது பள்ளி நிர்வாகம். எனினும், பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய தால், இதனை வலியுறுத்தி ஒரு லட்சம் பேர் கையெ ழுத்திடும் போராட்டத்தை திருவாரூர் எம்.எல். ஏ.வும் தி.மு.க. மா.செ.வுமான பூண்டி கலைவாணன், முதல் கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார்.

பள்ளி மீட்புக் குழுவின் தலைவரும், ம.தி.மு.க. பிரமுகருமான கூடூர் சீனிவாசன் கூறுகையில் ’"இந்தப் பள்ளியில் 2500 மாணவர்கள் படித்து வருகிறார்கள். பள்ளி இருக்கும் இடம், கட்டிடம், மாணவர்களுக்கான தளவாடப் பொருட்கள் என அனைத்துமே, அரசுக்குச் சொந்தமானதுதான். அங்குள்ள ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் அரசே சம்பளம் வழங்கி வருகிறது. கட்டிடங் களும் தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிதியி-ருந்து கட்டிக் கொடுக்கப்பட்டி ருக்கிறது. அப்படி இருந்தும் தன்னிச்சையாக 700 மாணவர்களை செல்ஃப் பைனான்ஸ் மாணவர்கள் என்ற பெயரில் சேர்த்துக்கொண்டு, அவர்களிடம் தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித் திருக்கிறார்கள். ஆனாலும் சுயநிதிப் பள்ளிக்கான புதிய கட்டமைப்பு களை உருவாக்காமல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை அவர்களுக்கும் பகிர்கிறார்கள்'' என்று கொந்தளித்தவர்,

dd"போதுமான ஸ்ட்ரென்த் இல்லை என்று பொய்யான காரணத்தைச் சொல்லி, ஒவ்வொரு பாடமாக நீக்கி, கடைசியில் பள்ளியை முற்றிலும் தனியார் பள்ளியாக்கத் துடிக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு முயற்சி நடந்தபோது, அப்போதிருந்த தி.க. பிரமுகரான எஸ்.எஸ். மணியம், இரண்டாயிரம் பெற்றோர் களைத் திரட்டிப் போராடி, அவர்களைப் பின்வாங்க வைத்தார்''’என்றும் சுட்டிக்காட்டினார்.

நகர்மன்ற உறுப்பினரான ஜி.வரத ராஜனோ, "இவர்கள் வரலாற்றுப் பாடத்தை நீக்கியது குறித்து மாவட்ட ஆட்சியர் போன்றோர் கேள்வி எழுப்பிய போது, மாணவர்கள் ஒருவரும் அந்த வகுப்பில் சேராத நிலைதான் இருக்கிறது என்று பொய்யான தகவலைச் சொன்னார்கள். பிரச்சினை பெரிதானதால், வரலாற்றுப் பாடப் பிரிவில் மாணவர்களை சேர்ப்போம் என்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். ஆட்கள், பள்ளி நிர்வாகத்திலும் புகுந்து விட்டார்கள். எனவே பள்ளியைக் காப்பாற்ற, அதை அரசே ஏற்று நடத்தவேண்டும்'' என்று திகைக்க வைத்தார்.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப் பாளரான ’"மக்கள் அதிகாரம்'’ சண்முகசுந்தரம் ’"அந்தப் பள்ளி நிர்வாகம், சர்வாதிகாரத்தோடு செயல்படுகிறது. இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட இரண்டு பிராமண சமூக ஆடிட்டர்கள் இருக்கிறார் கள்''” என்கிறார் கவலையாய்.

இதுகுறித்து வ.சோ. ஆண்கள் பள்ளி நிர்வாகத்தினர் சார்பாக பேசிய தலைமை ஆசிரியரோ,’"வரலாற்றுப் பாடத்தை மீண்டும் கொண்டு வந்துவிட்டோம். இதுபற்றி பத்திரிகைகளில் விளம்பரமும் செய்து விட்டோம். இடம், கட்டிடம், எல்லாமே அரசுக்கு சொந்தம்தான். அதேநேரம் இங்கு சுய நிதியில் படிக்கும் மாணவர் களிடம் வசூலிக்கும் பணத்தையும் இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்குதான் பயன்படுத்துகிறோம். எந்த விவகாரமாக இருந்தாலும் இரண்டு ஆடிட்டர் களிடமும் கேட்கவேண்டும் என்று பள்ளி நிர்வாகத் தலைமை கூறியுள்ளது. அதன்படிதான் செய் கிறோம்''’என்றார் தெளிவாக.

பள்ளி நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சென்னையில் இருப்பதால், அவரது ஆடிட்டர்கள் இரண்டு பேர் முழுமையான அளவில் பள்ளி நிர்வாகத்தில் ஈடுபடுகின்றனர். அந்த இருவரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு பற்றிய சந்தேகமே இந்த சர்ச்சைகளுக்குக் காரணம் என்கிறார்கள் நிர்வாகத்திற்கு நெருக்கமான பெயர் சொல்ல விரும்பாத நபர்கள்.

"இந்தப் பள்ளியைப் பொறுத்தவரை, இயல்பாகவே திராவிட உணர்வு, சமூக நீதிக் கொள்கை ஆகியவை உண்டு. திருவாரூர் எம்.எல்.ஏ என்ற முறையில் கலைஞர் கொடுத்த தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியின் கடைசிக்கட்டத்தில், தனது தாத்தா படித்த பள்ளியின் இன்றைய மாணவர்களுடான சந்திப்புக்கு உதயநிதி வந்தார். அரசியல் கலர் பார்க்காமல், ஆட்சியின் நெருக்கடியைப் பற்றிக் கவலைப்படாமல், மாணவர்களை உதயநிதி சந்திப்பதற்கு அனுமதி தந்தது பள்ளி நிர்வாகம்.

வரலாற்றுப் பாடப்பிரிவு நீக்கம், சுயநிதி வகுப்புகள் தொடர்பான சர்ச்சையை பெற்றோர், சமூக ஆர்வலர்கள் முன் விரிவாகப் பேசித் தீர்வு காணலாம்'' என்கிறது பள்ளி நிர்வாகம்.

nkn100822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe