"ஆல் பாஸ் டோய்!'' என்ற உற்சாகக்குரல்கள்தான் கடந்த இரண்டு கல்வி ஆண்டாக மாணவர்கள் மத்தியில் ஒலித்தன. புதிய கல்விக்கொள்கையின் ஓர் அங்கமாக, ஐந்தாம் வகுப்பிலிருந்தே பொதுத்தேர்வுகளை நடத்தியே தீருவோமென்று கடந்த கால அ.தி.மு.க. அரசு, பல்வேறு எதிர்ப்புக்களை மீறி செயல்படுத்த முனைந்தபோது, கொரோனா வந்து அனைத்தையும் கலைத்துப் போட்டது. எக்ஸாம் எக்ஸாம்னா குதிக்கிறீங்க... இனி எந்த எக்ஸாமுமே கிடையாது... அவ்வளவு பசங்களுக்கும் ஆல் பாஸ்தான் என்று சொல்லாமல் சொன்னதில், பள்ளிக்கூடம் போகாமலேயே அனைத்து மாணவர்களும் ஆல் பாஸாகி அடுத்தடுத்த வகுப்புகளுக்கு உயர்ந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் இடைவெளிக்குப் பின் தற்போது பள்ளியில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நவம்பர் மாதத்தில் பள்ளிக்கு வந்து, அடுத்த மார்ச், ஏப்ரலில் தேர்வைச் சந்திப்பது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், பள்ளிக்குச் செல்வதன்மீதான பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாண வர்கள், போதிய கற்றல் இல்லாமலேயே இரண்டு வகுப்புகளைக் கடந்துள்ளார்கள். மாணவர்கள் பயிலும் வகுப்புகளில் ஏற்றம் ஏற்பட்டாலும், அதற்கேற்ப கற்றலில் ஏற்றம் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதேபோல, கொரோனாவால் பெற்றோரின் வருமானம் சரிவடைந்த ஏழைக்குடும்பத்து மாணவர்கள், பள்ளிப்படிப்பையே நிறுத்திய துயரமும் நிகழ்ந்துள்ளது. இதைச் சரிசெய்யும்பொருட்டு தற்போது, 'இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, "இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார் வலர்களை இணைப்பதற்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் வகுப்புகள்வாரி
"ஆல் பாஸ் டோய்!'' என்ற உற்சாகக்குரல்கள்தான் கடந்த இரண்டு கல்வி ஆண்டாக மாணவர்கள் மத்தியில் ஒலித்தன. புதிய கல்விக்கொள்கையின் ஓர் அங்கமாக, ஐந்தாம் வகுப்பிலிருந்தே பொதுத்தேர்வுகளை நடத்தியே தீருவோமென்று கடந்த கால அ.தி.மு.க. அரசு, பல்வேறு எதிர்ப்புக்களை மீறி செயல்படுத்த முனைந்தபோது, கொரோனா வந்து அனைத்தையும் கலைத்துப் போட்டது. எக்ஸாம் எக்ஸாம்னா குதிக்கிறீங்க... இனி எந்த எக்ஸாமுமே கிடையாது... அவ்வளவு பசங்களுக்கும் ஆல் பாஸ்தான் என்று சொல்லாமல் சொன்னதில், பள்ளிக்கூடம் போகாமலேயே அனைத்து மாணவர்களும் ஆல் பாஸாகி அடுத்தடுத்த வகுப்புகளுக்கு உயர்ந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் இடைவெளிக்குப் பின் தற்போது பள்ளியில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நவம்பர் மாதத்தில் பள்ளிக்கு வந்து, அடுத்த மார்ச், ஏப்ரலில் தேர்வைச் சந்திப்பது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், பள்ளிக்குச் செல்வதன்மீதான பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாண வர்கள், போதிய கற்றல் இல்லாமலேயே இரண்டு வகுப்புகளைக் கடந்துள்ளார்கள். மாணவர்கள் பயிலும் வகுப்புகளில் ஏற்றம் ஏற்பட்டாலும், அதற்கேற்ப கற்றலில் ஏற்றம் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதேபோல, கொரோனாவால் பெற்றோரின் வருமானம் சரிவடைந்த ஏழைக்குடும்பத்து மாணவர்கள், பள்ளிப்படிப்பையே நிறுத்திய துயரமும் நிகழ்ந்துள்ளது. இதைச் சரிசெய்யும்பொருட்டு தற்போது, 'இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, "இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார் வலர்களை இணைப்பதற்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் வகுப்புகள்வாரியாக கையேடு தயார் செய்து, தன்னார்வலர்களுக்குக் கொடுக்கப்படும். அதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப் படும். 5-ம் வகுப்பு மாணவர்கள் வரை கற்பிக்கத் தன்னார்வலர்கள் 12-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற வீதத்தில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்தத் திட்டம் செயல்படும். திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கற்றல் இடைவெளியை இந்தத் திட்டம் குறைக்கும். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம்'' என்று குறிப்பிட்டார். இத்திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மரக்காணத்தில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுடன் மாணவர் போல் அமர்ந்து தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டம், மாநில அரசின் 100% நிதிப் பங்களிப்புடன் ரூ200 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. நல்ல நோக்கத்துக்கான திட்டமாகத் தெரிந்தாலும், புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாகவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை உள்நுழைப்பதற்காகவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள தாக சந்தேகமும், குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில், "இல்லம் தேடி வரும் கல்வித் திட்டத்தின்படி, பிளஸ் டூ படித்தவர்களையும், ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களையும் தன்னார்வலர்களாகப் பயன்படுத்தலாம் என்று கூறியிருப்பதைப் பயன்படுத்தி நுழைந்து, பிஞ்சுகளுக்கு பாடம் என்கிற பெயரில் மத நஞ்சுகளை விளைவிக்கவே இந்த சர்க்கரை பூசிய விஷ உருண்டை என்று முன்பே எதிர்த்திருந்தும், அதற்கு தமிழ்நாடு கல்வித்துறை தலையாட்டலாமா?'' என்று கேள்வியெழுப்பியுள்ளார். இத்திட்டம் செயல்படுத்தப்படும் சூழலில், ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான வித்யா பாரதி அமைப்பு, பண்பாட்டு வகுப்புகள் எடுக்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதைத் தொடர்புபடுத்தி விமர்சனங்கள் எழுந்துள்ளன.
"கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.முகம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்கள் கல்வி கற்பதற்காக அந்தந்த பகுதிகளை சார்ந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற புதிய கல்வி கொள்கையின் இன்னொரு முகமாகவே தற்போது தன்னார்வலர்களை வகுப்பெடுக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இருக்கிறது.
அதே சமயம், அந்த தன்னார்வலர்களுக்கான தகுதி என்ன, அவர் எந்த பின்புலத்தை சார்ந்தவர் என்பதைப் பற்றி எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தேர்வு செய்து, மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க நியமிப்பதின் மூலம், சில சமூகவிரோத குரூர எண்ணம் கொண்டவர்கள் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைத்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுகிறது. சமூகநீதியின் மண்ணில் ஒருபோதும் குலக் கல்விக்கு இடமில்லை என்று முழங்கிய தி.மு.க.வின் ஆட்சியில், புறவாசல் வழியாக புதிய கல்விக் கொள்கையின் சாரங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்படுகிறது'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்து, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறனிடம் கேட்டபோது, "இது வரவேற்புக்குரிய திட்டம். கடந்த 19 மாதங்களாக, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு பள்ளியே திறக்க வில்லை. குறிப்பாக, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எழுதுவதே மறந்துவிட்டது. 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு படிக்க வேண்டு மென்ற எண்ணமே போய் விட்டது. நவம்பர் முதல் பள்ளி திறந்துள்ள சூழலில், 1-ம் வகுப்பு மாணவன் மூன்றாம் வகுப்பிலும், 6-ம் வகுப்பு மாணவன் 8-ம் வகுப்பிலும் அமர்ந்திருப் பான். ஆனால் அவனுக்கு பாடங்கள் குறித்து பெரிதாக எதுவுமே தெரியாது. இந்த இடைவெளியை நிரப்பக்கூடிய மாலை நேரக்கல்விதான் இந்த திட்டம்.
ஏற்கனவே செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து இணைப்புப்பயிற்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதேபோல தற்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தன்னார்வலர்கள் மூலமாக மாலை நேரப் பயிற்சி அளிக்கப்போகிறார்கள். இவை, பாடத்திட் டத்தை ஒட்டிய கற்பித்தலாக இருக்கும். இதன்மூலம், விடுபட்டுப்போன பாடங்களை எளிமையான முறையில் கற்பிக்கவுள்ளனர். விளையாட்டு, கதை சொல்லுதல், நாட்டுப்புறக் கலை போன்ற வடிவங் களில், மீண்டும் பள்ளியில் படிப்பதற்கான ஆர்வத்தை மாணவர்கள் மத்தியில் தூண்டுவதற்கான முயற்சி தான் இது. பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் இணைந்து பணி யாற்ற விண்ணப்பித்துள்ள தன்னார்வலர்களில் பலர், ஏற்கனவே ஆசிரியப் பணி களுக்கான தகுதியைக் கொண்டவர்களாகவும், தற் சமயம் வேலையில்லாதவர் களாகவும் இருக்கிறார்கள். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலையீடு கிடையாது. தன்னார்வலர்களுக்கு பயிற்சி கொடுக்கும் இடத்தில் என்போன்ற ஆசிரியர்கள்தான் இருக்கிறோம். மாணவர்களுக்கு எவ்விதம் பாடம் எடுக்க வேண்டும், மாணவர்களை உளவியல்ரீதியாக எப்படி அணுக வேண்டும் என்பதான அணுகுமுறையை நாங்கள்தான் பயிற்சி யளிக்கிறோம். இதில் இந்துத்வா சார்ந்த கல்வி முறையைப் புகுத்த வாய்ப்பேயில்லை" என்றார் உறுதியுடன்.
புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டுவதில் தீவிரமாகக் களப்பணியாற் றிய சமூகச் செயற்பாட்டாளர் விழியன் கூறுகை யில், "அறிவொளி இயக்கத்தின் இன்னொரு வெர்ஷனாக இத்திட்டத்தை நாம் பார்க்கலாம். சமீப காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப்பள்ளி கள் என்ற கான்செப்டின் தாக்கமும் இதில் இருக் கிறது. இந்தத் திட்டம் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் வடிவமைப்பாகவே இருக்கிறது. இதில் ஒன்றிய அரசின் தலையீடு எந்த இடத்திலும் இல்லை. கல்வி சார்ந்த அகரம், வான்முகில், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகளோடு கலந்தாலோசனை செய்துதான் இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை வடிவமைத்திருக் கிறார்கள்.
இதில் ஈடுபடும் தன்னார்வலர்களை, ஆசிரியர்களாலான கல்வி மேலாண்மைக்குழு (School Management Committee)தான் தேர்ந் தெடுத்து, பயிற்சியளித்து செயல்படுத்தும். அதே போல இந்த கல்வி மேலாண்மைக் குழுவானது, கற்பித்தலில் மட்டுமின்றி, பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மாணவர் களுக்கு கற்றலில் இருக்கும் சிரமங்களைக் கண்டறிந்து, அதுகுறித்த விவரங்களை மாநிலக் கல்வித்துறையிடம் பகிர்ந்துகொள்வது என, அரசுப் பள்ளி மாணவர்கள்மீது தனிக்கவனம் செலுத்தவுள்ளது. யுனெஸ்கோ அமைப்பு, கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தோடு பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டு மென்றே குறிப்பிடுகிறது. அந்த பார்வை, இந்தத் திட்டத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன்" என்றார். இந்தத் திட்டம் குறித்து தொடக்கத் திலேயே விமர்சனங்கள் எழுவது நல்லதுதான். மாணவர்களுக்குக் கல்விச்செல்வத்தை ஊட்டு வதில், தமிழ்நாடு அரசு கூடுதல் விழிப்புணர்வு கொள்ள வழிவகுக்கும்'' என்றார்.
விழிப்புணர்வுடன் செயல்படுத்த வேண்டிய திட்டம் இது.