மதுரை திருப்பாலையில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். களத்தில் நேரடி யாக இறங்கிவிட்டதோ என்று மதுரை மக்கள் பீதியில் உள்ளனர். அந்த பகுதியி லுள்ள நல்லமணி அரசு உதவிபெறும் பள்ளியில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்க, அப்பகுதி மக்கள் பதட்டத்தோடு சென்று பார்க்க, அங்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு போலீஸார் பாது காப்புடன் நடந்தது, மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இது தெரிந்ததும் அந்த பகுதி வி.சி.க. மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட, அப்பகுதியில் பதட்டம் அதிகரித்தது. இதுகுறித்து வி.சி.க. ஊடகப் பிரிவு பொறுப்பாளர் செல்ல பாண்டியன் தகவல் தெரிவிக்க, நாம் அங்கு சென் றோம். போலீஸார் அவர் களை உள்ளே விடமறுத்த நிலையில் அவர் நம்மிடம் பேசுகையில், "மதுரை திருப் பாலையில் அரசு உதவி பெறும் நல்லமணி உயர் நிலைப் பள்ளி மற்றும் பி.எட்., கல்லூரி இயங்கிவருகிறது. கடந்த வருடம் இதே திருப்பாலையில், பொங்கல் விழா கொண் டாட்டத்தின்போது பா.ஜ.க.வினர் ஊர்வலமாகச் சென்று, இஸ்லாமிய வீடுகளிலும், திருப்பாலை பள்ளிவாசலிலும் கல் எறிந்தது பெரும் பிரச்சனை யாகி, அந்த கிராம மக்கள் போராட்டம்வரை சென்றது பதட்டத்தை ஏற்படுத்தியது. அடுத்து அதே பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அலுவலகத்தை திறந்து, தொடர்ச்சியாக, கோவில்களில் திருவிளக்கு பூஜை செய்கிறோம் என்று மக்களை திரட்டி செய்துவந்தனர். இந்நிலையில், தி.மு.க. ஆட்சியில் பி.டி.ஆரின் பெருமுயற்சியால் நல்லமணியால் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த 4 வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நடந்துவருகிறது. இதில் மாணவர்களை மூளைச் சலவை செய்வதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலமுறை புகாரளித்தும் பள்ளிக் கல்வித்துறையும் போலீசாரும் கண்டுகொள்வ தில்லை. ஆர்.எஸ்.எஸ். பயிற்சியே போலீஸ் பாதுகாப்பில்தான் நடக்கிறது என்பது இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது. பயிற்சியிலிருக்கும் மாணவர்களிடம் எதற்காக இந்தப் பயிற்சி நடக்கிறதென்று விசாரிக்க, இங்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடக்கிறது. சிலம்பம், துப்பாக்கி சுடுதல், யோகா சொல்லித்தருவார்கள். பள்ளியின் பிரின்ஸிபல் நல்லமணி மற்றும் நிறுவனர் ராஜேந்திரன் இருவரும் சில வரலாறு கள், நல்லொழுக்கக் கதைகள் சொல்வார்கள் என மாணவர்கள் சொல்ல, அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். உடனடி யாக, அப்பகுதி வி.சி.க. தோழர்கள், மாவட்டச் செயலாளர் அரசு முத்துப்பாண்டி ஆகியோரோடு நல்லமணி பள்ளியை முற்றுகையிட்டோம். இந்நிலையில், திருப்பாலை காவல் ஆய்வாளர் அனுராதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கே குவிக்கப்பட்டனர். வி.சி.க.வின ரை பள்ளிக்குள் விடாமல், புகாராக எழுதிக்கொடுங் கள், விசாரிக்கிறோம். வெளியாட்களுக்கு உள்ளே அனுமதியில்லை என்றனர் போலீசார். அப்போது இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போலீசா ரிடம் பேசிக்கொண்டே உள்ளே நுழைவது குறித்து கேட்டபோது, அவர்கள் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என மழுப்பியதோடு, வி.சி.க.வினரை வெளியேறும்படி சொல்கிறார்கள்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/29/school2-2025-12-29-16-27-38.jpg)
இந்நிலையில் நம்மைக் கண்ட போலீசார், நீங்கள் யாரென்று விசாரிக்க, சொன்னதும், "பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை' என்று தடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய வி.சி.க.வின் மாவட்டச் செயலாளர் அரசு முத்து பாண்டி, "திருப்பாலையில் தொடர்சியாக அமைதி யைக் கெடுக்கும் வகையில் சம்பவங்கள் நடந்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவிபெறும் நல்லமணி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்துவருகிறது. திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம்கேட்டு இங்கு வந்து பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி நடப்பது தெரியவந்தது. எங்கள் இளைஞர்கள் இந்த ஷாகா வகுப்பை வீடியோ எடுத்துள்ளனர்'' என்றவர், வீடியோவை காட்டினார். அந்த வீடியோவில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடக்கும்போது அருகில் போலீஸ் வேன் நிற்கிறது. போலீஸார் சம்மதத்துடன் மாணவர் களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடப்பதைப் பார்க்கையில் பகீரென்றானது. திராவிட மாடல் அரசுக்கு எதிராக போலீசார் செயல்படுவதும், சட்டத் துக்குப் புறம்பாக அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடப்பதும் வெட்டவெளிச்சமானது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/29/school3-2025-12-29-16-27-58.jpg)
இப்பள்ளியின் நிறு வனர் நல்லமணி மற்றும் அவரது தந்தை இராஜேந் திரன் ஆகியோர் ஆர்.எஸ். எஸ். நிர்வாகிகள். இப் பள்ளி, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரின் பள்ளி என்பதால், தி.மு.க. ஆட்சியின்போது பி.டி.ஆர். பெருமுயற்சியெடுத்து பி.எட்., கல்லூரிக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார். இப்படி தி.மு.க. ஆட்சியில் பலனடைந்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வளர்க்க இப்பள்ளியைப் பயன்படுத்துவது வேதனை யளிக்கிறது. இதை காவல்துறை வேடிக்கை பார்க் கிறது'' என்றார். இதுகுறித்து கருத்தறிய பள்ளித் தாளாளரை சந்திக்க பள்ளி அலுவலகத்திற்குள் சென்றோம். காவல்துறையும், பள்ளி நிர்வாகமும் அனுமதிக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டோம். போனை எடுத்தவரிடம், நக்கீரன் பெயரைச் சொன்னதுமே போனை கட் செய்துவிட்டு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டார்!
இதுகுறித்து திருப்பாலை காவல் ஆய்வாளர் அனுராதாவிடம் கேட்டபோது, "தமிழ்நாடு கல்வித் துறைக்கும் புகாரை அனுப்பியுள்ளோம். நல்லமணி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா வகுப்பு நடந்தது உண்மை தான். இதுகுறித்து காவல் ஆணையருக்கு தகவல் அனுப்பியிருக்கிறோம்... அவ்வளவுதான் சார் சொல்லமுடியும்'' என்று முடித்துக்கொண்டார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "நீங்கள் சொல்வது சரிதான். தமிழ்நாடு முழுவதும் இதுபோல 34 பள்ளிகளில் இத்தகைய ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்துவந்தது. கல்வித்துறை தலையீட்டுக்குப் பின் பல பள்ளிகள் இதனை நிறுத்திவிட்டன. தற் போது 6 பள்ளிகளில் மட்டும் இது தொடர்கிறது. அரசு உதவிபெறும் இந்தப் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இத்தகைய ஆர்.எஸ். எஸ். பயிற்சிகளை உடனடியாக நிறுத்த அனைத்து வேலைகளையும் செய்கிறோம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/school-2025-12-29-16-27-24.jpg)