Advertisment

ஆர்.எஸ்.எஸ். பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது! காங்கிரஸ் கொந்தளிப்பு!

ff

ந்நிலையில், காந்தியின் பெயரிலான காந்தி அமைதி விருதினை, காந்தியை கொலை செய்த இயக்கமான ஆர்.எஸ்.எஸ். சார்புடைய பதிப்பகம் ஒன்றுக்கு வழங்கியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

1995-ல், மகாத்மா காந்தியின் 125-வது பிறந்தநாளின் போது, மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய ஒன்றிய அரசால் "காந்தி அமைதி பரிசு' என்ற விருது உருவாக்கப்பட்டது. இந்த விருதுடன் ரொக்கப்பரிசாக 1 கோடி ரூபாய், ஒர

ந்நிலையில், காந்தியின் பெயரிலான காந்தி அமைதி விருதினை, காந்தியை கொலை செய்த இயக்கமான ஆர்.எஸ்.எஸ். சார்புடைய பதிப்பகம் ஒன்றுக்கு வழங்கியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

1995-ல், மகாத்மா காந்தியின் 125-வது பிறந்தநாளின் போது, மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய ஒன்றிய அரசால் "காந்தி அமைதி பரிசு' என்ற விருது உருவாக்கப்பட்டது. இந்த விருதுடன் ரொக்கப்பரிசாக 1 கோடி ரூபாய், ஒரு ஷீல்டு மற்றும் நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள்/ கைத்தறிப் பொருள் ஆகியவை வழங்கப்படும்.

rss

தற்போது, 2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். சார்புடைய கீதா பதிப்பகத்துக்கு அறிவிக்கப்பட் டுள்ளது. நூற்றாண்டைக் கொண் டாடும் இப்பதிப்பகத்தை கௌர விக்கும்விதமாக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான தேர்வுக்குழுவே ஏகமனதாக இப்பதிப்பகத்தைத் தேர்வு செய்துள்ளது. இந்தத் தேர்வு தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

rss

கடந்த 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கீதா பிரஸ், 14 மொழிகளில் 41 கோடியே 70 லட்சம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில், 16 கோடியே 21 லட்சம் அளவுக்கு பகவத் கீதை புத்தகங்களை அச்சிட்டுள்ளது. இப்பதிப்பகத்தில் வெளியிடப்படும் நூல்கள் பலவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், சனாதன தர்மம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியதாகும். சனாதன தர்மத்தின் பெருமையைப் பரப்புவது தான் இந்நிறுவனத்தின் நோக்கம் என்று அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

அக்ஷய முகுல் எழுதியுள்ள ஏண்ற்ஹ டழ்ங்ள்ள் ஹய்க் ற்ட்ங் ஙஹந்ண்ய்ஞ் ர்ச் ஐண்ய்க்ன் ஒய்க்ண்ஹ (2015) என்ற நூலின் மூலம், இந்துத்வா இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் கீதா பிரஸ் நிறுவனத்தின் பங்களிப்பு குறித்து எழுதியிருப்பார். இப்படியாக, மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு நேரெதிரான கொள்கையுடைய ஓர் நிறுவனத்துக்கு காந்தி அமைதி விருது கொடுத்திருப்பது, காந்தியையே அவமதிப்பதாகும் என்று காங்கிரஸ் கட்சி கொந்தளிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ், "கீதா பதிப்பகத்திற்கு காந்தி அமைதி பரிசு வழங்கும் முடிவு, உண்மையில் கலிக்கூத்தானது என்றும், இவ்விருதை சாவர்க்கருக்கும், கோட்ஷேவுக்கும் வழங்குவதற்கு ஒப்பானது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். விருதுன்னாலே சர்ச்சை இல்லாமல் எப்படி?!

nkn280623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe