தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி முதல் மூன்று மாதத்திற் கான உரிமைத்தொகை மற்றும் கோடைகால சிறப்புத்தொகுப்பாக 2000 என மொத்தம் 5000 ரூபாயை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். பிப். 13ஆம் தேதி அனைத்துப் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் ஒரே நேரத் தில் இத்தொகை செலுத் தப்பட்டது. இதையறிந்த குடும்பத் தலைவிகள், மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்கள்.
சாவித்திரி, ராசிபுரம்:
நான் ஒரு கூலித் தொழிலாளிங்க. என் வீட்டுக்காரர் செத்து 19 வருஷம் ஆகுது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மாசா மாசம் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கிறாங்க. எனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இருக்கு. அந்தப் பணத்தை வெச்சிதான் மாத்திரை, மருந்து வாங்கிக்கிறேன். பையனுக்கு கல்யாணமாகி குழந்தை குட்டி யோட இருக்கிறான். அவனுக்கு சிரமம் கொடுக்காமல் இருக்க, இந்தப் ப
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி முதல் மூன்று மாதத்திற் கான உரிமைத்தொகை மற்றும் கோடைகால சிறப்புத்தொகுப்பாக 2000 என மொத்தம் 5000 ரூபாயை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். பிப். 13ஆம் தேதி அனைத்துப் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் ஒரே நேரத் தில் இத்தொகை செலுத் தப்பட்டது. இதையறிந்த குடும்பத் தலைவிகள், மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்கள்.
சாவித்திரி, ராசிபுரம்:
நான் ஒரு கூலித் தொழிலாளிங்க. என் வீட்டுக்காரர் செத்து 19 வருஷம் ஆகுது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மாசா மாசம் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கிறாங்க. எனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இருக்கு. அந்தப் பணத்தை வெச்சிதான் மாத்திரை, மருந்து வாங்கிக்கிறேன். பையனுக்கு கல்யாணமாகி குழந்தை குட்டி யோட இருக்கிறான். அவனுக்கு சிரமம் கொடுக்காமல் இருக்க, இந்தப் பணம் உதவியாக இருக்கு. தூங்கி எழுந்து காலையில கண்ணு முழிச்சி பார்க்கிறேன். என் வங்கி கணக்குல முதலமைச்சர் 5000 ரூபாய் போட்டிருக்கிறாரு. எனக்கு ஒரே ஆச்சர்யமாக போச்சுங்க. மீண்டும் இவரே முதலமைச்சராக வரணுங்க.
சாந்தி, கெங்கவல்லி:
என் வங்கிக் கணக்கிற்கு 5000 ரூபாய் பணம் வந்துருச்சுங்க. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷ மாக இருக்குது. தமிழக முதல்வர் ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து உதவி செய்திருக்கிறார். எங்களைப் போன்ற ஏழ்மையில் இருப்பவர்களுக்கு இது பெரிய தொகை. மகளிர் உரிமைத் தொகையை என் பிள்ளை களுக்குதான் செலவு செய்வேன்.
தனலட்சுமி, விருதுநகர்:
"நான் வீட்டுலதான் இருக்கேன். வேற எதுவும் வேலைக்கு போகல. ஐயாயிரம் வந்தது, அன்னைக்கு டி.வி. நியூஸ் பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரியும். அப்புறம் செல்லுல பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இந்த பணத்த வச்சு என் மகள் படிப்பு செலவுக்கு ஆயிரும்."
மலர்விழி, திண்டுக்கல் :
1.31 கோடி பெண்களின் வாழ்க்கையில் நேரடி நம்பிக்கையை விதைத்த வரலாற்றுச்செயல் இது!
சரண்யா, பரமக்குடி:
மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுக்கும் பெருந்தன்மை, பரிவு, பாசம் மற்றும் தாயுள்ளம் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி வாழ்த்தி தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
கனிமொழி, காரைக்குடி:
ஒவ்வொரு மாதமும் எனக்கு வர்ற மகளிர் உரிமைத்தொகைய சேர்த்துவச்சு என்னோட மகளுக்கு பள்ளிக்கூடத்துக்கு பீஸ் கட்டுவேன். ஆனா எலக்சன் வரப்போகுது, இனிமே வராதுன்னு பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க. ஆனா ஸ்டாலின் ஐயா 5000 ரூபாய் போட்டிருக்காங்க. இதவச்சு இந்தாண்டு என்னோட மகளோட ஒரு வருடத்துக்காவது கல்லூரி படிப்புக்கு நான் பீஸ் கட்டிருவேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/5000a-2026-02-19-18-14-11.jpg)
பத்மாவதி, கீழ்பென்னாத்தூர்:
எனக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வருது. அந்த பணத்தை வச்சி வீட்டுக்கு சிலிண்டர் வாங்குறேன், இ.பி. பில் கட்டுறேன். அது இல்லன்னா ரொம்ப சிரமமாயிருக்கும். அதவச்சி தான் குடும்பம் நடத்துறோம். திடீர்னு 5 ஆயிரம் வந்ததும் பெருசா சந்தோசமாகிடுச்சி. நிறைய செலவிருக்கு. இது பெருசா உதவியா இருக்கும்.
ராஜம்மாள், திருவண்ணாமலை:
எனக்கு ரொம்ப வயசாகிடுச்சிப்பா. இந்த வயசுல நான் எங்க கூலி வேலைக்கெல்லாம் போறது? வீட்லயேதான் கிடக்கறேன். மாசாமாசம் ஆயிரம் ரூபா பணம் வருது. அதவச்சி தான் வீட்டுக்கு பருப்பு, எண்ணெய், காய்கறியெல்லாம் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். இப்போ 5 ஆயிரம் வந்திருக்கு, கொஞ்சம் நல்ல சாப்பாடா சாப்பிட்டுக்குவோம் கண்ணு.
சீனி உசேன் பீவி, நெல்லுபேட்டை:
நான் கனவுல கூட நினைக்கவில்லை. அலாரம் வச்ச மாதிரி முதல்வர் ஸ்டாலின் தான் எழுப்பிவிட்டார். என் போனுக்கு மெசேஜ்ல 5000 ரூபாய் என்று வந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னால நம்ப முடியவில்லை. எங்க ஏரியாவிலுள்ள மற்ற பெண்களும் என்னிடம் இதுபற்றி போன் போட்டு கேட்கறப்பவே முதல்வர் டிவியில வந்து இதுகுறித்து பேசுனப்ப, என்னை போன்ற பெண்களுக்கு ஒரு அப்பாவாக, அண்ணனாக தெரிகிறார்.
லட்சுமியம்மாள், அம்பை:
2 மாடுகள வச்சு மேச்சலுக்கு விட்டு வேல பாக்குறேன்யா. ஒருநாள் கூலி கெடைக்கும், மறுநாள் கெடைக்காது. குடும்பச் செலவு ஏனோதானோன்னு தான் இருக்கும். இதனால பல நேரத்துல அரகொற பட்டினியோட இருந்துருக்கோம். வீட்டுக்காரரால நடக்கமுடியாது, என் ஒருத்தி சம்பளம் மட்டும்தான். எந்த மூலைக்கு அது எட்டும்யா. எம்.ஜி.ஆர்., அம்மா எல்லாம் வந்துருக்காங்க. யாரும் குடுக்காத திட்டத்த, தொகைய ஸ்டாலின் ஐயா குடுத்துருக்காங்க. அவரால இப்ப பசியில்லாம இருக்கோம்யா. நன்றி மறக்க மாட்டோம்யா. இத நிப்பாட்டாம நடைமுறைப்படுத்தணும்யா.
-ராம்கி, நாகேந்திரன், ராஜா, அண்ணல், இளையராஜா, இராம்குமார்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us