Advertisment

ரூ.50 கோடி கோயில் சொத்து! அதிரடியாக மீட்ட அமைச்சர் சேகர்பாபு

sekarbabu

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமான ஏறத்தாழ 50 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, பா.ஜ.க. பிரமுக ரிடமிருந்து மீட்டு, பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றிருக்கிறது அமைச்சர் சேகர்பாபுவின் அறநிலையத் துறை.

Advertisment

திருவண்ணாமலை வடக்கு கோபுரமான, அம்மணியம்மன் கோபுரம் எதிரே, 23,800 சதுர அடியில் அம்மணியம்மன் மடமும் அதையொட்டிய இடமும் 400 ஆண்டுகளாக உள்ளது. பராமரிப்பு இல்லாமல் இருந்துவந்த அந்த மடத்தை, சிலர் பராமரிப்பு என்ற பெயரில் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்திடமிருந்து பெற்று நிர்வகித்து வந்தனர்.

kk

இந்த மடத்தின் மீதும் இடத்தின் மீதும் கண் வைத்த, இந்து முன்னணி மாவட்ட தலைவராக இருந்த வழக்கறிஞர் சங்கர் என்பவர், அம்மணியம் மன் பரம்பரையினர் மூலமாக ட்ரஸ்ட்டை உருவாக்கி, அந்த இடத்தை, தனது ட்ரஸ்ட் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் அவர் இரண்டு அடுக்கு மாடி வீட்டையும், கடைகளையும், அலுவலகத்தையும் அமைத்துக் கொண்டார்.

Advertisment

sekarbabu

தி.மு.க. ஆட்சி வந்தபின், ஆக்ரமிப்பில் உள்ள இந்துசமய அறநிலைய

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமான ஏறத்தாழ 50 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, பா.ஜ.க. பிரமுக ரிடமிருந்து மீட்டு, பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றிருக்கிறது அமைச்சர் சேகர்பாபுவின் அறநிலையத் துறை.

Advertisment

திருவண்ணாமலை வடக்கு கோபுரமான, அம்மணியம்மன் கோபுரம் எதிரே, 23,800 சதுர அடியில் அம்மணியம்மன் மடமும் அதையொட்டிய இடமும் 400 ஆண்டுகளாக உள்ளது. பராமரிப்பு இல்லாமல் இருந்துவந்த அந்த மடத்தை, சிலர் பராமரிப்பு என்ற பெயரில் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்திடமிருந்து பெற்று நிர்வகித்து வந்தனர்.

kk

இந்த மடத்தின் மீதும் இடத்தின் மீதும் கண் வைத்த, இந்து முன்னணி மாவட்ட தலைவராக இருந்த வழக்கறிஞர் சங்கர் என்பவர், அம்மணியம் மன் பரம்பரையினர் மூலமாக ட்ரஸ்ட்டை உருவாக்கி, அந்த இடத்தை, தனது ட்ரஸ்ட் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் அவர் இரண்டு அடுக்கு மாடி வீட்டையும், கடைகளையும், அலுவலகத்தையும் அமைத்துக் கொண்டார்.

Advertisment

sekarbabu

தி.மு.க. ஆட்சி வந்தபின், ஆக்ரமிப்பில் உள்ள இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் துறை அமைச்சரான சேகர்பாபு. தமிழகம் முழுவதும் பலகோடி ரூபாய் சொத்துக்களை அவர் மீட்டுவரு கிறார். அந்த வகையில் அம்மணியம்மன் மடம் பற்றிய வழக்கு குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்ட போது, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, அந்த இடத்தை மீட்பதற்கான வேலையைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். திருவண்ணாமலை உரிமையியல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. இந்து முன்னணியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த சங்கர், பா.ஜ.க. ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநில துணைத்தலைவ ரானார். தேசிய தலைவர்களான அமித்ஷா உள் ளிட்ட பல தலைவர்களுடனான நெருக்கத்தால், கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அற நிலையத்துறையின் நடவடிக்கையில் இருந்து நழுவிவந்தார். அமைச்சரின் உத்தரவால் சுறு சுறுப்பான அறநிலையத்துறை அதிகாரிகள், அதிரடி வேகத்தில் செயல்படத் தொடங்கினர்.

இந்த மடம் தொடர் பான வழக்கு 4.5.22 அன்று விசாரணைக்கு வந்தபோது, சங்கர் ஆஜராகாததால் அந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என தீர்ப் பானது. இதை எதிர்த்து சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனு வில் போதிய ddஆவணங் கள் இல்லாததால் 2023, மார்ச் 13ஆம் தேதி, அவ ருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மார்ச் 15ஆம் தேதி கோவில் நிர்வாகம் சார்பில் சங்க ருக்கு நோட்டீஸ் வழங்க முடிவு செய்தனர். அவர் வீடு பூட்டி இருந்ததாம். இந்த நிலையில், சங்க ருக்காக ஒன்றிய அமைச் சர்கள் சிலர், கலெக்டர் முருகேஷிடம் பேசிய தாக கூறப்படுகிறது.

எனினும், மார்ச் 18ஆம் தேதி காலையில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்போடு, அந்த இரண்டு மாடிக்கட்டிடம் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கோவில் சொத்தை மீட்ட தமிழக அரசுக்கு நன்றி என விஷ்வ இந்து பரிஷித்தும் போஸ்டர் அடித்து நகரமெங்கும் ஒட்டியுள்ளது. ஆக்ரமிப்பு வீட்டை இடிக்கும்போது அருகிலிருந்த கருங்கல்லால் ஆன அம்மணியம்மன் மண்டபமும் இடிக்கப்பட்டது. இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இதன் இடிப்பு வேலை மட்டும் பாதியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்துபோன பா.ஜ.க. சங்கர் செய்தி யாளர்களிடம் பேசியபோது, "ஆக்ரமிப்பு என என் வீட்டையும், சம்மந்தமே இல்லாத அம்மணியம்மன் மடத்தையும் இடித்துவிட்டனர். இதற்குக் காரணமான வர் அமைச்சர் எ.வ.வேலுதான். ஏற்கனவே ஒரு மடத்தின் இடத்தை ஆக்கிரமித்த அவர், இப்போது இந்த இடத்தை ஆக்கிரமித்து தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு, சட்டத்துக்கு புறம்பாக இடிக்கச் செய்துள்ளார், இதனை நான் விடமாட்டேன்''’என்று குற்றம்சாட்டினார்.

மீட்கப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என சொல்லப்பட்டாலும், இதன் மதிப்பு இன்னும் அதிகம் என்கிறார்கள் விபரமறிந் தோர்.

திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள மடங்களைக் குறிவைத்து பிரச்சனைகளை உருவாக்கி, அதனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல்கள், இதன் மீதும் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைக்கு அங்கு பார்க்கிங் அமைக்கலாம், பின்பு நீண்டகால குத்தகைக்கு எடுத்து அந்த இடத்தில் ஹோட்டல் கட்டலாம் என அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.

அண்ணாமலையார் கோவில் பக்தர்களோ, "தினமும் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் கோவிலுக்குள்ளும், கோவிலுக்கு வெளியிலும் இல்லை. பக்தர்களிடம் சிறப்பு தரிசனம் என்கிற பெயரில் ஆயிரம், ஆயிரமாக பணம் வாங்கிக் கொண்டு அவர்களை ஸ்பெஷலாக கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர் கோவில் ஊழியர்களும், அர்ச்சகர்களும். இதனால் கடந்த பௌர்ணமியன்று பக்தர்கள் - கோவில் பணியாளர் களிடையே வாக்குவாதமாகி பக்தர்கள் மீது கோவில் பணியாளர்கள் தாக்கு தல் நடத்தினர். இந்த பிரச்சனை களைத் தவிர்க்கவும், இடத்தைப் பாதுகாக்கவும், மீட்கப்பட்ட இடத்தில் திருப்பதிபோல் பக்தர்கள் காத்திருப்பு அறையை உருவாக்கி சிறப்புக் கட்டணத்தில் சிறப்பு தரிசனத்தை உருவாக்கலாம். அதனால் கோவிலுக்கு வருமானமும் வரும்''’என்கிறார்கள் அக்கறையாக.

கோயில் ஆக்கிரமிப்புகளை மீட்டிருக்கும் அறநிலையத்துறையைப் பாராட்டும் பொதுமக்கள், மீட்கப்பட்ட இடங்களில் பக்கதர்களுக்குப் பயன் படும் வகையிலான வசதிகளை உருவாக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்கள். அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு இதை கவனிப்பாரா?

-து.ராஜா

nkn250323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe