Advertisment

ரூ.399 விலை மிஷின் 10,000 ரூபாயாம்! உருட்டிய அண்ணாமலை!

dd

மீபத்தில் கோவை குறிச்சி பகுதியில் மாற்றுத்திறனாளி களுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவைகளை வழங்கும் நிகழ்வை கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந் தது, இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தேர்வு செய்யப்பட்ட 99 பய னாளிகளைக் கட்டி யணைத்து போஸ் கொடுத்து, காது கேட்கும் கருவிகளையும், சிலருக்கு செயற்கை கால்களையும் வழங்கினார். இதில் பலருக்கு காது கேட்கும் கருவிகளைப் பொருத்தி, அவர்களோடு பேசுவதுபோல மாஸாக புகைப்படத்துக்கு போஸ் கொட

மீபத்தில் கோவை குறிச்சி பகுதியில் மாற்றுத்திறனாளி களுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவைகளை வழங்கும் நிகழ்வை கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந் தது, இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தேர்வு செய்யப்பட்ட 99 பய னாளிகளைக் கட்டி யணைத்து போஸ் கொடுத்து, காது கேட்கும் கருவிகளையும், சிலருக்கு செயற்கை கால்களையும் வழங்கினார். இதில் பலருக்கு காது கேட்கும் கருவிகளைப் பொருத்தி, அவர்களோடு பேசுவதுபோல மாஸாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். அதன்பின் மைக்கில் அவர் பேசியதுதான் அவருக்கே பூமராங்காகத் திரும்பியுள்ளது

Advertisment

dd

"தேசத்தை இதயத்தில் வைத்து நடக்கும் கட்சி பா.ஜ.க. கடவுளுக்கு மிக நெருக்கத்தில் இருப்பவர்கள், உடலில் சிறு குறைகளுடன், மனதில் எந்த குறையும் இல்லாதவர்களே. அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மெஷினும் 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடிய மெஷின்!" என ஒரு உருட்டு உருட்டிவிட்டு, தொடர்ந்து வழக்கம்போல் தி.மு.க. ஆட்சியைத் திட்டித் தீர்த்தார்.

மேடையில் வழங்கப்பட்ட 40 டெசிபல் வரை கேட்கும் திறன், 10 கிராம் எடை, 6 வால்யூம் லெவல் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய மிஷினை மிகக்குறைந்த விலையில் பலரும் பயன்படுத்திவரும் நிலையில், அதற்கு பத்தாயிரம் ரூபாயென்று அண்ணாமலை குறிப்பிட்டதை சம்பந்தப்பட்ட பா.ஜ.க.வினரே சந்தேகமாகப் பார்க் கும்போது, சாமானியர்களுக்கு சந் தேகம் வராதா என்ன? உடனே அந்த கருவியின் விலை குறித்து இணையத்தில் அடித்துப் பார்த்ததில், வெறும் 399 ரூபாய்க்கு விற்கப்படுவது தெரியவர, அண்ணாமலையின் மலையளவு பொய் அப் பட்டமாக வெளிப்பட் டது! இது வெறும் பொய் மட்டும் தானா? அல்லது 399 ரூபாய் பொருளுக்கு 10,000 ரூபாயென பொய்க்கணக்கு எழுதப்பட்டதா? எனப் பலரும் கேள்வியெழுப்ப, விழாவை ஏற்பாடு செய்த தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் நெளிந்துவருகிறார்கள்.

"இது, ரஃபேல் வாட்ச் விவகாரத்துக்குப் பிறகு அண்ணாமலையின் லேட்டஸ்ட் உருட்டு! தான் என்ன சொன்னாலும் ஜனங்க நம்புவார்கள், தனது வார் ரூம் மூலமாக நம்ப வைக்கலாமென்ற எண் ணத்தில் தன் மனம்போன போக்கில் பொய்களை அண்ணாமலை அவிழ்த்துவிடுகிறார். இத்தனைக்கும், இந்த மெஷினை உள்ளூர் ரோட்டரி நபர்கள் உதவியுடன்தான் அண்ணாமலை பெற்றார். அதையே தனக்கான விளம்பரமாக்க முயன்று குட்டு வெளிப் பட்டிருக்கிறது. இதெல்லாம் ஒரு பிழைப்பா?'' என் கிறார் அதே பகுதியை சேர்ந்த ரோட்டரி நபர் ஒரு வர். முன்பெல்லாம் அண்ணாமலை எது சொன்னா லும், காயத்ரி ரகுராமிலிருந்து அனைத்து பா.ஜ.க. சீனியர்களும் ஆதரவாகக் களமிறங்குவார்கள். ஹனி ட்ராப் விவகாரம் வெளியானதால் தனித்துவிடப் பட்டுள்ள அண்ணாமலையின் அடுத்தடுத்த பொய்யான பேச்சுக்கள், டெல்லி தலைமையையே யோசிக்க வைத்திருக்கிறதாம்!

Advertisment

nkn281222
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe