""நான் உங்கிட்ட எவ்ளோ கொடுத்தேன்?''

""120 ரூவா குடுத்தீங்க''

cc

""என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?''

Advertisment

""ஆத்து மணல் 1 கன அடி வாங்கிட்டு வரச் சொன்னீங்க''

""கடைக்காரன் கிட்ட கேட்டியா?''

""கேட்டனே''

Advertisment

""என்ன சொன்னான்?''

""ஆத்து மணல் கன அடி 120 ரூவா சொன்னான்''

""நீ என்ன பண்ண?''

""நான் எம்சாண்ட் (Msand) வாங்கிட்டேன்''

""எம்சாண்ட் விலை என்ன?''

""1 கன அடி 50 ரூவா''

""சரி! நான் உங்கிட்ட 120 ரூவா குடுத்தேன்ல. அதுல, 50 ரூவாய்க்கு வாங்குன எம்சாண்ட் இங்கே இருக்கு. மீதி 70 ரூவா எங்கே இருக்கு..?''

""அதாண்ணே இது..''

"கரகாட்டக்காரன்' பட செந்தில்-கவுண்டமணி யின் நகைச்சுவை காட்சியை நினைவுபடுத்தினாலும் இது சிரிப்பதற்கு அல்ல. மாநகராட்சி பள்ளிகளுக்கும் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கும் நிதி ஒதுக்கமுடியவில்லை என்று சொல்லிக்கொண்டே… ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் 1000 கோடி ரூபாயை சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.

மணல்கொள்ளை அதிகரித்து இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதால் கடந்த 2017-ல் ஆற்றுமணல் குவாரி களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இத னால், வீடுகள், கட்டி டங்கள் கட்டு வதற்கு மணல் தட்டுப்பாடு ஏற் பட்டது. மேலும், 1 கன அடி 40 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த ஆற்றுமணல் 120 ரூபாயாக விலையேற்றம் ஆனது. இதனால், பாறைகளிலிருந்து உடைத்து எடுக்கப்படும் எம்சாண்ட் எனப்படும் புதிய மணல் புழக்கத்திற்கு வர ஆரம்பித்தது. இது, 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய்வரை விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.

cc

இந்நிலையில், அரசாங்க திட்டங்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை எம்சாண்ட் எனப்படும் புதிய ரக மணலைத்தான் பயன்படுத்திவருகிறது அரசாங்கம். ஆனால், சமீபத்தில் கான்கிரீட் சாலைகள், நடை பாதைகள், மழைநீர் வடிகால், கட்டிடங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என அரசுத்திட்டங்களுக்கு ஆற்றுமணலை பயன்படுத்தலாம் என்று சட்டத்துக் குப்புறம்பாக டெண்டரில் அறிவித்ததோடு, குறைந்த விலை விற்கும் எம்சாண்ட் மணலை பயன்படுத்திவிட்டு ஆற்றுமணலை பயன்படுத்தியதுபோல் கணக்குக் காட்டித்தான் மக்களின் வரிப்பணமான சுமார் 1000 கோடி ரூபாயை மோசடி செய்திருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறது லஞ்ச ஊழலுக்கு எதிரான அறப்போர் இயக்கம்.

எப்படி நடந்தது மாபெரும் ஊழல்? அறப்போர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் நாம் கேட்டபோது, ""சிமெண்ட், மணல், ஜல்லி இவை மூணும் கலந்த கலவைதான் ரெடிமிக்ஸ் (கலவை)கான்கிரிட். இதில், எம் 20, எம் 30 என கூடக் கூட கட்டுமானத்திற்கான தரமும் ஸ்ட்ராங் தன்மையும் கூடும். 1 க்யூபிக் மீட்டர் அளவு கொண்ட எம் 20 கலவையின் விலை 3,700 ரூபாய்தான். பயன்படுத்தினால் ஆள்கூலியுடன் சுமார் 5,200 ரூபாய்தான் செலவாகும். ஆனால், எம் 30 கலவையின் விலை 4,300 ரூபாய். ஆள்கூலியுடன் சேர்த்து சுமார் 5,800 ரூபாய் செலவாகும். தரமும் வலுவும் குறைந்த எம் 20 கலவையை கட்டுமானத்திற்கு பயன்படுத்திவிட்டு எம் 30 கலவைக்கான செலவு செய்ததாக நம்மை ஏமாற்றி கொள்ளையடித்திருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்களும் மாநகராட்சி அதிகாரிகளும். அப்படியென்றால், விலைகுறைந்த எம்சாண்டை பயன்படுத்திவிட்டு விலை அதிகமுள்ள ஆற்றுமணலை வாங்கியதாக ஒரு கொள்ளை. தரம் குறைந்த எம் 20 கலவையை பயன்படுத்திவிட்டு எம் 30 கலவையை பயன்படுத்தியதாக இன்னொரு கொள்ளை. இதன்மூலம், சந்தைமதிப்பைவிட 25 சதவீதம் கூடுதலாக என 2017 லிருந்து 2019 வரை மூன்று வருடங்களில் சுமார் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

ஆற்றுமணல் பயன்படுத்தக்கூடாது என்று தமிழக அரசே அறிவித்தபிறகு, ஆற்றுமணலைப் பயன்படுத்தலாம் என்று அப்போதைய சூப்பி ரெண்டண்ட் என்ஜினியரும் தற்போதைய சீஃப் என்ஜினியருமான நந்தகுமார் மற்றும் தற்போதைய பிரின்ஸ்பல் சூப்பிரெண்டண்ட் என்ஜினியர் மற்றும் மாநகராட்சி கமி ஷனர் பிரகாஷ் ஆகி யோர் டெண்டரை அறிவித்ததே தவறு. இப்படி, அறிவித்த தால்தான் ஒப் பீட்டளவில் மிகக் குறைந்த விலை விற்கும் புதியவகை எம்சாண்ட் மணலை பயன்படுத்திவிட்டு விலை அதிகமாக விற்கும் ஆற்றுமணலை பயன்படுத்திய தாக ஊழல் நடந்திருக்கிறது'' என்று குற்றஞ்சாட்டுகிறார். மேலும், அர சாங்கத்தின் கட்டுமானப் பணிகளில் எம்சாண்ட்தான் பயன்படுத்தப்பட்டி ருக்கிறது என்றும் எம் 20 கலவைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் ஆய்வகப் பரிசோதனையிலும் ஆதாரப் பூர்வமாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரகாஷிடம் நாம் கேட்ட போது, ""சந்தை மதிப்பில் ஆற்று மணலை விட எம்சாண்ட் விலை குறைவாக இருப்பதைக் கணக்கிட்டு ஊழல் நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால், அரசு டெண்டரில் அறிவித்த விலை ஆற்று மணலை விட எம்சாண்ட் விலை கூடுதலானது. அதனால், இதில், ஊழல் எதுவும் நடக்கவில்லை'' என்றார் அவர் தரப்பு விளக்கமாக.

-மனோசௌந்தர்

படம் : ஸ்டாலின்