டைசிநேர கல்லா கட்டுவதில் கடந்த ஜனவரி மாதமே மும்முரமாக இயங்கத் துவங்கிவிட்டனர் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள். அப்படி இயங்கியதில் அரசுக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனியாருக்குத் தாரை வார்த்துள்ள விவகாரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

Advertisment

hh

அந்த ஊழல் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோருக்கு எதிராகக் கிரிமினல் வழக்குத் தொடர அனுமதிக்குமாறு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. தி.மு.க.வின் இந்த புகார் மீது, கவர்னர் கவனம் செலுத்துவதால் எடப்பாடியும் பன்னீரும் அதிர்ச்சியில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.

கவர்னருக்கு அனுப்பியுள்ள புகார் குறித்து ஆர்.எஸ்.பாரதியிடம் நாம் கேட்டபோது, ""தமிழக அரசின் வருவாய்த்துறைக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலம் கோயம்பேடு பகுதியில் இருக்கிறது. இந்த பகுதியில் ஒரு சதுர அடி நிலத்தின் சந்தை மதிப்பு 25,000 ரூபாய். அதன்படி கணக்கிட்டால், 10.5 ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 1,134 கோடி ரூபாய். ஆனால், சதுர அடி 12,500 ரூபாய் எனக் கணக்கிட்டு, சுமார் 560 கோடிக்கு பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் என்கிற தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் உதய்குமார் ஆகியோர் இணைந்து தாரை வார்த்திருக் கிறார்கள். சந்தை மதிப்பைவிட குறைத்துக் கொடுக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது? ஏன்னா, அந்த தனியார் நிறுவனத்தின் மறைமுக பார்ட்னராக இருக்கிறார் ஓ.பி.எஸ்.

Advertisment

d

அரசு நிலம் என்பது பொதுப் பயன்பாட்டுக்கானது. அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை அரசு நிலத்தை அரசாங்கம் விற்பதாக இருந்தால், சந்தை மதிப்புக்கு இணையாக அல்லது அதைவிடச் சற்று குறைவாக ஒரு விலையை நிர்ணயித்து, அதன் பிறகு பொது ஏலத்தில் விடப்பட வேண்டும். அப்படித்தான் அரசு நிலத்தை விற்க முடியுமே தவிர, நேரடியாக ஒரு நிறுவனத்துக்குத் தூக்கிக் கொடுத்திட முடியாது. அப்படிக் கொடுத்தால் அது சட்டவிரோதம்.

dd

Advertisment

அந்த சட்டவிரோதத்தைத்தான் எடப்பாடி, பன்னீர், உதயகுமார் கூட்டணி செய்திருக்கிறது. இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துணை போயிருக்கிறார்கள். மறைமுக பார்ட்னராக ஓ.பி.எஸ். இருக்கும் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துக்கு அரசு நிலத்தை தாரை வார்க்க கடந்த ஜனவரியில் திட்டமிட்டு பிப்ரவரியில் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நடக்க ஓரிரு மாதங்களே இருந்த நிலையில், அரசின் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றாமல் தனியாருக்கு அவசரம் அவசரமாக விற்கப்பட்டுள்ளது.

எடப்பாடி அரசு முறைகேடாக விற் பனை செய்த அந்த 10.5 ஏக்கர் நிலத்தில், 2078 அடுக்குமாடிக் குடி யிருப்புகளைக் கட்ட பாஷ்யம் கன்ஸ்ட்ரக் சன் தீர்மானித்துள்ளது. அதற்குத் தேவையான ப்ளானிங் அப்ரூவல், பில்டிங் அப்ரூவல் உள்ளிட்ட பல அனு மதிகளை துரிதகதியில் தந்துள்ளது ஓ.பி.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் சி.எம்.டி.ஏ. நிறுவனம். ஓ.பி. எஸ்.சின் உத்தரவில் உடனடி அனுமதிகள் தருவதற்கு சம்மந்தப் பட்ட துறைகளின் அதிகாரிகள் உடந் தையாக இருந்துள்ளனர்.

சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நில விவகாரம் என்பதால் முதலமைச்சர் எடப்பாடிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், எடப்பாடி, பன்னீர், உதயகுமார் மற்றும் உயரதிகாரிகள் அனைவருக்கும் பெரிய அளவில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனியார் நிறுவனத்தின் மூலம் எப்படி அபகரிக்க முயன்றாரோ அப்படித்தான் இந்த விவகாரத்திலும் நடந்துள்ளது.

அதனால்தான் இவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடர கவர்னர் பன்வாரிலாலின் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளேன். நிச்சயம் அனுமதி கிடைக்கும். மூவரையும் அவர்களுக்குத் துணையாக இருந்த அதிகாரிகளையும் கூண்டில் ஏற்றாமல் விடமாட்டோம்''‘என்கிறார் மிக ஆவேசமாக.

தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும் தொழில்துறை தரப்பில் விசாரித்தபோது, ’கட்டுமானத் தொழிலின் வளர்ச்சிக்காகக் குறிப்பிட்ட அந்த நிலத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு சில மாதங்களுக்கு முன்பு தொழில்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் ஒரு கோரிக்கை, பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் தரப்பிலிருந்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக, சம்மந்தப்பட்ட நிறுவனமும் ஆட்சியாளர்களும் விவாதித்து பேசிவைத்துக் கொண்டதன் அடிப்படையிலேயே இந்த கோரிக்கையை வைத்தது பாஷ்யம் நிறுவனம். அந்த கோரிக்கையின் அடிப் படையில், மாவட்ட நிர்வாகத் தின் கருத்தினைக் கேட்போம் என்று முடிவு செய்து, சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அனுப்பி வைத்தது.

அந்த கோப்புகளைக் கவனித்த கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறையின் எக்ஸ்பர்ட் கமிட்டியிடம் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த எக்ஸ்பர்ட் கமிட்டியும், அரசின் நத்தம் பொறம்போக்கு நிலமாக இருப்பதால், தொழில் வளர்ச்சியின் நலன் கருதி, சம்மந்தப்பட்ட நிலத்தை வழங்கலாம் என்றும், அதற்காக, சதுர அடி ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவிலான தொகையை வசூலிக்கலாம் என்றும் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இதனை அரசின் கவனத்துக்கு அனுப்பி வைத்தார் வருவாய்த்துறைச் செயலாளரான கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ்.

dd

உடனே எடப்பாடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிலத்தைத் தாரைவார்க்க ஒப்புதலை பெற்றனர். பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ச னுக்கு ஆதரவாக அன்றைக்கு மொத்த அமைச்ச ரவையும் செயல்பட்டது. இதனடிப்படையில், பாஷ்யம் நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ்‘’ என்று விவரித்தனர் விஷயம் தெரிந்த அதிகாரிகள்.

மேலும் நாம் விசாரித்தபோது, ""அரசிடமிருந்து பெற்ற நிலத்தில் 15 ரெசிடென்சியல் டவர்களைக் கட்டுகிறது பாஷ்யம் நிறுவனம். சில டவர்களில் 24 மாடிகளும் (ப்ளோர்ஸ்), சில டவர்களில் 26 மாடிகளும் உண்டு. இந்த 15 டவர்களில் மொத்தம் 2,078 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுகின்றனர். இதில், குறைந்தபட்சம் 686 சதுர அடி முதல் அதிகபட்சம் 3,182 சதுர அடி வரையிலான குடியிருப்புகள் உண்டு. அதில் சிங்கிள் பெட்ரூம் முதல் 4 பெட்ரூம் வரையிலான குடியிருப்புகள் கட்டத் தீர்மானித்துள்ளனர். பாஷ்யம் நிறுவனம் நிர்ண யித்துள்ள விலை ஒரு சதுர அடிக்கு 7,599 ரூபாய்.

gஅந்த வகையில் கட்டப் படவுள்ள 2,078 குடியிருப்புகள் மூலம் தோராய மாக 3,150 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வாய்ப்பு இருக்கிறது. இதில் அரசு நிலத்துக்காகக் கொடுக்கப் பட்ட தொகை, கட்டு மானத்திற்கான தொகை மற்றும் நிலத்தைக் கொடுக்க உதவிய ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கான அன்பளிப்பு என 2,000 கோடி ரூபாய் செலவானாலும் சுமார் 1,150 கோடி ரூபாய் தனியாருக்கு லாபம் கிடைக்கலாம். தனியார் நிறுவனம் லாபம் ஈட்ட எடப்பாடி அரசு உதவியதற்குப் பதில், இதே திட்டத்தை அரசாங்கம் செய்திருந்தால் அரசுக்கு 1000 கோடிக்கும் மேலே வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் அதனைச் செய்ய அரசு தயாராக இல்லை. தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்தால் மட்டுமே தங்களுக்குக் கிடைப்பது கிடைக்கும் என முடிவு செய்து அரசு நிலத்தைத் தாரை வார்த்துள்ளனர்'' என்கிறது தமிழக தொழில்துறை அதிகாரிகள் தரப்பு.

இதுகுறித்து பாஷ்யம் தரப்பில் கருத்தறிய முயற்சித்தபோது, "மார்க்கெட்டிங் பிரிவில் இப்போது யாரும் இல்லை' என்றதோடு, முக்கியப் பொறுப்பிலுள்ள யாருடைய தொடர்பு எண்களையும் தர மறுத்துவிட்டனர்.

வருவாய்த்துறைச் செயலாளர் அதுல்யாமிஸ்ரா வின் கருத்தறிய பலமுறை முயற்சித்தும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரை தொடர்புகொண்டபோது, ’’""தொழில் வளர்ச்சியை அதிகரிக்க தொழில் நிறு வனங்களுக்கு எந்த அடிப் படையில் அரசு நிலங்கள் ஒதுக்கப்படுகிறதோ அந்த வகையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் பாஷ்யம் நிறுவனத்துக்குக் குறிப்பிட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. தொழில் நிறுவனங் களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு பொது ஏலத்தில் விடப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக சிப்காட், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலம் ஒதுக்குவோம். ஆனா, இந்த நிலத்திற்கு மானிய விலையே கிடையாது. கலெக்டர் அலு வலகத்திலுள்ள எக்ஸ்பர்ட் கமிட்டி பல ஆய்வுகளை நடத்தி நிர்ணயித்துள்ள விலையின் அடிப்படையில் தான் கொடுத்துள்ளோம். தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக வெளி மாநிலங்களில் இலவசமாக நிலங்கள் கொடுக்கப்படுகிறது.

ஆனால், தமிழக அரசு அப்படிச் செய்வதில்லை. அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்கிறோம். இந்த கட்டுமானத் தொழில் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும், அரசுக்கு வருவாயும் கிடைக்கவிருக்கிறது. தொழில் வளர்ச்சிப் பெருக வேலைவாய்ப்பு முக்கியமில்லையா? பாஷ்யம் நிறுவனம் மட்டும்தான் அந்த இடத்தை விலைக்குக் கேட்டு கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, எக்ஸ்பெர்ட் கமிட்டியின் கருத்துகள் கேட்கப்பட்டன. கமிட்டி கொடுத்த பரிந்துரைகளை அமைச்சரவை ஒப்புக் கொண்டதால் பாஷ்யம் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது. இதில் சட்ட விதிகள் மீறப்படவில்லை. ஊழல்களோ, முறைகேடுகளோ நடக்கவுமில்லை. மேலும் சந்தை மதிப்பு என்பது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பும் ஊழலும் எப்படியெல்லாம் பெருகும்’ என அரசுத் தரப்பில் விளம்பரம் தரப்பட்டது. அதனை ஜீரணிக்க முடியாமல்தான் எங்களுக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கவர்னரிடம் தந்துள்ளது தி.மு.க.'' என்கிறார் அதிரடியாக.

ஆனால், எந்த கோணத்தில் விசாரித்தாலும் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்த நில விவகாரம், அ.தி.மு.க. ஆட்சி யாளர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், மிக கனமான ஊழல் நடந்திருப்பதையும் சுட்டிக்காட்டு கிறார்கள் தொழில்துறையினர்.

-இரா.இளையசெல்வன்