இங்க உழைச்ச வங்களுக்கு மரி யாதை இல்லை. எனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்க'' என நியாயம் கேட்டு தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவ சமூகப் பெண்மணி ஒருவர் கண்ணீருடன், பனையூரில் நடிகர் விஜய்யின் காரை மறித்த சம்பவத் தால் தங்களின் நிலைகுறித்து அச்சப்பட்டுள்ளனர் துவக்க கால விஜய் மக்கள் இயக்கத்தினர்.
விஜய் மக்கள் இயக்கமாக இருந்து த.வெ.க.வாக மாறிய கட்சிக்கு 120 மா.செ.க்களை நியமித்த நடிகர் விஜய், திருச்சி, திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஏனோ மா.செ.க்களை நியமிப்பதைத் தவிர்த்துவந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று தூத்துக் குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான மா.செ.வை அறிமுகப்படுத்த இருக்கின்றார் என ஞாயிற்றுக்கிழமையன்றே தகவல் வர, திங்கட்கிழமையே ஆஜராகினர், தூத்துக்குடி மாவட்ட த.வெ.க. கட்சியில் தான் தான் மா.செ. என மல்லுக்கட்டிக்கொண் டிருக்கும் அஜிதா ஆக்னல், எஸ்.டி.ஆர்.சாமுவேல், முருகன், ஒட்டப்பிடாரம் பாலா உள்ளிட்டோர்.
"சென்னைக்கு வந்ததுமே அஜிதா ஆக்னலுக்கு மா.செ. பதவி இல்லையென எங்களுக்குத் தெரிந்தது. தலைவர் விஜய் இதுகுறித்து அறிவிக்கவில்லை என்றாலும், தூத்துக்குடி மத்திய மா.செ. வாக எஸ்.டி.ஆர்.சாமுவேல் அறிவிக்கப்படவிருக்கின்றார் என கட்சி அலுவலகத்திலுள்ள நம்பகமானவங்க மூலம் தகவல் உறுதியானது. த.வெ.க. மக்கள் இயக்கமாக இருந்த காலம்தொட்டே அஜிதா ஆக்னல் அக்கா செய்யாத மக்கள் தொண்டே இல்லை. அதற்கு முன்னதாக அவருடைய உடன்பிறந்த அண்ணன் பில்லா ஜெகன் விஜய் ரசிகராக, விஜய் மக்கள் இயக்கத் தொண்டனாக ஏறக்குறைய 25 ஆண்டுகளாக வலம்வந்தவர். ஒருகட் டத்தில் விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக உருவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாக, தான் சார்ந்திருக்கும் கட்சி தான் முக்கியம் என விஜய்யிடமிருந்து வெளியேறினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/tvkajitha1-2025-12-26-11-26-14.jpg)
"நீ போனாலும் பரவாயில்லை, உன் வீட்டிலிருந்து ஒருத்தர் வந்தால் தூத்துக்குடி மாவட்டமே என் வசம் இருக்கும்' என நடிகர் விஜய்யே கேட்டுக்கொண்டதன் பேரில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு வந்தவர் அஜிதா ஆக்னல். அண்ணனைவிட துறுதுறுப்பாக வேலை பார்த்து விஜய்யிடமே பாராட்டு வாங்கினார் அக்கா. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு (விக்கிரவாண்டி) தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பாதுகாப்புக் குழு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளராக அஜிதா ஆக்னலுக்கு பொறுப்பு வழங்கியது தலைமை. இதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் கட்சிக்கு வந்தார் எஸ்.டி.ஆர்.சாமுவேல். 25 ஆண்டு காலம் விஜய்யுடன் பயணித்ததை ஒரேநாளில் மாற்றிவிட்டு, நேற்று வந்தவருக்கு பதவிகொடுத்துள்ளது த.வெ.க. தலைமை. இதற்கு நியாயம் கேட் டோம். கட்சித்தலைமை அனுமதிக்கவில்லை. எங்களது நிலையைக் கூற வேறுவழியில்லாத தால் விஜய் காரை மறிக்க வேண்டியதாயிற்று'' என்றார் தூத்துக்குடியிலிருந்து வந்த விஜய் ரசிகர் ஒருவர்.
பனையூரிலுள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த நடிகர் விஜய்யின் காரை வழிமறித்து நியாயம் கேட்ட அஜிதா ஆக் னலை, பெண்ணென்றும் பாராமல் அவரது இடுப்பில் கைவைத்து இழுத்து அப்புறப்படுத் தினர் த.வெ.க. பவுன்சர் கள். ஆனால், இது குறித்து த.வெ.க. கட்சி யினர் யாரும் வாய்திறக்க வில்லை என்பது குறிப் பிடத்தக்கது. விஜய் வெளி யில் வராமல் அஜிதா ஆக்னலைப் புறக்கணித்த நிலையில், நிர்மல்குமார் வெளியில் வந்து அவரிடம் சமாதானம் பேசினார். தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலக வாயிலில் ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு தன்னுடைய எதிர்ப்பைக் காண்பித்தவர், அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார்.
அஜிதா ஆக்னல் மீனவ சமூகம். அதுபோக அவருடைய அண்ணன் தி.மு.க.காரர். தி.மு.க. குடும்பத்தினைச் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுக்கக்கூடாது எனத் தலைமை முடிவெடுத்ததாக ஒருசாரர் குறிப்பிடுகின்றனர். அஜிதா ஆக்னல் தி.மு.க. குடும்பத் தினைச் சேர்ந்தவர் என்றால் எஸ்.டி.ஆர். சாமுவேலின் ஒரு அண்ணன் எஸ்.டி.ஆர். விஜயசீலன் த.மா.கா. இருமுறை தேர்தல் போட்டியி லிருந்தவர். இன்னொரு அண்ணன் எஸ்.டி.ஆர். பொன்சீலன் தி.மு.க. சிறுபான்மையினர் அணி. இது தெரியவில்லையா விஜய்க்கு..? என்கின்ற கேள்வியும் அனைவரது மத்தியிலும் எழுந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி ஒருவரோ, "இந்தம்மா செய்வது எல்லாம் அடாவடித்தனம்தான். கட்சியில் யாரையும் மதிப்பதில்லை. குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலையணிவிப்பதில் தொடங்கி, முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு மாலையணிவிப்பது வரை அஜிதா ஆக்னல் வைப்பது தான் சட்டம். இவரைத் தவிர யாரும் மாலையணிவிக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்திருக்கிறார். விக்கிரவாண்டி முதல் மாநில மாநாட் டிற்கு செல்லும் ஆலோசனைக் கூட்டத்தினை இவர் தனி யாகவும், சாமுவேல் தனியாகவும் கூட்டியதும் தனிக்கதை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/tvkajitha2-2025-12-26-11-26-35.jpg)
தென்மண்டல அமைப்பாளராக இருந்த சஜி இவருடைய அடாவடியைக் கண்டித்தார். இதுகுறித்து தலைமைக்கும் தெரிவிக்கவே, தூத்துக்குடிக்கான மா.செ. பதவி காத்திருப்பிலேயே வைக்கப்பட்டது. எனினும், சஜி, அஜிதா ஆக்னலுக்கு ஆதரவாகவே இருந்துவந்தார். சஜி மறைவிற்குப் பின் எஸ்.டி.ஆர்.சாமுவேல், புஸ்ஸி ஆனந்துடன் நெருக்கமானார். அந்த நெருக்கத்தின் அடிப்படையில் ரூ.10 கோடி கைமாறியதாகவும், அந்த தொகை வெளியில் தெரியாமல் இருக்க நாடார் சமூகத் தினை சேர்ந்த ஒருவருக்கு மா.செ. பதவி கொடுத்தால்தான் சரியாக இருக்கும் எனப் புள்ளி விவரங்களை அடுக்கியும், மீனவ சமூகத்தினை சேர்ந்த அஜிதா ஆக்னலை புறக்கணித்து நாடார் சமூக சாமுவேலுக்கு மா.செ. பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், இது எங்குபோய் முடியப்போகின்றது.? எனத் தெரியவில்லை'' என்றார் அவர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/tvkajitha3-2025-12-26-11-28-07.jpg)
பணமும், சாதியும் இருந்தால்தான் த.வெ.க.வில் பதவியா.? என சலசலப்பு எழுந்துள்ளது. இப்பொழுது அஜிதா ஆக்னல்.! இதற்கு முன்னால் இதுபோல் புறந்தள்ளப்பட்டவர்தான் காட்பாடியை சேர்ந்த தாஹிரா. இவருடைய பதவியை பறித்துத் தான் நிர்மல்குமாருக்கே கொடுத்தனர் என்பதும் வெளியாக, கட்சியில் நம்முடைய நிலை என்ன? என விஜய் ரசிகர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
- வேகா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/tvkajitha-2025-12-26-11-26-03.jpg)