ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் என்று நான்கு கூறாக அ.தி.மு.க. இருக்கின்ற நிலையில், தங்கள் தரப்பு பலத்தைக்காட்ட சமீபத்தில் திருச்சியில் ஓ.பி.எஸ். அணியினர் மாநாட்டை நடத்தினர். பேசிய காசுக்கு எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வந்திருந்தாலும், ஓ.பி.எஸ். சிறப்புரையில் சுவாரஸ்யம் எதுவும் இல்லாததால், அவர் பேசத்தொடங்கிய பத்தே நிமிடங்களில் கூட்டம் கலைய ஆரம்பித்தது. மாநாட்டுக்குப் பின்னரோ, அ.தி.மு.க. ஆட்சியில் தலைமை கொறடாவாக இருந்த திருச்சி ம
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் என்று நான்கு கூறாக அ.தி.மு.க. இருக்கின்ற நிலையில், தங்கள் தரப்பு பலத்தைக்காட்ட சமீபத்தில் திருச்சியில் ஓ.பி.எஸ். அணியினர் மாநாட்டை நடத்தினர். பேசிய காசுக்கு எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வந்திருந்தாலும், ஓ.பி.எஸ். சிறப்புரையில் சுவாரஸ்யம் எதுவும் இல்லாததால், அவர் பேசத்தொடங்கிய பத்தே நிமிடங்களில் கூட்டம் கலைய ஆரம்பித்தது. மாநாட்டுக்குப் பின்னரோ, அ.தி.மு.க. ஆட்சியில் தலைமை கொறடாவாக இருந்த திருச்சி மனோகரன், மாநாடு முடிந்த சில நாட்களில், டி.டி.வி. அணியிலிருந்து வெளியேறி எடப்பாடி யிடம் தஞ்சமடைந்தார். எப்படியாவது திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பை வாங்கிவிட வேண்டுமென்பதே அவரது இலக்கு.
ஏற்கெனவே எடப்பாடியிடம் தஞ்ச மடையத் தயாராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மாவட்ட செயலாளர் கனவுக்கு மனோகரன் ஆப்பு வைப்பதாக இருப்பதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இன் னொருபக்கம், எடப்பாடி ஆதரவாள ராகவே இருக்கும் ஆவின் கார்த்தியும் தனக்கு அந்த பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார். எனவே தற்போது போட்டி அதிகரித்துள்ளதால், ஓ.பி.எஸ். அணிக்குச் சென்றதன்மூலம், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக வெல்லமண்டியின் நிலை மாறிவிட்டது. தற்போது ஓ.பி.எஸ். அணியிலும் அவருக்கு பெரிய மரியாதை எதுவும் இல்லை. பெரிய அளவில் ஆள் பலம் இல்லாத முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கும், வெல்ல மண்டிக்கும் இடையே மல்லுக்கட்டு நடக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வைத்திலிங்கம் சீட்டு வாங்கிக் கொடுத்தார் என்ற விசுவாசத்திற்காக ஓ.பி.எஸ். அணியில் நீடித்து வந்த வெல்லமண்டி, தற்போது எங்கு ஒதுங்குவதென்று ஊசலாட்டத்தில் இருக்கிறார். திருச்சி புறநகர் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, முன்னாள் எம்.பி. குமார் என எடப்பாடி ஆதரவாளர்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ள நிலையில், சமீபத்தில் சேலத்திற்கு வந்திருந்த எடப்பாடியை தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்து, கட்சியில் இணைந்துள்ளார் மனோகரன். முன் னாள் அமைச்சர் காமராஜ், மாநகர் மாவட்ட பதவி வாங்கிக் கொடுப்பதாகக் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் தான் மனோகரன் எடப்பாடியுடன் இணைந்ததாகக் கூறப்படு கிறது. சீனிவாசனும் இதேபோல் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடியை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்துள்ளார். ஜெயலலிதா இருந்தபோது திருச்சி உறையூரில் உள்ள எம்.ஜி.ஆர். பங்களா சாவி யாருடைய கைக்கு செல்கிறதோ அவர்தான் மாநகர் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்படுவார். இந்த முறையும் அதை எடப்பாடியார் பின்பற்றுவாரா என்று சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.