பரிமலையில் பெண்களுக்கு அனுமதி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பல லட்சம் கோடி பெறுமான சொத்துகளை அரசுடைமையாக்குதல் போன்றவை, கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசால் முன்னெடுக்கப்பட்ட விவகாரங்களாகும். தற்போது, பத்மநாபசுவாமி கோவிலை நிர்வகிப்பதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உரிமை உள்ளது’ என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, கேரள அரசுக்கு ù"கொட்டாரமும் கோவிலும் அரசுக்கே சொந்தம்' என்ற கேரள அரசின் வாதம் உச்ச நீதி மன்றத்தில் ஏன் எடுபடவில்லை? ஐதீகங்கள் மற்றும் பக்தர்களின் நம்பிக்கை என பின்னிப் பிணைந்துள்ள, அந்தக் கோவிலின் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம்!

dd

பதினெட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகச் சொல் லப்படும் பத்மநாபசுவாமி கோவில், தேசத்தின் 108 திருப்பதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. திருப்பதி வெங்கடாசலபதியின் சொத்துகளை மிஞ்சும் அளவுக்கு, நாட்டின் பணக்கார சாமியாக, பக்தர்களால் வழிபடப்படுகிறார், பத்மநாபசுவாமி. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் குடும்பத்தின் குலதெய்வக் கோவில் இது. மேல்சட்டை அணியாமல், வேட்டி உடுத்தும் ஆண்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல முடியும். மாடர்ன் டிரஸ் அணியும் பெண்களுக்கு அனுமதியில்லை. அந்த அளவுக்கு, கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

சுதந்திர இந்தியாவில், மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டி, அனைத்து சமஸ்தானங்களையும் ஒன்றிணைத்தபோது, 1949-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட சித்திரை திருநாள் மகாராஜா, பத்மநாபசுவாமி கோவில் மற்றும் அரண்மனை களை நிர்வகிக்கும் அதிகாரத்தை, மன்னர் குடும்பத்தினருக்கே அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது ஏற்கப்பட்டு, சர்தார் வல்லபாய் படேல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisment

இந்த சித்திரை திருநாள் மகாராஜாதான், அனைத்து தரப்பினரும் ஆலயப் பிரவேசம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தி, பத்மநாபசுவாமி கோவிலுக்குள் மக்களை நுழைய வைத்தவர். அதுபோல், கடல் கடந்து சென்றவர்களுக்கு, கோவிலுக்குள் செல்ல இருந்த தடையையும் நீக்கியவர். 1991-ல் சித்திரை திருநாள் மகாராஜா இயற்கை எய்தினார். அவரைத் தொடர்ந்து, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பொறுப்பேற்ற பிறகுதான், காலப்போக்கில் இக்கோவிலில் சர்ச்சைகள் வெடித்தன.

தினமும் அதிகாலையில் நடக்கும் நிர்மால்ய பூஜையை, மன்னர் குடும்பத்தினர் மட்டுமே காண முடியும் என்ற நிலையில், 2007, செப்டம்பர் 11-ஆம் தேதி, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, கோவில் நிலவறைகளைத் திறந்து, தங்க நகைகள், வைரங்கள், வைடூரியங்கள், தங்க கிரீடங்கள் போன்ற விலைமதிப்பற்ற சொத்து களைக் கணக்கெடுக்க முயற்சித்தார் என்றும், அப்போது, பிரசாதம் கொண்டுசெல்லும் பாயசம் வாளியில் நகைகளைக் கடத்திச் சென்றதாகவும், கோவில் ஊழியர்கள் இருவர் குற்றம் சாட்ட, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தனும், மன்னர் குடும்பத்துக்கு எதிராக, இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார்.

சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னரும், கோவிலை நிர்வகிக்க ஒப்பந்தம் போட்டவருமான சித்திரை திருநாள் மகாராஜா இறந்ததுமே, அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. பிறகெப்படி, பருத்த ஏமாற்றம் தருவதாக உள்ளது.

Advertisment

dd

பத்மநாபசுவாமி கோவில் வழக்கு கடந்துவந்த பாதை இது - கோவில் நிர்வாகத்தின் முறைகேடுகள் தொடர்பாக தொடரப் பட்ட வழக்கில், பத்மநாபசுவாமி கோவிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும், மன்னர் குடும்பத்தினருக்கு உரிமையில்லை என்றும், கோவில் மற்றும் சொத்துகளை நிர்வகிப்பதை கேரள அரசே எடுத்துக் கொள்ளலாம் என்றும், 2011-ல் தீர்ப்பளித்தது, கேரள உயர் நீதிமன்றம். இதனை எதிர்த்து மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில்தான், மன்னர் குடும்பம் மகிழ்ச்சியடையும் விதத்தில், தற்போது தீர்ப்பு வந்திருக்கிறது.

பின்வரும் வாரிசுகள் கோவிலில் உரிமை கொண்டாட முடியும்?’ எனக் கேள்விகள் எழுந்த நிலையில், 2009-ல் சுந்தர்ராஜன் என்ற ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி, கோவில் நிலவறைகளைத் திறந்து, அதிலுள்ள நகைகளை கேரள அரசு கணக்கெடுக்க வேண்டு மென்று உயர் நீதிமன்றத்தை நாடினார். 2010-ல், உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கோவில் நிலவறை களில் இருப்பவை பொதுச் சொத்து அல்ல. அது பத்மநாபசுவாமியினுடையது. அதனைப் பராமரிக்கும் உரிமை, ராஜ குடும்பத்துக்கு மட்டுமே உரித்தானது. நிலவறையை திறப்பதற்கு முடிவு எடுக்கும் உரிமையும் ராஜ குடும்பத்தினருக்கே உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நிலவறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அதனை எதிர்த்து ராஜ குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, தடையும் பெற்றுவிட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தலைமையில் குழு அமைக்கப் பட்டு, ddகணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஆய்வில், ஆ‘நிலவறையான, பண்டார வக நிலவறை யில் மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டன. மற்ற அறைகளில் கண்டெடுக்கப்பட்ட சொத்துகளை, பல குழுக்களை மாற்றியும், கடந்த 9 ஆண்டுகளில் முழுமையாக கணக்கெடுக்க முடியவில்லை. இந்நிலையில், இ அறையான பரதகோன் நிலவறையைத் திறக்க முடியாமல், உடைக்க முற்பட்டபோது, ‘இ நிலவறை திறக்கப்பட்டால், நாட்டுக்கும் மன்னர் குடும்பத்துக்கும் பேராபத்து’ என உச்ச நீதிமன்றத் தில் மன்னர் குடும்பம் முறையிட, அந்த அறை மட்டும் இன்னும் திறக்கப்படவே இல்லை.

தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பில், மன்னர் குடும்பத்தின் தலைமையில் இந்து விசுவாசிகள் 5 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, கோவிலை நிர்வகிக்க வேண்டுமென்றும், இ நிலவறையைத் திறப்பது குறித்து, அந்தக் கமிட்டி முடிவெடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவிலில் இத்தனை நிலவறைகள் எதற்காக அமைக்கப்பட்டன?

வரலாற்று ஆய்வாளரான எமிலி கில்கிறிஸ்ட் ஹட்ச், தான் எழுதிய ’திருவிதாங்கூர் - பார்வை யாளர்களுக்கான வழிகாட்டி’ என்ற புத்தகத்தில், நாட்டில் பஞ்சம் மற்றும் தீர்க்க முடியாத நோய்கள் வந்தால், அதற்கு செலவு செய்வதற்காகவே, சொத்து கள் சேர்க்கப்பட்டு, ரகசிய அறைகளில் வைக்கப் பட்டிருந்தன. அதுபோன்ற நெருக்கடியான நேரத்தில், நிலவறைகளைத் திறந்து, தேவைப்படும் சொத்துகளை எடுத்து, செலவழிப்பதற்காகவே, இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதுபோன்ற ஒரு தேவைக்காக, 1903-ல் தீப்பந்தம் ஏந்தி நிலவறைகள் திறக்கப்பட்டபோது, பாம்பு உருவத்தில் நகைகள் இருந்ததாகவும், பல தலைகளைக் கொண்ட நாகங்களும், அதன் கண்கள் வைடூரியத்தின் ஜொலிப்பில் மின்னியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு வெளிவந்து, மன்னர் குடும்பத்தினரும், பக்தர்களும் இனிப்பு வழங்கி கொண்டாடிவரும் நிலையில், ‘மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே, சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பி லான 769 தங்க கலசங்கள் காணாமல் போய்விட் டன’ என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சுவாமிக்கு சொந்தமான சொத்துகள் மீது யாரெல்லாம் கை வைத்தனர்? யாரெல்லாம் குறி வைத்தனர்? அந்த பத்மநாபனுக்கே வெளிச்சம்!

- மணிகண்டன்

அரசியல்வாதிகள் பிடியிலிருந்து மீட்ட நீதிமான்கள்!

பக்தர்கள் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் நாயர், ""பத்மநாப சுவாமியின் சொத்தில் கை வைக்கலாம் என்று அரசியல்வாதிகள்

dd

மனப்பால் குடித்தனர். அதற்காகத்தான், அச்சுதானந்தனும், பினராய் விஜயனும் பத்ம நாபசுவாமியின் விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், சொத்துகளையும் மியூசியத்தில் வைத்து, அதனை அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் விடலாம் என்ற நோக்கத்தில் செயல்பட்டனர். கருப்பட்டி பானைக்குள் கைவிட்டவர்கள், அடுத்து என்ன செய்வார்கள் என்று தெரியாதா? இதனை உணர்ந்தே நீதிமான்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்'' என்று குதூகலித்தார்.

அரசியல்வாதிகள் குறித்த பொதுவான இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், ""குருவாயூர் தேவசம் போர்டு போல், ஒரு போர்டு(வாரியம்) உருவாக்க வேண்டுமென்று இருந்தோமே தவிர, நேரடியாக அரசு கையகப்படுத்த வேண்டு மென்ற நிலைப்பாட்டில் இல்லை. தீர்ப்பினை ஏற்றுக்கொள்கிறோம்'' என்றார்.