நெடுநாட்களுக்குக் கேட்காமல் இருந்த போலீசாரின் துப்பாக்கிச் சத்தமும், என்கவுன்ட்டருக்கு எதிரான குரல்களும், சென்னைக்கு மிக அருகிலேயே திரும்பவும் எழுந்துள்ளன. ரவுடிகள் நடுவே சினிமா பாணியில் எழுந்த காதலும், அதையொட்டி அவர்களுக்குள் எழுந்த மோதலும்தான் அதற்கு அடித்தளம் போட்டது செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற கார்த்திக், செங்கல்பட்டு தி.மு.க. பிரமுகரான ரவிபிரகாஷ் கொலைவழக்கில் தொடர்புடைய ரவுடி. இவனின் கூட்டாளியான ஹரிகிருஷ்ணன், மகேஷ், தீனா என்கிற தினேஷ், பிஸ்கெட் என்கிற மொய்தீன், மாது என்கிற மாதவன் என அனைவரும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியின் கூட்டாளிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள், பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால், காவல் நிலையத்தில் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் அனைவரும் நண்பர்களைப்போல் ஒன்றாகவே சுற்றித் திரிவதோடு, தொடர்ச்சியாக, வழிப்பறி செய்வது, மாமூல் வசூலிப்பது என குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தினேஷ் என்பவனின் தங்கை பவித்ராவை, கூட்டாளியான ஹரிகிருஷ்ணன் காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் தினேஷுக்குத் தெரியவர, ஹரிகிருஷ்ண னைக் கண்டித்துள்ளான். இதேவேளை யில் ஹரிகிருஷ்ணன், தனது கூட்டாளி யான அப்பு என்ற கார்த்திக்கிடம், தான் தினேஷ் தங்கை பவித்ராவைக் காதலிப்ப தாகவும், தினேஷிடம் பேசி திருமணம் செய்துவைக்கும்படியும் கேட்டுள்ளான்.
ஹரிகிருஷ்ணனுக்காக தினேஷிடம் அப்பு தரப்பு நண்பர்கள், இந்த காதலை ஏற்கும்படி சமாதானப் பேச்சுவார்த் தையில் இறங்கியிரு

ஹரிகிருஷ்ணனுக்காக தினேஷிடம் அப்பு தரப்பு நண்பர்கள், இந்த காதலை ஏற்கும்படி சமாதானப் பேச்சுவார்த் தையில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், சமாதானத்தை தினேஷ் ஏற்காததால், பேச்சுவார்த்தை முற்றி இரு தரப்புக்கும் இடைப்பட்ட மோதலாக மாறியது. இதனால் கோபமான அப்பு தரப்பு, தினேஷோடு தாக்குதலில் ஈடுபட்டதில், தினேஷின் காலில் பலத்த அடி விழுந்தது.
இந்த விவகாரம் காவல் நிலையம் வரை செல்ல, தினேஷைத் தாக்கிய அப்பு மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையே காதலர்களான தினேஷின் தங்கை பவித்ராவுக்கும், ஹரிகிருஷ்ண னுக்கும் இடையே, தினேஷின் எதிர்ப் பையும் மீறி நண்பர்கள் உதவியோடு திருமணம் முடிந்தது. இதனால் இரு தரப்புக்குமிடையே மோதல் மேலும் மேலும் அதிகரிக்க, காவல்துறையில் வழக்குப் பதியப்பட்டதில், நீதிமன்ற உத்தரவுப்படி, அப்புவும் அவ ரது கூட்டாளி களும் கடந்த ஒன்பது மாதங்களாக செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையெழுத்து போட்டு வந்தனர்.
கடந்த சில நாட்களாக, காவல் நிலையத்தில் மாலை வேளையில் கையெழுத்துப் போட வருமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி, அப்புவும், தொடர்ந்து மாலை நேரத்தில் காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்து போட்டுவந்தான். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை யின் வாய்தா, கடந்த ஜனவரி 5-ஆம் தேதி வந்தது. அங்கு ஆஜரான அப்பு, நீதிமன்ற வளாகத்தில் தினேஷைச் சந்தித்து சமாதான முயற்சியில் இறங்கியிருக்கிறான். "உன் தங்கை பவித்ராவுக்கும் ஹரிக்கும் திருமணம் முடிந்து ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பிரச்சினையே வந்தது. அவர்களே சந்தோசமாக வாழ்ந்துவரும் நிலையில், இனியும் இந்த பிரச்சனையை நீட்டிக்கொண்டே செல்வதில் அர்த்தமில்லை. எனவே இந்த வழக்கை நமக்குள் சமாதானமாக முடித்துக்கொள்வோம்'' என்று பேசிப்பார்த்திருக்கிறான்.
ஆனால், தினேஷுக்கோ, தன்னை மீறித் தனது தங்கை திருமணம் முடித்ததில் அப்போதுவரை கோபம் தீராமல் இருந்தது. அந்த திருமணம் நடக்கக் காரணமாக இருந்த அப்பு தரப்பு மீதும் கோபம் குறையாமல் இருந்தது. எனவே, "துரோகிகளுக்கு மன்னிப்பில்லை' என்று அப்பு தரப்பு மீது தினேஷ் தரப்பினர் கடுகடுப்புடன் கூறியிருக்கிறார்கள். இருவருமே ரவுடிகளாகத் திரிபவர்கள் என்பதால், அப்பு தரப்பினரும் அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல், "உன் உயிர் என்னால்தான் போகப்போகுது' என தினேஷுக்கு சவால்விட்டு அனல் பறக்க விட்டிருக்கிறார்கள். இவையனைத்தும் திரைப்படங்களில் வரக்கூடிய பழிக்குப்பழி வாங்கும் காட்சியமைப்பு போலவே இருந்திருக்கிறது.
அப்பு தரப்பின் கொலை மிரட்டலுக்குப்பின் தினேஷ் தரப்பு ரொம்பவே அலர்ட் ஆனது. தங்களுக்கு எதிராக ஏதேனும் சதித்திட்டம் தீட்டப்படுகிறதா என்பதை வேவு பார்த்ததோடு, தன்னைப் போட்டுத் தள்ளுவதற்கு முன், அப்புவைப் போட்டுத்தள்ள வேண்டுமென்று முடிவெடுத்தனர். அதற்கான ஸ்கெட்ச் போட்டு நாள் குறித்ததோடு, திருப்போரூரைச் சேர்ந்த ரவுடி அசோக்குமார் என்பவரின் மனைவி ஜெசிகா மூலமாக, நாட்டு வெடிகுண்டுகளையும் வாங்கிப் பதுக்கியிருக்கிறார்கள். எதிர்பார்த்தபடி, கடந்த ஜனவரி 6-ம் தேதி, காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவந்த அப்புவைப் பின்தொடர்ந்த தினேஷின் கொலைக் கும்பல், செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள கோட்டிநாயக்கர் டீக்கடை அருகே சென்ற அப்பு மீது நாட்டு வெடிகுண்டை வீசி நிலைதடுமாறி விழச் செய்திருக்கிறார்கள். பின்னர், அங்கே மறைந்திருந்த அனைவரும் பயங்கர ஆயுதங்களுடன் அப்புவை சுற்றிவளைத்து, சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
மிகவும் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்க்கப்பட்ட அப்பு, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அப்பு வைக் கொன்றதோடு ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், அப்பு வுக்குத் துணையாக நின்று திருமணத்தை நடத்தச்செய்த அப்பு வின் கூட்டாளியான மகேஷின் வீட்டுக்குச் சென்றனர். வீட்டினுள் திமுதிமுவென நுழைந் தவர்கள், மகேஷையும் சரமாரியாக வெட்டி யதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு கொலைகள், அதிலும் பேருந்து நிலையத்தின் அருகிலேயே நடந்த கொலை யால், செங்கல்பட்டு நகரமே பரபரப்பானது. இரட்டைக் கொலை நடைபெற்ற செய்தியறிந்த உடனேயே சம்பவ இடங்களுக்கு விரைந்துவந்த செங்கல்பட்டு போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த இரட்டைக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பேரில், ஆறு தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இந்த கொலைச் சம்பவத்தில் சம்பந்தப் பட்டவர்கள் ஏற்கனவே காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கும் ரவுடிகள் என்பதால், கொலையாளிகளை அடையாளம் காண்பதில் பெரிய சிக்கல் ஏற்படவில்லை. உத்திரமேரூர் அருகே மாதவன் என்பவரையும், நாட்டு வெடிகுண்டு களைக் கொடுத்த ஜெசிகாவையும் காவல்துறையின் தனிப்படை கைது செய்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலை வைத்து, பிஸ்கெட் மொய்தீன், தினேஷ் இருவரும் பதுங்கியிருந்த பள்ளிமலைப் பகுதிக்கு இன்ஸ்பெக் டர் ரவிக்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அங்கு விரைந்து சுற்றி வளைத்தனர். போலீசார் சுற்றி வளைத்ததைக் கண்டதும் இருவரும் தங்களிடமிருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது வீசி வெடிக்கச் செய்ததில், ஒரு குண்டு மட்டும் வெடித்தது. மற்றொன்று வெடிக்கவில்லை. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பதட்டமான காவல்துறையினர், பதுங்கியிருந்தவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதில், பிஸ்கெட் மொய்தீன், தினேஷ் இருவருக்கும் இடது மார்பில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். இது குறித்து, காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், "இது தற்காப்புக்காக நடந்த என்கவுன்ட்டர்''’என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ரவுடிகளின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. ரவுடிகளின் கொட்டத்தை அடக்கவே என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை இப்பகுதிக்கு பணி மாறுதல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ரவுடிகளுக்குள் ஏற்பட்ட காதல், கல்யாணம், பழி வாங்கும் வெறியால் ஏற்பட்ட இரட்டைக் கொலைகளின் காரணமாகவே தவிர்க்க முடியாமல் இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், மனித உரிமை ஆர்வலர்களும், சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையுள்ளோரும், நீதிமன்றம் எதற்கு இருக்கிறது, காவல்துறையே சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது என்ற ஆட்சேபக் குரல்களை எழுப்பியுள்ளனர்.