ங்ககிட்ட எத்தனை போர்ஸ் இருந்தாலும், எனக்கிருக்கின்றது ஒரே போர்ஸ். ஆசிட் டாங்கர் லாரியை வைத்து ஐந்நூறு பேரையாவது கொளுத்துவேன்'' என டி.ஜி.பி.க்கு நெல்லையில் சவால்விட்ட ஒருவனை சென்னையில் கைதுசெய்து என்கவுன்ட்டருக்கு நாள் குறித்திருக்கின்றது காவல்துறை என்கின்ற தகவலால் தென் மாவட்ட சாதீய ரவுடிகள் மத்தியில் கலக்கம் உருவாகியுள்ளது.

murder

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் என்றாலே பதட்டத்தின் பிறப்பிடம். அதிலும் குறிப்பாக சமுதாயக் கொலைகள் இந்த மாவட்டங்களில்தான் அதிகம். அனேகக் கொலைகளில் தேவர், நாடார், யாதவர், தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், கொலையாளிகள் ஆவதும் தொடர்கதை. கடந்த ஏப்ரல் 22 அன்று பாளையங்கோட்டை சிறைச்சாலையில் விசாரணை சிறைவாசியாக இருந்த முத்துமனோ என்பவர் மூன்றடைப்பு காவல் நிலைய வழக்கு ஒன்றிற்காக நான்குநேரி நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்ப சிறைக்கு வந்த பொழுது ஜாகுவார் ஜேக்கப் உள்ளிட்ட 7 நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சாதீயக் கொலை என சர்ச்சை வெடித்த நிலையில், உறவினர்களின், சமூகத்தினரின் எதிர்ப்பால் 73 நாட்கள் கழித்து உடல் அவரது தந்தையான பாபநாசத்திடம் ஒப்படைத்தது காவல்துறை.

அன்றைய தினமே பழிக்கு பழி எடுத்தாக வேண்டும் என்கின்ற சபதத் தால், அடுத்த சில நாட் களிலேயே வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்த கண்ணனை வெட்டி எறிந்தனர் சிறையில் கொலையுண்ட முத்துமனோ சமூகத்தினை சார்ந்தவர்கள். மேலும் சாதீயக் கொலைகள் நடக்காதவாறு காவல்துறை விழிப்புடன் பாதுகாப்பை பலப்படுத்திய வேளையில், கண்ணனின் நண்பரான "கோழி'அருள் காவல்துறைக்கு சவால்விடுத்து வாட்ஸ்ஆப்பில் ஆடியோ வெளியிட்டான்.

Advertisment

"சாதி வெறியோடு காவல்துறையில் ஆட்கள் இருக்காங்க. அதை மாத்திக் கணும். கண்ணன் கொலையில் கைது செய்திருக்கிறீங்க. இப்ப செங்கோட்டையில் எடுத் திருக்கின்ற அத்தனை பேரும் தேவையில்லாத ஆட்கள். உண்மையான சம்பவத்தில் ஈடுபட்டவங்களை கைது செய்யணும். இல்லையென்றால் ஒவ்வொரு ஏரியாவிலும் ஐம்பது பேரை இறக்கி "அந்த ஆட்களை' கொலை செய் வேன். உங்ககிட்ட ஸ்டிரைக் கிங் போர்ஸ், எஸ்.ஐ.-ன்னு ஆட்கள் இருப்பாங்க. என்கிட்ட இருக்க ஒரே போர்ஸ் ஆசிட் டாங்கர் லாரி போர்ஸ். அதை வைச்சு 500 பேரையாவது கொன்னுபுடு வேன். நான் அப்பவே ஜான்பாண்டியனோட வக்கீல் ஸ்டான்லி பெஞ்சமினை கொலை செய்தவன். என்கிட்ட வேண்டாம்... இப்ப உங்க தலைவராக இருக்கின்ற (டி.ஜி.பி. சைலேந்திரபாபு) எம் சாதிக்காரர்தான். அவர்கிட்ட இருக்கின்ற மூளையில் கொஞ்சமாவது எனக்கு இருக்காதா? வீரப்பனைத் தேடி பிடிச்சிட்டீங்க... என்னைப் பிடிக்க முடியாது'' என எச்சரிக்கும் தொனியில் 6 வாட்ஸ்ஆப் ஆடியோக்களை நெல்லை புறநகர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனுக்கும், அவர்சார்ந்த சமூக மக்கள் சிலருக்கும் "கோழி'அருள் அனுப்ப... அது வைரலானது.

dd

வாட்ஸ்ஆப் ஆடியோக் கள் வைரலான நிலையில், எஸ்.ஐ. காதர்பாட்சா தலைமையில் 6 நபர்கள் அடங்கிய தனிப்படையை அமைத்து "கோழி'அருளை தேடியிருக்கிறார் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன். அவனுடைய செல்போன் இருப்பிடத்தை காண்பித்த நிலையில், வெள்ளிக்கிழமை பின்னிரவில் அம்பத்தூர் அடுத்த அத்திப் பட்டில் துப்பாக்கி முனையில் அவனை கைது செய்தது காவல்துறை.

Advertisment

"இப்ப தென்காசி மாவட்டத்துல இருக்கின்ற சுரண்டை வேதக் கோயில் தெருவை சேர்ந்தவன் "கோழி'அருள். பெருமாள்புரம் பகுதியில் பிராய்லர் கடை வைத்திருந்ததால் "கோழி' அருளான அவன் மீது பாவூர் சத்திரம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சுரண்டை, குரும்பூர், தூத்துக்குடி வடக்கு மற்றும் சென்னை எழும்பூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 23 வழக்குகள் உள்ளன. வழக்கறிஞரான ஸ்டான்லி பெஞ்சமினை கொலை செய்து ரவுடி லிஸ்டில் இணைந்து அடுத்தடுத்து தூத்துக்குடி எப்போதும் வென்றான் பகுதியில் நடந்த ஜெசிந்தா பாண்டியன் கொலை நந்தவனம்பட்டியில் நடந்த பசுபதி பாண்டியன் கொலை, கே.டி.சி. நகரில் நடந்த சிங்காரம் கொலை உள்ளிட்ட கொலைகளில் சாதீய ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டான்.

தன்னை குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதியாக காட்டிக்கொள்ள முயன்றான். அதற்கு அவன் தேர்ந்தெடுத்தது வாட்ஸ்ஆப்பை. ஒவ்வொரு சமூக நிகழ்வின்போதும் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ வெளியிட்டு தன்னைத்தானே பிரபலப்படுத்திக்கொள்வான்'' என்கின்றது காவல்துறை வரலாறு. தனது சமூகத்தைச் சேர்ந்த மற்ற தாதாக்களுடன் இவன் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை என்பதும் கவனத்திற்குரியது.

உளவுத்துறை அதிகாரி ஒரு வரோ, "சமுதாயத் தலைவர்களின் ஒவ்வொரு கொலையின் போதும் பழிக்குப் பழியாக மற்றொரு சமூகத்தில் கொலை விழும். அதுபோல் இதுவும். முந்தைய நாட்களில் பசுபதிபாண்டியன் கொலையின் போது ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஸ்டீபனை கொலை செய்தார்கள். இதற்காக தாழையூத்தை சேர்ந்த விஜியை கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டனர். சிறையில் கொலையுண்ட முத்துமனோவிற்கு முறப்பநாடு, களக்காடு மற்றும் மூன்றடைப்பு காவல் நிலைய பகுதியில் வழக்குகள் இருந்தாலும், ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவரின் கொலைக்குக் காரணமானவன் எனக் கருதி அவனை கொலை செய்திருக்கின்றான் சிறையிலிருந்த ஜாகுவார் ஜேக்கப். இது இப்படியிருக்க, தற்பொழுது வடக்கு தாழையூத் தில் கொல்லப்பட்ட கண்ணன், சிங்காரம் கொலையில் சம்பந்தப்பட்டவன் எனக்கருதியே அவனைக் கொன்று பழி தீர்த்திருக்கின்றனர் மாற்று சமூகத்தினர். 1993-ல் ஆரம்பித்து அடங்கிய இந்த சாதிக் கொலைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது'' என்கின்றார் அவர்.

எஸ்.பி.யான மணிவண்ணனோ, "மாவட்டத்தினைப் பொறுத்தவரை அமைதி நிலவுகின்றது. சாதீய மோதல்கள் நிகழாதவாறு கடுமையான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கண்ணன் கொலையைப் பொறுத்தவரை இதுவரை 7 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் பலர் தொடர் விசாரணையில் உள்ளனர். "கோழி'அருள் கூறுவதுபோல் தேவையில்லாத ஆட்கள் கைது செய்யப்படவில்லை. சாதீய மோதலை தூண்டும் விதத்தில் பேசியதாலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்கிறார் அவர்.

தொடர் படுகொலைகள் குறித்து பேசிய மனித உரிமை செயற்பாட்டாளரான மோகனோ, "தனிமனிதப் பிரச்சனைக்குச் சாதிச்சாயம் பூசப்படுகிறது. இரு சமூக இளைஞர்களும் சாதி வெறியில் திளைத்துக் கொலை செய்யுமளவுக்குத் துணிகின்றனர். ஒவ்வொரு கொலையிலும் அவர்களுக்குள் சாதிப்பெருமிதம் தெரிகிறது. ஆனால் ஒரு கொலை அடுத்த கொலைக்கு அடித்தளமிடு கிறது. இதனால் இரண்டு சமூகத்திலும் ஒரு தலைமுறை வீணாகிவிட்டது. கொலை செய் தால் சமுதாயத் தலைவனாகி விடலாம் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் மேலோங்கி நிற்பதே இதற்கு முழுக் காரணம் ஆகும்.

அரசைப் பொறுத்தவரை இத்தகைய சாதி மோதல்களில் சிறப்புக் கவனம் செலுத்திப் பிரச்சனையின் மூலத்தை அறிந்து முளையி லேயே கிள்ளி எறிய வேண்டும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களின் தனிப் பிரிவில், பிரச்சனைக்குரிய இரு சமூகத்தைச் சேர்ந்தவர் களும் இருக்கக்கூடாது. அதே போன்று உளவுத்துறையிலும் இருக்கக் கூடாது. கொலையை விசாரிக்கும் தனிப்படையில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கக் கூடாது. காவல்துறையில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டால் தொடர் கொலைகளை மட்டுப்படுத்த முடியும். இது வெளிப்படையான அவசியம்'' என்றார் அவர்.

எனினும், "கோழி'அருளின் கைது பலருக்கு கிலியை ஏற் படுத்தியிருப்பதால், என்கவுன்ட் டர் பயத்தில் தங்களது ஜாகையை மாற்றி வருகின்றனர் சமூக ரவுடிகள்.

படங்கள்: விவேக்