Advertisment

மாமியாரை "மனைவி'யாக்கி மோசடி செய்த ரவுடிகள்! -போலீஸ் சப்போர்ட்!

rrar

மிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, பல்வேறு வர்த்தகங்கள் நடைபெறும் முன்னணி தொழில் நகரமாகவும் உள்ளது. எனவே இங்கே தொழிலில் கொடுக்கல் வாங்கல், தொழில் போட்டி காரணமாக கொலைக்குற்றங்கள் அரங்கேறுவதும் உண்டு. சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, தேசிய அளவில் பதிவான மொத்த கொலைகளில் 6.5% கொலைகள் தமிழகத்தில்தான் நடந்துள்ளன. குறிப்பாக சென்னை, சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங் களில்தான் அதிகம் நடந்துள்ளன. ரவுடிகளுடன் போலீசார் ரகசியக் கூட்டு வைத்திருப்பதே இத்தகைய கொலைகள் அதிகம் நடப்பதற்கான காரணம் என்று உளவுத்துறை தெரிவிக்கிறது.

Advertisment

rowdy

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவர்கள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவிந்திருந்தபோதும், சென்னையில் ரவுடிகளின் அராஜகமும், சட்ட விரோதச் செயல்பாடுகளும் உச்சத்தைத் தொட்டுவரு கிறது. சென்னையில், தி.நகர், வேளச்சேரி, திருவல்லிகேணி, மாதவரம்

மிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, பல்வேறு வர்த்தகங்கள் நடைபெறும் முன்னணி தொழில் நகரமாகவும் உள்ளது. எனவே இங்கே தொழிலில் கொடுக்கல் வாங்கல், தொழில் போட்டி காரணமாக கொலைக்குற்றங்கள் அரங்கேறுவதும் உண்டு. சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, தேசிய அளவில் பதிவான மொத்த கொலைகளில் 6.5% கொலைகள் தமிழகத்தில்தான் நடந்துள்ளன. குறிப்பாக சென்னை, சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங் களில்தான் அதிகம் நடந்துள்ளன. ரவுடிகளுடன் போலீசார் ரகசியக் கூட்டு வைத்திருப்பதே இத்தகைய கொலைகள் அதிகம் நடப்பதற்கான காரணம் என்று உளவுத்துறை தெரிவிக்கிறது.

Advertisment

rowdy

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவர்கள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவிந்திருந்தபோதும், சென்னையில் ரவுடிகளின் அராஜகமும், சட்ட விரோதச் செயல்பாடுகளும் உச்சத்தைத் தொட்டுவரு கிறது. சென்னையில், தி.நகர், வேளச்சேரி, திருவல்லிகேணி, மாதவரம், என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சீட்டாட்ட கிளப்கள் இயங்கிவருகின்றன. அடித்தளத்தில் வெறுமனே சீட்டு மட்டுமே விளையாட முடியும். அடுத்ததாக முதல் தளத்தில் டீ, காபி, நொறுக்குத்தீனிகளும், இரண்டாம் தளத்தில் மது பானங்கள் அனைத்தும் கிடைக்குமாம். இவை அனைத்தையும் நடத்திவருபவர் சுரேஷ் என்கிற கிளப் சுரேஷ் என்றாலும், இதன் முழு உரிமையாளார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான சத்யாதான். இந்த சட்டவிரோத விளையாட்டில் லட்சக்கணக்கில் பணம் புரளுவதால், பிரச்சனைகள் வராமலிருக்க ரவுடிகளை தன் வசம் வைத்துக்கொள்வாராம்.

மின்ட் ரமேஷ், தில் பாண்டி, கொரட்டூர் வினாயகம், கார்த்திக், நாகேந்திரன் ஆட்களான அசோக், ராகுல், ஜிம் ஆனந்த், வெள்ளை பிரகாஷ், ஈஷா என்கிற ஈஸ்வரன், எலி யுவராஜ் என அடைமொழியோடு ரவுடிகளை வைத்துக்கொண்டு செயல்பட்டு வந்த நிலையில், மாதாவரம் ரவுண் டான பகுதியில் உள்ள ரஞ்சிதம்மாள் என்பவருக்கு சொந்தமான சுமார் 12 கிரவுண்ட் இடத்தை அப கரிக்க கிளப் சுரேஷ் முனைப்பு காட்டிய நிலையில், அதற்கு ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலி டாக்குமெண்ட் தயார் செய்யும் முகுந்தன், ராஜேஷ் உடன் கைகோர்த்துக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்துள்ளனர்.

Advertisment

rr

ரஞ்சிதம்மாள் மகனாக ஒருவரை உருவகப் படுத்தி அவருக்கு தானம் செட்டில்மெண்ட் செய்த பின்பு அவர் இறந்ததைப் போன்று காட்டி, அவருடைய மனைவி மற்றும் வாரிசுதாரராகச் செல்லும் வகையில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். அதில் அவர் மனைவியாக குறிப்பிடப்பட்டுள்ளவர், முகுந்தனின் மாமியார் என்பது ஷாக் நியூஸ். அதன்பிறகு கிளப் சுரேஷ், 30 கோடி மதிப்பிலான சொத்தை தனது நண்பன் பயாஸ் பெயருக்கு கை மாற்றியுள்ளார். சத்யாவும், சுரேசும் எந்த இடத் தையும் தங்களுடைய பெயரில் வைத்துக்கொள் வதே இல்லை. இதனால் இவர்கள் எந்த வழக்கு களிலும் மாட்டிக்கொள்ளாதபடி இருந்துள்ளனர். இவர்களுக்கு அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில், இன்ஸ் பெக்டர், ஏ.சி., ஐ.ஜி. வரை யிலும் ஆதரவாகச் செயல் பட்டு வந்துள்ளதாகவும் அத்துறை சார்ந்த அதி காரிகளே கூறுகின்றனர்.

சட்டத்துக்குப் புறம்பான வகையில் அந்த இடத்தை அபகரிக்க உதவிய அனைவருக்குமான பங்குக ளைப் பிரித்துகொடுக்காத கிளப் சுரேஷ், எம்.எல்.ஏ சத்யாவின் பின்னணியில், ரவுடிகளை வைத்துக்கொண்டு மிரட்டிவந்திருக்கிறார். இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் தங்களுக்கு ஆதரவான ரவுடி களை அழைத்துவரவும், rrமாதாவரம் குமரன் மருத்துவ னைக்கு அருகாமையில் இருக்கும் சீட்டாட்டக் கிளப் பில் பஞ்சாயத்து நடந்துள்ளது. அந்த பஞ்சாயத்தில் வாக்குவாதம் முற்றிப்போக... இருதரப்பும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.

இந்த ரவுடிகள் கும்பல் ஒருவருக்கு ஒருவர் ஸ்கெட்ச் போட்டு வருவது தெரிந்தும், ரவுடிகள் ஒழிப்பு கண்காணிப்புப் பிரிவு ஏ.சி, ஒருங்கிணைந்த குற்றம் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு, மற்றும் சென்னை ஆணையாளரின்கீழ் இயங்கும் சிறப்புப் பிரிவுகளும் இது தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பித்தும்கூட, அங்குள்ள ஏசி அருள் சந்தோஷ் முத்தும், இன்ஸ்பெக்டர் காளிராஜும் மேலதிகாரி களுக்கு தெரியாதவாறும், அதன்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காதபடியும் இருக்க, கிளப் சுரேஷ் சிறப்பாகக் கவனித்துள்ளாராம்.

சென்னையில் உள்ள முக்கிய ஏ, ஏ+, கேட்டகிரி ரவுடிகளைக் கண்காணித்துவரும் ரவுடிகள் ஒழிப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சரியாக இயங்காததே ரவுடிகள் அட்டகாசத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏ.சி., 4 இன்ஸ் பெக்டர், 12 எஸ்.ஐ., 40 போலீஸ் இயங்கவேண்டிய இந்தப் பிரிவுக்கு, தற்போது 1 ஏ.சி., 1 எஸ்.ஐ., 8 போலீசாரே உள்ளதால் செயல்பாடு சரியில்லையெனக் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக ஏ.சி. அருள்சந்தோஷ் முத்துவிடம் கேட்டபோது, "அதுபற்றி சொல்ல முடியாது' என்று மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால், "சென்னையில் ரவுடிகளை ஒடுக்குவதில் நாங்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறோம். நிச்சயம் இந்த விவகாரத்தை மேலும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்'' என்று உறுதியளித்தார்.

nkn180821
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe