""ஹலோ தலைவரே, இலங்கை இறுதிப்போரில் இந்திய அரசு உதவியதுன்னு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பேட்டி கொடுக்க வைத்து, அதன் மூலம் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கும், அதோடு கூட்டணி கண்ட தி.மு.க.வுக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நெருக்கடியை உருவாக்கும் முயற்சி ஆரம்பிச்சிருக்குன்னு நாம போனமுறையே பேசிக்கிட்டோம்.''’
""ஆமாம்பா, பா.ஜ.க. இதை கையிலெடுக்கும்னு எதிர்பார்த்த நேரத்தில், அ.தி.மு.க. எடுத்து, தி.மு.க.வுக்கு எதிரா 23-ந் தேதி ஆர்ப்பாட்டம், 25-ல் பொதுக்கூட்டம்னு அறிவிச்சிருக்கே!''’
""ஆமாங்க தலைவரே, இறுதிப்போர் பற்றி ராஜபக்சேவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டதாகவும், அதனால், ஈழப் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸையும் தி.மு.க.வையும் கண்டித்து 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போறதாவும், 19-ந் தேதி நடந்த அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேத்தியிருக்காங்க.''
""கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் இதை மீடியாக்கள்கிட்ட விளக்கியபோது, அருகில் இருந்த அமைச்சர்களும் கட்சியின் சீனியர்களும், ஈழ இறுதிப்போரின் போது, இங்கே மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்ததையும் சொல்லுங்கன்னு தூண்டினாங்க. அ.தி.மு.க. ஆட்சியோட ஊழலை அம்பலப்படுத்தி தி.மு.க. சார்பில் ஸ்டாலின் எடுக்கும் போராட்டங்
""ஹலோ தலைவரே, இலங்கை இறுதிப்போரில் இந்திய அரசு உதவியதுன்னு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பேட்டி கொடுக்க வைத்து, அதன் மூலம் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கும், அதோடு கூட்டணி கண்ட தி.மு.க.வுக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நெருக்கடியை உருவாக்கும் முயற்சி ஆரம்பிச்சிருக்குன்னு நாம போனமுறையே பேசிக்கிட்டோம்.''’
""ஆமாம்பா, பா.ஜ.க. இதை கையிலெடுக்கும்னு எதிர்பார்த்த நேரத்தில், அ.தி.மு.க. எடுத்து, தி.மு.க.வுக்கு எதிரா 23-ந் தேதி ஆர்ப்பாட்டம், 25-ல் பொதுக்கூட்டம்னு அறிவிச்சிருக்கே!''’
""ஆமாங்க தலைவரே, இறுதிப்போர் பற்றி ராஜபக்சேவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டதாகவும், அதனால், ஈழப் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸையும் தி.மு.க.வையும் கண்டித்து 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போறதாவும், 19-ந் தேதி நடந்த அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேத்தியிருக்காங்க.''
""கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் இதை மீடியாக்கள்கிட்ட விளக்கியபோது, அருகில் இருந்த அமைச்சர்களும் கட்சியின் சீனியர்களும், ஈழ இறுதிப்போரின் போது, இங்கே மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்ததையும் சொல்லுங்கன்னு தூண்டினாங்க. அ.தி.மு.க. ஆட்சியோட ஊழலை அம்பலப்படுத்தி தி.மு.க. சார்பில் ஸ்டாலின் எடுக்கும் போராட்டங்களில் கூட்டம் கூடுறதால, அதுக்கு கவுண்ட்டரா, போர்க்குற்றம்னு போராட்டம் நடத்தி தி.மு.க.வை குறி வைக்கப் பார்க்குது அ.தி.மு.க.''
""இப்படிப்பட்ட பரபரப்பான சூழல்ல யாழ் நூலகத்துக்கு புத்தகங்களைக் கொடுக்க, இங்கிருந்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இலங்கைக்குப் போனாரே?''’
""இவர் போன செய்தியைவிட, பரபரப்பான, படு பயங்கரமான செய்திகள் எல்லாம் அங்கிருந்து வர ஆரம்பிச்சிருக்கு. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இலவச வீடுகள் என்ற பெயரில் இந்திய அரசின் உதவியோடு 5 ஆயிரம் வீடுகள் உருவாக்கப்பட்டுச்சு. ஆனால் இதில் 10 சத வீடுகளை மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு ஒதுக்கிட்டு, மிச்ச 90 சத வீடுகளையும் சிங்களர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒதுக்கிட்டாங்க. இந்த சங்கடத்துக்கு நடுவில், மட்டக்களப்பில் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அஸ்திவாரம் தோண்டும்போது கைகால் கட்டப்பட்டு, மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் சிதைந்த சடலங்கள் நூற்றுக்கணக்கில் வெளியே வந்தபடியே இருக்க, இதைக்கண்டு திகைத்துப்போன மட்டக்களப்பு நீதிமன்றம், அந்த சடலங்களை அடையாளம் காணுமாறு அரசுக்கு உத்தரவு போட, இது உலக அளவில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியிருக்கு. இது பற்றியெல்லாம் அ.தி.மு.க. சைடில் எந்த ரியாக்ஷனும் இல்லை.''’
""எதிர்க்கட்சிக்கு எதிரா ஆளுங்கட்சியே போராட்டம் நடத்துற வினோதத்துக்கு நடுவில், அ.தி.மு.க.வுக்குள்ளேயே முணுமுணுப்பு, மனப்புழுக்கம், உரசல்ன்னு ஏகப்பட்ட களேபரங்கள் நடந்துக்கிட்டிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, அணிகள் இணைஞ்சப்ப கொடுத்த வாக்குறுதிப்படி கட்சிப் பதவிகள் கிடைக்கலைன்னு ஓ.பி.எஸ். மீது, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட ஆதரவாளர்களே அதிருப்தியா இருக்காங்க. இதை கவனிச்ச எடப்பாடி, அவர்களுடன் பேசி, அவர்களைத் தன்பக்கம் இழுக்க ஆரம்பிச்சிட்டார். அப்செட்டான ஓ.பி.எஸ்., விநாயகர் சதுர்த்தி அன்று, எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருக்கும் சின்னஞ்சிறிய விநாயகர் கோயிலுக்குப் போய், அங்கே தன்னந்தனியா உட்கார்ந்து, மனப்புழுக்கத்தைக் கரைச்சிக்கிட்டாராம். அதேபோல் உறவுக்காரர்கள் என்ற முறையில் நகமும் சதையுமா இருந்த ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கமும், தஞ்சை எம்.பி.பரசுராமனும் பணி நியமன விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இப்ப எலியும் பூனையுமா ஆயிட்டாங்க. எடப்பாடிவரை புகாரைக் கொண்டு போயிருக்கும் பரசுவைத் தங்கள் பக்கம் வளைக்க, அதே உறவின் முறைப் பாசத்தோடு தினகரன் தரப்பும் வலை வீசிக்கிட்டு இருக்குதாம்.''’
""ஊழல் விவகாரங்களில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசைப்போல, மோடியின் மத்திய அரசும் ஊழல் தொடர்பான பலத்த சூறாவளியை சந்திச்சிக்கிட்டு இருக்கே?''’
""ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் விவகாரம், இப்ப பலமா வெடிக்க ஆரம்பிச்சிருக்கு. விமானக் கொள்முதலில் ஏகத்துக்கும் ஊழல் நடந்திருப்பதோடு, இந்த விமானங்களைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை, அனில் அம்பானியின் முன் அனுபவமே இல்லாத புத்தம் புதுக் கம்பெனிக்குக் கொடுத்ததிலும் முறைகேடு நடந்திருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கு. அதோடு மத்திய தணிக்கைத் துறையான சி.ஏ.ஜி.யிடமும் காங்கிரஸ் புகார் கொடுத்திருக்கு. பா.ஜ.க.வைச் சேர்ந்த அனில் அம்பானி சம்பந்தமான ஆவணங்களை காங்கிரஸிடம் கொடுத்ததே, அக்கட்சியைச் சேர்ந்த அவர் சகோதரர் முகேஷ் அம்பானிதானாம். அம்பானி சகோதரர்களின் குடும்ப உரசலில், ரஃபேல் ஊழல் வெடித்து வெளியே வந்திருக்குன்னு சொல்லுது டெல்லி வட்டாரம்.''’
""முத்தலாக் தடைச் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்குதே.''’
""இஸ்லாமிய சட்டமான முத்தலாக் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் பெண்களே நீதிமன்றம் போனதன் அடிப்படையிலும், இதில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் இந்த தடைச் சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு நினைக்குது. இதன் மூலம் முஸ்லிம் பெண்களின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்கும்னு எதிர்பார்க்குது. அதேநேரத்தில், உரிமையியல் சார்ந்த குடும்ப விவகாரத்தை கிரிமினல் குற்றமா மாற்றுகிற பாஜ.க அரசின் நடவடிக்கை முஸ்லிம் பெண்களுக்கே எதிரானதா போயிடும்னு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்குது..''’
""ஏழு பேர் விடுதலையில் மோடி அரசின் வியூகம் என்னவாம்?''’
""தமிழக அமைச்சரவை கூடி, ராஜீவ் வழக்கில் சிக்கியுள்ள ஏழுபேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கும் நிலையில், கவர்னர் அந்தத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதாக வெளியான தகவலை ராஜ்பவன் மறுத்திடிச்சி. இந்த நிலையில் மத்திய உள்துறை அதிகாரிகள், ஏழு பேரையும் விடுவிக்கக் கூடாதுன்னு தங்கள் அமைச்சகத்திடம் சொல்லியிருப்பது, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மூலம் மோடியின் கவனத்துக்கு போயிருக்கு. 7 பேரை விடுவிக்கும் சாவி இப்போது மோடியின் கைக்கு வந்திருக்குன்னு சொல்லுது உள்துறைத் தரப்பு.''’
""காங்கிரஸ் தொடர்பான ஒரு தகவலை நான் சொல்றேன். தென்மாநில காங்கிரஸ் தலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறார் ராகுல்காந்தி. கேரள மாநில காங்கிரஸ் தலைவராக முள்ளம்பள்ளி ராமச்சந்திரனையும், செயல் தலைவர்களாக சுதாகரன், ஷா நவாஸ், சுரேஷ் ஆகியோரையும் நியமித்திருக்கிறார் ராகுல். இந்த நியமனம் நடந்த நாளிலேயே, தமிழக காங்கிரஸைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு டெல்லியின் அழைப்பு வந்திருக்கு. அதனால தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் இருக்குமா? கேரளாவைப் போல் இங்கும் செயல் தலைவர்களை ராகுல் நியமிக்கப் போகிறாரான்னு பேச்சு கிளம்பியிருக்கு.''