Advertisment

கொள்ளை! முதல்வர் சஸ்பெண்ட்! -தேனி மருத்துவக் கல்லூரி அவலம்!

dd

தேனி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு, தேனி மாவட்டம் மற்றும் கேரளாவிலிருந்து தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள், உடன் தங்குவோர், மருத்துவர்கள், செவிலியர்களென சுமார் ஆறாயிரம் பேர் வரை தினமும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கான உணவு வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கேண்டீனை தேனியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார். இந்த கேண்டீனுக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்காக மூன்று இணைப்புகள் போடப்பட்டுள்ளது. அதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தன்னிச்சையாகத் துண்டித்ததாகவும், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதி

தேனி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு, தேனி மாவட்டம் மற்றும் கேரளாவிலிருந்து தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள், உடன் தங்குவோர், மருத்துவர்கள், செவிலியர்களென சுமார் ஆறாயிரம் பேர் வரை தினமும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கான உணவு வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கேண்டீனை தேனியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார். இந்த கேண்டீனுக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்காக மூன்று இணைப்புகள் போடப்பட்டுள்ளது. அதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தன்னிச்சையாகத் துண்டித்ததாகவும், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கேண்டீன் உரிமையாளர் மாரிச்சாமி, முதல் தவணையாக ஆறு லட்சத்து ஐம்பதாயிரம், இரண்டாவது தவணையாக மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் வழங்குவதாகத் தானே வீடியோவில் கூறி, மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் ஆபீஸ் மற்றும் வீட்டிக்கு சென்று பணம் கொடுக்கிறார். அந்த லஞ்சப் பணத்தை முதல்வர் வாங்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வைக்கும் செல்ல, கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Advertisment

mm

இது சம்பந்தமாக மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது, "கேண்டீன் உரிமையாளரிடம் டீன் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஒட்டு மொத்த மருத்துவர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு டீனாக பொறுப்பேற்ற மீனாட்சி சுந்தரம், மருத்துவமனையை முன்னேற்றாமல், தன்னை மட்டுமே வளர்த்துக்கொண்டு, பல வழிகளில் முறைகேடுகள் செய்து கொள்ளையடித் திருக்கிறார். பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட முதல்வர் காப்பீட்டுத் திட்டத்துக்காக மாதம் 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதுபோல் ச.ஃ.48 திட்டத்திற்கு 4 கோடியே 50 லட்சம், ச.ஆ.ட.ஐ. திட்டத்திற்கு 3 கோடியே 31 லட்சம் என இப்படி பல கோடிகளை அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் அவற்றை இந்த டீனோ முறையாகச் செலவிடாமல், தனது உறவினர் தஞ்சாவூரில் நடத்திவரும் மலர் மெடிக்கலில் மருந்து மாத் திரைகளை வாங்கிக்கொண்டு, போலி வவுச்சர் போட்டு லட்சக்கணக்கில் கொள்ளை யடித்துள்ளார். மருத்துவமனை வார்டில் டேபிள் சேர் கேட்டால் கூட, "நீங்கள்தானே உட்காரு கிறீர்கள், நீங்களே வாங்கிக்கொள் ளுங்கள்' எனக் கூறுகிறார். வேறு வழியில்லாமல் நாங்கள் சொந் தப்பணத்தில் வாங்குவதற்கும் அவர் போலி வவுச்சர் போட்டு கொள்ளையடிக்கிறார். மாண வர்கள் விடுதியிலும் இதுபோல் லட்சக்கணக்கில் கொள்ளை யடித்திருக்கிறார். கேண்டீன் உரிமையாளரை மிரட்டு வதற்காகவே மாணவர்கள் பெயரில் கேண்டீனை வைத் துக்கொண்டு ஊழல் செய்கிறார்.

மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணயச் சான்றிதழ் பெறுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் முறைகேடுகள் செய்ததால் இதுவரை தரச் சான்றிதழ் பெறமுடியவில்லை. இவற்றையெல்லாம் மருத் துவத்துறை செயலாளர் மற்றும் மாநில மருத்துவர் சங்கத்துக்கு புகாராக அனுப்பியுள்ளோம். இந்நிலையில்தான் லஞ்சம் வாங் கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். துறைரீதி யாக தீவிர விசாரணை செய்தால் அவரது ஊழல்கள் அனைத்தும் அம்பலமாகும்'' என்றனர்.

mc

Advertisment

பிரச்சினைக்குரிய கேண் டின் உரிமையாளர் மாரிச்சாமி மற் றும் அவருடைய வக்கீல் அர்ஜுன் ஆகியோரிடம் விளக்கம் கேட்க பலமுறை தொடர்புகொண்டும் லைனில் பிடிக்க முடியவில்லை.

இது சம்பந்தமாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரத்திடம் கேட்டபோது, "விதிமுறைகளை மீறி கேண்டீனுக்கு அதிகமான தண்ணீர் எடுத்துக்கொண்டி ருந்தார். அதை நான் தடுத்தேன். அதேபோல் கூடுதலான இடங் களையும் ஆக்கிரமித்திருக்கிறார். அதையும் தடுத்தேன். அதை யெல்லாம் மனதில் வைத்துத்தான் என்னைப் பழிவாங்க வேண்டு மென்ற நோக்கத்தோடு பணம் கொடுப்பதாக வீட்டுக்கு வந்தார். நான் அவரைத் திருப்பி அனுப்பி விட்டேன். அதுபோல் ஆபீஸுக்கு வந்து பணத்தை டேபிளில் வைத்தார். நான் உடனே அதை எடுக்கச் சொல்லிவிட்டேனே தவிர, அவரிடம் நான் பணம் வாங்கவில்லை. இதையெல்லாம் அவர் மறைமுகமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். அதுபோல் என்னைப் பற்றி தவறான தகவல் களையும் பரப்பி வருகிறார்'' என்று தன்மீதான குற்றச்சாட்டுக் களை மறுத்தார்.

மருத்துவக் கல்லூரி முதல் வர் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது சுகாதாரத் துறை அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

nkn090823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe