தேர்தல் பிரச்சாரத்துக்காக அடிக்கடி தமிழகம் வந்துபோகும் பிரதமர் மோடி, கடந்த 9-ந் தேதி சென்னையில் நடந்த அவரது வாகன பேரணி பிசுபிசுத்துப்போனதால் மூடு-அவுட்டாகியிருக்கிறார்.

தி.நகரில் மோடியின் ரோட் ஷோவுக்காக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக மாநில உளவுத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆலோசித்தனர் மோடியின் சிறப்பு பாதுகாப்புப்படை அதிகாரிகள். ரோட் ஷோ நடக்கும் தி.நகர், பாண்டிபஜார் பகுதியை 3 நாட்களாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் சிறப்பு பாதுகாப்புப்படையினர் எடுத்துக்கொண்டதால், நிறைய அவஸ்தைகளை எதிர்கொண்டனர் அப்பகுதி வியாபாரிகள்.

mm

மாலை 6:30க்கு ரோட் ஷோ தொடங்கும் என அறிவிக்கப் பட்டிருந்தது. பனகல் பூங்கா முதல் தேனாம் பேட்டை எல்டாம்ஸ் சிக்னல்வரை பா.ஜ.க.வின் கொடி, மோடியின் உருவம் பொறித்த மார்பு வரையிலான கட்-அவுட்டுகள், தாமரை சின்னம் பேனர்கள் என அசத்தியிருந்தது தமிழக பா.ஜ.க. பூங்கா அருகே சிறியதாக மேடையும், அதற்கு அருகே மோடிக்கான கிரீன் ரூமும் பிளாட்பார்மில் அமைக்கப்பட்டி ருந்தன.

Advertisment

மதியம் 2 மணிக்கெல்லாம் கூட்டம் வரத்தொடங்கிய நிலையில், தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக பா.ஜ.க.வின் கொடி, பேனர், கட்-அவுட் வைக்கப் பட்டிருப்பதைக் கண்ட தமிழக காவல்துறையினர், பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோரிடம் அவைகளை அகற்ற வலியுறுத்தினர்.

உடனே, மைக்கை எடுத்து பேசிய கராத்தே தியாகராஜன், ”"இப்படி மிரட்டுறது, எச்சரிக்கை செய்றதெல்லாம் எங்ககிட்ட வேணாம். இதுமாதிரி நிறைய பார்த்துட்டோம். முதலமைச்சர் கலந்துக்கிற கூட்டத்தில் தி.மு.க. கொடிகளை உங்களால் அகற்ற முடிந்ததா? கொடிகள் இல்லாமல் கூட்டம் நடத்துகிறதா தி.மு.க?''’என்றெல் லாம் காட்டமாக வெடித்தார். இதனால், ரோட் ஷோ நடக்கும் பகுதி ஏகத்துக்கும் பதட்டமானது. போலீசுக்கும் பா.ஜ.க.வுக்கும் மோதல் வெடிக்கும் சூழல் உருவானது. இருப்பினும் கொடிகளை அகற்றியது போலீஸ்.

இப்படிப்பட்ட டென்ஷன்களுக்கு மத்தியில் சென்னை ஏர்போர்ட்டில் லேண் டான மோடி, விமானத்திலிருந்து உடனடியாக கீழே இறங்கவில்லை. கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கும் அதிகமாக விமானத்தினுள் ளேயே மோடி இருக்க, அவரை வரவேற்க வந்த பா.ஜ.க.வினர், "என்னாச்சு? ஏன் பிரதமர் இறங்கலை?' என குழம்பினர்.

Advertisment

விமானத்திலிருந்தபடியே, ரோட் ஷோ நடக்கும் பகுதியில் கூட்டம் எப்படி இருக்கிறது என ஸ்பாட்டிலிருக்கும் அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர் மோடியின் அதிகாரிகள். ஸ்பாட்டிலிருந்த அதிகாரிகளோ, "7,000 பேர் இருப்பார்கள். இதைத்தாண்டி இன்னும் கூட்டம் வருவதற்கு வாய்ப்பில்லை' என மோடிக்கு தகவல் தெரிவிக்க, மூட்-அவுட்டான அவர் இறுகிய முகத்துடனேயே ரோட் ஷோவுக்கு கிளம்பினார்.

வழியெங்கும் சாலையின் இரு பக்கமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்களும், ரோட் ஷோவுக்காக பாண்டி பஜார் பகுதியில் திரட்டப்பட்டிருந்த ஆட்களும் மோடிக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். பனகல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோடி ஏறினார். அவருடன் பா.ஜ.க.வின் வேட்பாளர்களான தென்சென்னை தமிழிசை, மத்திய சென்னை வினோஜ்செல்வம், வடசென்னை பால்கனகராஜ் ஆகியோர் ஏற்றப்பட்டனர்.

dd

பனகல் பூங்காவிலிருந்து புறப் படும் மோடியின் வாகனப் பேரணி 1 மணி நேரத்துக்குப் பிறகு எல்டாம்ஸ் சிக்னலை அடையும் வகையில் ரோட் ஷோ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எவ்வளவு மெதுவாக, ஊர்ந்து ஊர்ந்து சென்றும் 40 நிமிடத்திலேயே பேரணி முடிந்து விட்டது. பேரணியில் தாமரை சின்னத்தைக் காட்டியபடி வந்தார் மோடி.

35 ஆயிரம் பேர் வருவார்கள் என அவரிடம் சொல்லப்பட்ட நிலையில் மத்திய உளவுத்துறையினர் சொன்னதுபோல வெறும் 7 ஆயிரம் பேர்தான் ரோட் ஷோவில் கலந்துகொண்டதை கண்டு மீண்டும் மூடு அவுட்டானார் மோடி. இதனால் பேரணி முடித்து யாரிடமும் பேசாமலே கவர்னர் மாளிகைக்கு கிளம்பிவிட்டார்.

ஆட்களைத் திரட்டி வருவதற்காக மட்டும் சென்னையிலுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 2 லட்சம் என மொத்தம் 44 லட்சம் ரூபாயும், பிற செலவுகளுக்காகவும் என ரோட் ஷோவுக்காக தமிழக பா.ஜ.க. செலவிட்ட மொத்த தொகை 1 கோடியே 50 லட்சம் ரூபாய். இந்த தொகை, பா.ஜ.க.வின் 3 வேட்பாளர்களின் செலவு கணக்கில் ஏறுகிறது.

இதற்கிடையே, ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழை மோடி பாடுவதால், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை பார்வையிட வருமாறு எம்.ஜி.ஆர். நினைவிட அறக் கட்டளை நிர்வாகி டாக்டர் குமார் ராஜேந்திரன், மோடியின் கவனத்துக்கு செல்லுமாறு தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு செல்லாமல் புறக்கணித்து விட்டார் மோடி. ஆக, "எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதெல்லாம் தேர்தலுக்காக மோடி நடத்தும் நாடகம்' என்கிறார்கள் பா.ஜ.க.வினரே!

___________

ரவுடிகளுக்கு அசைண்மெண்ட்! பதட்டத்தில் நெல்லை!

ssநான்கு கோடி பிடிபட்டதில் தனக்கு எதிராக போட்டுக் கொடுத்த எதிரியை வீழ்த்த சத்ரு சம்ஹார யாகம் நடத்தியிருக்கிறார் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன். வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக சென்னையிலுள்ள தனது ஹோட்டல் பணியாளர்கள் மூவர் மூலம் 4 கோடி ரூபாயை நெல்லைக்கு எடுத்துவரச் செய்திருந்தார் நயினார். பணியாளர்கள் மூவரும் நெல்லை எக்ஸ் பிரஸில் ஏ.சி.கோச்சில் பயணித்தபோது, தாம்பரம் ரயில்வே ஸ்டேசனில் அவர் களை மடக்கிப் பிடித்து பணத்தைக் கைப்பற்றியது தேர்தல் பறக்கும் படை. இந்த பணத்துக்கும், தனக் கும் எந்த சம்மந்தமும் இல்லை என மறுத்திருக்கிறார் நயினார். ஆனால், பணத்தை எடுத்துவரச் சொன்னது அவர்தான் என்பதற்கான ரயில்வே ரெக்கார்டுகள் மூலம் உறுதி செய்திருக் கிறது மாநில உளவுத்துறை. அதாவது, பறக்கும்படை யினரிடம் சிக்கிய தனது ஆட்கள் மூவருக்கும், நெல்லை எக்ஸ்பிரசில் பயணிக்க எமெர்ஜென்சி கோட்டாவில் டிக்கெட்டை கன்ஃபார்ம் பண்ணிக் கொடுத்திருக்கிறார் நயினார். இதற்காக அவர் கொடுத்த எம்.எல்.ஏ. சிலிப் ரயில்வேயில் ஆதாரமாக இருக்கிறது. அதேபோல, வங்கிகளின் ஏ.டி.எம். மெஷின்களில் பணத்தை லோட் செய்வதற்காக பாதுகாப்பான ஒரு வாகனம் பயன்படுத்தப்படும். நெல்லையில் அப்படி ஒரு வாகனம், நயினாரின் வீட்டுக்குள் கடந்தவாரம் ஒரு இரவில் சென்று வந்துள்ளது. அதற்கான ஆதாரமும் உளவுத்துறையிடம் சிக்கி யிருக்கிறதாம். ரயில் மூலம் பணத்தை நெல்லைக்கு கொண்டுவர முயற்சித்தது போல, ஏ.டி.எம். வாகனம் மூலமாகவும் பணத்தை நெல்லைக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான், தன்னை அழிக்க நினைக்கும் கட்சி எதிரிகளை அழிக்க திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக சத்ருசம்ஹார யாகத்தை நடத்தியிருக்கிறாராம் நயினார். இதற் கிடையே, தனது வெற்றி கேள்விக் குறியாக இருப்பதால் குறிப்பிட்ட சமூகத்திலுள்ள ரவுடிகள் பலரையும் அழைத்து ஒவ்வொருவருக் கும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து சில அசைன் மெண்ட்டுகளை நயினார் கொடுத்துள்ளாராம்.

வாக்குப்பதிவின்போது என்ன நடக்குமோ என்கிற பதட்டம் இப்போதே நெல்லையில் எதிரொலிக்கிறது.