ஆர்.கே. நகரான கும்பகோணம்! டோக்கனால் கதி கலங்கிய கடைக்காரர்

token

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டபோது, "20 ரூபாய் கொடுத்து, ஒரு வாரம் கழித்து இருபதாயிரம் பெற்றுக் கொள்ளுங்கள்' என ஏமாற்றிய விவகாரத்திற்கே இன்னும் விடை கிடைக்கவில்லை. இந் நிலையில், கும்பகோணம் தொகுதியில் 2,000 ரூபாய்க்கான டோக்கன் கொடுத்து வாக்காளர் களுக்கு அல்வா கொடுத்துள்ள விவகாரம், அ.ம.மு.க.வினருக்கு குடைச் சலை உண்டாக்கியிருக்கிறது. கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனும், அ.தி.மு.க. சார்பில், கூட்டணி கட்சி வேட்பாளரான மூ.மு.க. தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அ.ம.மு.க. சார்பில் பாலமுருகன் போட்டி யிட்டனர். போட்டி கடுமையாக இருந்த நிலையில், இத் தொகுதியில் அ.ம.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்த முறைதான் தமிழகத்தையே மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது!

token

கும்பகோணம் பெரியகடை வீதியில், பட்டாச்சாரியார் தெருவில், ஷேக்முகமது என்பவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரியம் மொத்த, சில்லரை மளிகைக்கடை யை நடத்திவருகிறார். 6-ம் தேதி செவ்வாய்க் கிழமை தேர்தல் முடிந்ததும்,

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டபோது, "20 ரூபாய் கொடுத்து, ஒரு வாரம் கழித்து இருபதாயிரம் பெற்றுக் கொள்ளுங்கள்' என ஏமாற்றிய விவகாரத்திற்கே இன்னும் விடை கிடைக்கவில்லை. இந் நிலையில், கும்பகோணம் தொகுதியில் 2,000 ரூபாய்க்கான டோக்கன் கொடுத்து வாக்காளர் களுக்கு அல்வா கொடுத்துள்ள விவகாரம், அ.ம.மு.க.வினருக்கு குடைச் சலை உண்டாக்கியிருக்கிறது. கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனும், அ.தி.மு.க. சார்பில், கூட்டணி கட்சி வேட்பாளரான மூ.மு.க. தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அ.ம.மு.க. சார்பில் பாலமுருகன் போட்டி யிட்டனர். போட்டி கடுமையாக இருந்த நிலையில், இத் தொகுதியில் அ.ம.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்த முறைதான் தமிழகத்தையே மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது!

token

கும்பகோணம் பெரியகடை வீதியில், பட்டாச்சாரியார் தெருவில், ஷேக்முகமது என்பவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரியம் மொத்த, சில்லரை மளிகைக்கடை யை நடத்திவருகிறார். 6-ம் தேதி செவ்வாய்க் கிழமை தேர்தல் முடிந்ததும், வழக்கம்போல புதன்கிழமை காலையில் கடையைத் திறக்கவந்த ஷேக்முகமதுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கடைக்குமுன் திரளாகக் கூடியிருந்த மக்களைப் பார்த்ததும் என்னவோ, ஏதோவெனப் பதறியிருக்கிறார். ஒருவேளை, முதல்நாள் விடுமுறை என்பதால் பொருட்கள் வாங்கத்தான் மக்கள் வந்திருக்காங்களோ என்றும் நினைத்தபடியே ஆர்வத்தோடு கடையைத் திறந்திருக்கிறார். கடையைத் திறந்ததும் கூடியிருந்த மக்கள் முண்டியடித்துக்கொண்டு, அவர்களிடமிருந்த டோக்கனை நீட்டி, ""இரண்டாயிரம் ரூபாய்க்கு சாமன்களைக் கொடுங்க'' என கேட்டதும், டோக்கனை வாங்கிப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். அந்த டோக்கனில் "பிரியம் மளிகை ஏஜென்ஸி' என்று அவரது கடைப்பெயரோடு, 2000 ரூபாய் என்றும் அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்து வியர்த்து விறுவிறுத்துப்போனார்!

toekn

சுதாரித்துக்கொண்டவர், ""இந்த டோக்கனுக்கும், எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உங்ககிட்ட யார் கொடுத்தாங்களோ அவங்ககிட்டயே போய்க் கேளுங்க'' என்று கூறித் திருப்பியனுப்பி னார். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் வருகை அதிகரித்த படியேயிருக்க, கடையை இழுத்துப் பூட்டிவிட்டு, "வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும், எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனுக்கு எங்கள் கடை பொறுப்பேற்காது' என்று நோட்டீசை அச்சடித்து பூட்டிய கதவில் ஒட்டிவிட்டு மிகுந்த விரக்தியோடு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

கடைக்கு முன் குவிந்த மக்களோ, ""டோக்கனக் கொடுத்து எங்க ஓட்டுக்களை வாங்கி ஏமாத்திட்டானுங்களே... நல்லாவே இருக்கமாட்டானுங்க. அவனுங்க டோக்கனை நம்பி எங்க வீட்டுல ஆறு ஓட்டையும் போட்டோமே'' என்று புலம்பியபடியே ஒரு பெண்மணி சென்றார். அவரைப்போலவே அங்கு கூடியிருந்த அனைவரும் புலம்பியபடியே திரும்பிச்சென்றனர்.

இதுகுறித்து டோக்கனோடு வந்தவரிடம் கேட்டபோது, ""எங்களுக்கு அ.ம.மு.க.காரவங்கதான் டோக்கனக் குடுத்தாங்க. அவனுங்க ஊருக்குள்ள வரட்டும், உண்டு இல்லன்னு செய்துடுறோம்''’ என ஆத்திரத்தோடு குமுறிக்கொட்டினர்.

வர்த்தகர் சங்கப் பிரமுகர் ஒருவரிடம் விசாரிக்கையில், ""இந்தத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு செல்வாக்கு அதிகம். அதேபோல ஸ்ரீதர் வாண்டையாரும் ஈடுகொடுத்து வாக்குகளைச் சேகரித்தார். இவர்களுக்கு ஈடுகொடுத்து அதிக வாக்குகளைப் பெறுவதற்காக அ.ம.மு.க. வேட்பாளர் பாலமுருகன், ஆர்.கே.நகர் பார்முலாவைக் கடைபிடித்தார். டோக்கன் கொடுத்தது அவருக்கு கை கொடுத்துள்ளது. ஆனால் அதை நம்பி ஓட்டுப் போட்டவங் களுக்குத்தான் நாமம் போட்டுட்டார். அந்தக் கடைக்காரர் பாவம். நல்ல பெயரோட ரொம்ப காலத்துக்குக் கடை நடத்திவந்தவர். ஆத்திரப்பட்டு யாராவது வன்முறையில் இறங்கியிருந்தா அவர் நிலைமை என்னாகியிருக்கும். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறதை விட்டுட்டு, ரோட்டுல போற அப்பாவி மக்களைத்தான் துப்பாக்கியை வச்சுக்கிட்டு செக் பண்றாங்க'' என்றார் ஆத்திரத்தோடு.

token

மளிகைக்கடை உரிமையாளர் ஷேக் முகமதுவிடம் இதுபற்றி கேட்டோம். ""எனக்கு ஒண்ணுமே புரியலைங்க. வழக்கமா கடையைத் திறப்பதுபோல அன்னிக்கும் திறந்தோம். கடைக்கு முன்னால ஜனங்க கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சி. முதல்நாள் தேர்தலுக்காக கடை லீவு விட்டதால கூட்டம் வந்திருக்கும்னு நினைச்சா, அவங்க வச்சிருந்த டோக்கனைப் பார்த்து அதிர்ச்சியாகிட்டேன். ஜனங்க மத்தியில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சிருந்த நல்ல பெயரை ஒரே நொடியில தவிடுபொடியாக்கிடப் பாத்தாங்க. இப்படியெல்லாமா ஜனங்கள ஏமாத்துவாங்க'' என்றார் வருத்தத்தோடு.

அ.ம.மு.க. வடிவேல் வாண்டையார்,’""டோக்கன் கொடுத்தது உண்மைதாங்க. ஆனா ஏமாற்றும் எண்ணத்தில் கொடுக்கல. தேர்தல் நெருக் கடியில பணத்தை எடுத்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க முடியல. அதனாலதான் கும்ப கோணத்தில் மக்கள் அதிகம் கூடுகிற இடம், அதோடு மக்களுக்கு நன்கு பரிச்சையமான கடை என்பதால் அந்தக் கடை வாசலுக்கு டோக்கனோடு வரச் சொன்னோம். ஆனால் மக்கள் அவசரப்பட்டு டோக்கனைக் கடைக்காரரிடம் கொடுத்து விவகாரமாக்கிட்டாங்க. எங்க நிர்வாகி மேல வழக்கும் போட்டிருக்காங்க''’என்றார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து, டோக்கன் வழங்கிய அ.ம.மு.க. நிர்வாகி கனகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வசதி படைத்த, நன்கு படித்த, வளமான வாக்காளர்கள், வாக்களிக்க வருவதில்லை. எஞ்சிய வாக்காளர்களின் ஏழ்மையைச் சாதகமாக்கிக் கொண்டு, நினைத்ததைச் சாதிக்க, அரசியல்வாதிகள் அடுத்தடுத்து முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

nkn140421
இதையும் படியுங்கள்
Subscribe