ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாலை ஏழரை மணிக்கு தமிழக பத்திரிகையுலகம் அதிர்ந்து போனது. தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு ராணிப்பேட்டை பகுதியில் சர்ச் அமைப்பது, சாலையில் திடீரென சாமி சிலை முளைப்பது, பாதிரியார் பொன்னையாவின் சர்ச்சைக்குரிய பேச்சு என சிறு சிறு மத மோதல்கள் அங்கங்கே நடைபெற்று வருகின்றன. இது எங்கு போய் முடியுமோ என்ற அச்சமான சூழலில்தான் தமிழ்நாட்டின் தலைநகரில் அந்த அதிரவைக்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கிறிஸ்துவ மத போதகரான மோகன் சி.லாசரஸ் தனது மத போதனைகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி நிறுவனம் சத்தியம் டி.வி.யின் அலுவலகம் சென்னை ராயபுரத்தில் இயங்கி வருகிறது. சமூக ஊடகங்கள் மூலமாக அதிகம் பேர் பார்க்கும் சத்தியம் தலைப்புச் செய்திகள் என்கிற செய்தி நிகழ்ச்சியை வழங்கும் இந்த நிறுவனத்தின் வாசலில், குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று வந்து நின்றது.
கிடார் இசைக்கருவியை வைத்திருக்கும் பையோடு ஒருவன் வந்தான். வந்தவன், பாதுகாவலர்கள் இருக்கும் சிறிய கேட்டை தவிர்த்து, போக்குவரத்துக்காக இருக்கும் பெரிய கேட் வழியாக அலுவலகத்திற்குள் நுழைந்தான். தனது கிடார் பேடிலிருந்து ஒரு நீண்ட பளபளக்கும் வாளையும் ஒரு பெரிய கேடயத்தையும் வெளியே எடுத்தான். "எங்கே உங்க எம்.டி. ஐசக். எங்கே உங்க செய்தி ஆசிரியர் அரவிந்தாக்ஷன்' என வரவேற்பு மேஜையை வாளாலும் கேடயத்தாலும் அடித்து உடைத்தான். வரவேற்பு அறையில் இருந்த டி.வி., கம்ப்யூட்டர், கண்ணாடிப் பொருட்கள், கண்ணாடிக் கதவுகள் என எதுவும் தப்பவில்லை. அ
ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாலை ஏழரை மணிக்கு தமிழக பத்திரிகையுலகம் அதிர்ந்து போனது. தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு ராணிப்பேட்டை பகுதியில் சர்ச் அமைப்பது, சாலையில் திடீரென சாமி சிலை முளைப்பது, பாதிரியார் பொன்னையாவின் சர்ச்சைக்குரிய பேச்சு என சிறு சிறு மத மோதல்கள் அங்கங்கே நடைபெற்று வருகின்றன. இது எங்கு போய் முடியுமோ என்ற அச்சமான சூழலில்தான் தமிழ்நாட்டின் தலைநகரில் அந்த அதிரவைக்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கிறிஸ்துவ மத போதகரான மோகன் சி.லாசரஸ் தனது மத போதனைகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி நிறுவனம் சத்தியம் டி.வி.யின் அலுவலகம் சென்னை ராயபுரத்தில் இயங்கி வருகிறது. சமூக ஊடகங்கள் மூலமாக அதிகம் பேர் பார்க்கும் சத்தியம் தலைப்புச் செய்திகள் என்கிற செய்தி நிகழ்ச்சியை வழங்கும் இந்த நிறுவனத்தின் வாசலில், குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று வந்து நின்றது.
கிடார் இசைக்கருவியை வைத்திருக்கும் பையோடு ஒருவன் வந்தான். வந்தவன், பாதுகாவலர்கள் இருக்கும் சிறிய கேட்டை தவிர்த்து, போக்குவரத்துக்காக இருக்கும் பெரிய கேட் வழியாக அலுவலகத்திற்குள் நுழைந்தான். தனது கிடார் பேடிலிருந்து ஒரு நீண்ட பளபளக்கும் வாளையும் ஒரு பெரிய கேடயத்தையும் வெளியே எடுத்தான். "எங்கே உங்க எம்.டி. ஐசக். எங்கே உங்க செய்தி ஆசிரியர் அரவிந்தாக்ஷன்' என வரவேற்பு மேஜையை வாளாலும் கேடயத்தாலும் அடித்து உடைத்தான். வரவேற்பு அறையில் இருந்த டி.வி., கம்ப்யூட்டர், கண்ணாடிப் பொருட்கள், கண்ணாடிக் கதவுகள் என எதுவும் தப்பவில்லை. அனைத்தும் வாள் மற்றும் கேடயத்தால் அடித்து உடைக்கப்பட்டன.
மாலை ஏழரை மணி என்பது செய்திகளின் ப்ரைம் நேரம். அப்போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கத்தியுடன் பாய்ந்த அவனைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். உயிர்ப் பயத்துடன் ஓடிய அவர்களை கத்தி முனையில் மிரட்டினான். அரைமணி நேரம் தாக்குதலைத் தொடர்ந்த அவனின் அராஜகச் செயலை அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த சென்னை ராயபுரம் காவல்நிலையத்திற்கு அலறல் போனாக தொலைக்காட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
தகவல் சொல்- 30 நிமிடங்கள் கழித்து அலுவலகத்திற்கு வந்த இரண்டு போலீசார், அவனிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் முன்னிலையிலேயே, தன்னை கேமராவில் படம் பிடித்துக்கொண்டிருந்த டி.வி. நிலையத்தாரை அவன் எட்டி உதைத்தான்.
ராஜ மரியாதையுடன் அவனை அழைத்துச் சென்ற போலீசார், மெதுவாக அவனிடமே அவனது விவரங்களைச் சேகரித்தனர். இந்துத்வா இயக்கங்கள் வலுவாக உள்ள கோவையைச் சேர்ந்தவன், பெயர் ராஜேஷ்குமார். பொறியியல் பட்டதாரி. குஜராத்தில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். குஜராத்திலிருந்து கோவைக்கு வருவதாகப் புறப்பட்ட அவன் நேராக சத்தியம் டி.வி.க்கு வந்து, அந்த டி.வி. நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தினான். நன்கு படித்து அரசு வேலைகளில் உள்ள பெற்றோர்களுக்குப் பிறந்தவன். அவனது உறவினர் ஒருவர் உயர் போலீஸ் அதிகாரியாக உள்ளார்.
"அவன் சத்தியம் டி.வி.யில் ஒளிபரப்பான செய்திகளால் பாதிக்கப்பட்டவன். சத்தியம் செய்திகளில் குஜராத்தில் புயல் வரும் என வானிலை அறிக்கையை சுட்டிக்காட்டி செய்தி சொல்லப்பட்டது. அன்று புயல் வரவில்லை. கர்நாடகத்தில் வெள்ளம் வருமெனச் சொன்னார்கள். அன்று மழை பெய்யவில்லை. இரண்டும் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலம். அதனால் சத்தியம் டி.வி.க்கு போனில் பேசினான். அவர்கள் சரியாகப் பதில் சொல்லவில்லை. அதனால் சத்தியம் டி.வி.யை தாக்கினேன்'' என்றான்.
ஊழியர்களை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த அவன் மீது கொலை மிரட்டல் வழக்கு கூட சென்னை நகர போலீசார் பதிவு செய்யவில்லை. அவனது பெற்றோர்கள் சென்னைக்கு விமானத்தில் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் அமர்ந்து காவல்நிலையத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனை நேராக சந்தித்தோம்.
"ஏன் சத்தியம் டி.வி.யை அடித்தாய்?'' என கேட்டதற்கு, அவன், "நீ பத்திரிகைக்காரனா? இந்துவா? கிறிஸ்துவா? உன்னையும் அடிப்பேன்'' என பதில் சொன்னான். அவனை குறைந்தபட்சம் லாக்-அப்பில் கூட வைக்கவில்லை. காவலர் ஓய்வு அறையில் உள்ள சுழலும் நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தான்.
ஏன் இந்த ராஜமரியாதை என ராயபுரம் ஆய்வாளர் பூபாலனிடம் கேட்டபோது, "எல்லாம் சட்டப்படி நடக்கிறது'' என தெனாவெட்டாகவே பதில் சொன்னார்.
2012-ஆம் ஆண்டு நக்கீரன்மீது ஆயிரக்கணக்கான குண்டர்கள் மூலம் அ.தி.மு.க. கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதை அப்படியே லைவ்வாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி சத்தியம் டி.வி. இந்துத்வா வெறியர்கள் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியை வெடிப் பொருட்களால் தாக்கினார்கள். கவுரி லங்கேஷ், கல்புர்க்கி போன்றவர்களை இந்துத்வா வெறியர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள். பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆறு மாதத்தில் ஊடகங்களை அடக்குவேன் என்ற பின்னணியில் இந்துத்வா சக்திகளால் கிறிஸ்துவ சிறுபான்மை நிறுவனமான சத்தியம் தொலைக்காட்சி தாக்கப் பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தாக்கியவன் மனநிலை சரியில்லாதவன் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
மனநிலை சரியில்லாதவன், குஜராத்திலிருந்து கூகுள் மேப் போட்டுக்கொண்டு கார் ஓட்டி வந்து, வாள் கேடயம் மூலம் சத்தியம் டி.வி.யை ஏன் தாக்க வேண்டும்? சத்தியம் டி.வி. யேசுவின் புகழ் பாடுவதை பா.ஜ.க. பிரமுகர்களான நாராயணன், கே.டி.ராகவன் போன்ற பா.ஜ.க. பிரமுகர்கள், அந்த டி.வி. நடத்தும் விவாதத்திலேயே கிண்டலடித்துப் பேசுவது வழக்கமான ஒன்று. சமூக ஊடகங்களில் இந்துத்வா பிரமுகர்கள் சத்தியம் டி.வி.யை கிறிஸ்துவ மத அடிப்படையில் கடுமையாகவே விமர்சிப்பார்கள். இந்த தாக்குதலைக் கண்டித்த தலைவர்கள் அனைவரும் இந்த முரண்பாட்டை மனதில் வைத்தே கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்தின் மேல் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலின் பின்னணி பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் கருத்தாக எதிரொலிக்கிறது.
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க பா.ஜ.க ஆதரவு சக்திகள் திட்டமிட்டிருப்பதன் வெளிப் பாடுதான், ஊடகத்தின் மீதான தாக்குதல். தி.மு.க அரசின் காவல்துறை ஆரம்பத்திலேயே இதனைக் கிள்ளி எறியாவிட்டால், மாநில மக்களின் அமைதி வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்துவிடும். ஆனால், காவல்துறையிலேயே காவி ஆடுகள் நிறைந்திருக்கின்றன என்பதைத் தான் சத்தியம் டி.வி. மீதான தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.
______________________________________
இறுதிச்சுற்று!
பொள்ளாச்சி! சி.பி.ஐ.க்கு துணையாக தமிழக போலீஸ்!
தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அ.தி. மு.க முன்னாள், நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சி.பி.ஐ.யில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். அப்போது ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தமிழக காவல்துறை தயாராக இருப்பதாகவும் குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயார் என்றும் உறுதியளித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.
-ராம்கி