முன்பெல்லாம் குப்பைமேடு என்றாலே மாட்டுச்சாணமும், காய் கறிக்கழிவுகளுமாகக் குவிந்திருப்பதைத் தான் பார்த்திருப்போம். பெரும்பாலும் இயற்கைப்பொருட்களின் வீணான வற்றாலான இந்த குப்பை, இயற்கைக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்த தில்லை. காகிதங்கள், காய்ந்த சருகுகள் போன்ற குப்பைகளை எரித்து அழிக்க வும் செய்தார்கள். எரிக்கப்படாதவை மண்ணில் மக்கி, இயற்கை உரமாக மாறி மண்ணுக்கு கூடுதல் சத்துக்களை அளித்துவந்தன.
காலப்போக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியால் நாம் எலக்ட்ரிக்கல் பொருட்களின் பயன்பாடு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பயன்பாடு என மாறத்தொடங்கினோம். நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை எடுத்துக்கொண்டாலே, செல்போன், செல்போன் சார்ஜர், பென் ட்ரைவ், சிம் கார்டு, இயர் போன், ஹெட்போன், கணினி, லேப்டாப், மவுஸ், கீ போர்டு, பேட்டரிகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மிக்ஸி, டி.வி., ஸ்மார்ட் டி.வி., டேப்லட், ட்யூப் லைட் சோக்குகள், பல்புகள், ப்ளக்குகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக், எலக்ட்ரிகல் பொருட்களின் பயன் பாடுகள் அதிகரித்துவருகின்றன. நம்முடைய பயன
முன்பெல்லாம் குப்பைமேடு என்றாலே மாட்டுச்சாணமும், காய் கறிக்கழிவுகளுமாகக் குவிந்திருப்பதைத் தான் பார்த்திருப்போம். பெரும்பாலும் இயற்கைப்பொருட்களின் வீணான வற்றாலான இந்த குப்பை, இயற்கைக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்த தில்லை. காகிதங்கள், காய்ந்த சருகுகள் போன்ற குப்பைகளை எரித்து அழிக்க வும் செய்தார்கள். எரிக்கப்படாதவை மண்ணில் மக்கி, இயற்கை உரமாக மாறி மண்ணுக்கு கூடுதல் சத்துக்களை அளித்துவந்தன.
காலப்போக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியால் நாம் எலக்ட்ரிக்கல் பொருட்களின் பயன்பாடு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பயன்பாடு என மாறத்தொடங்கினோம். நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை எடுத்துக்கொண்டாலே, செல்போன், செல்போன் சார்ஜர், பென் ட்ரைவ், சிம் கார்டு, இயர் போன், ஹெட்போன், கணினி, லேப்டாப், மவுஸ், கீ போர்டு, பேட்டரிகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மிக்ஸி, டி.வி., ஸ்மார்ட் டி.வி., டேப்லட், ட்யூப் லைட் சோக்குகள், பல்புகள், ப்ளக்குகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக், எலக்ட்ரிகல் பொருட்களின் பயன் பாடுகள் அதிகரித்துவருகின்றன. நம்முடைய பயன்பாடு மாறினாலும், குப்பைகளை ஒழிக்கும் முறையில் நாம் மாறவேயில்லை. குறிப்பாக செல்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பொறுத்தவரை, உடனுக்குடன் அடுத்தடுத்த வெர் ஷன் செல்போன்களை அறிமுகப் படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். புதிய செல்போன்களை வாங்கும் பலரும், பழைய செல்போன்களை அப்படியே பயன்படுத்தாத குப்பைகளாக்கிவிடுகிறார்கள். ஒரு இயர்போன் வேலை செய்யவில்லையென்றால் வீதியில் வீசுகிறார்கள். கீ போர்ட், மவுஸ் என எது வேலை செய்யாவிட்டாலும் அவற்றை குப்பையில் வீசத் தயங்குவதில்லை. இப்படி வீசப்படும் மின்னணு சாதனங்களின் குப்பையைத்தான் இ-வேஸ்ட் என்கிறார்கள்.
இப்படி வீதியில் வீசப்படும் இ-வேஸ்ட்டு களாலும், எரிக்கப்படும் இ-வேஸ்ட் புகைமாசினா லும் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, குழந்தைகளுக்கு தோல் வியாதிகள், சுவாசம் தொடர்பான வியாதிகள் வருகின்றன. எனவே இந்த இ-வேஸ்ட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றைச் சேகரித்து முறையாக அழிப்பதற்கான இயக்கத்தை லயன்ஸ் சங்கம் செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து, லயன்ஸ் க்ளப் இன்டர் நேஷனல் அமைப்பின் இன்டர்நேஷனல் டைரக்டர் ராமகிருஷ்ணன் மதனகோபாலிடம் பேசியபோது, "தற்போது இ-வேஸ்ட் என்பதுதான் சுற்றுச்சூழல் தளத்தில் உலகளாவிய பேசுபொருளாக இருக்கிறது. உலகம் முழுக்க ஆண்டொன்றுக்கு 40 மில்லியன் டன் மின்னணு கழிவுப்பொருட்கள் கொட்டப்படு கின்றன. குறிப்பாக, 2020ஆம் ஆண்டுக் கணக்குப்படி, உலகிலேயே மிக அதிகமாக, சீனாவில் வருடத்துக்கு 10 மில்லியன் டன் இ-வேஸ்ட் கொட்டப்படுகிறது. அடுத்ததாக, அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு 6.9 மில்லியன் டன் இ-வேஸ்ட் கொட்டப்படுகிறது. மூன்றாவது இடத்தில், இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 3.2 மில்லியன் டன் இ-வேஸ்ட் கொட்டப்படுகிறது. இதுவே, 2050ஆம் ஆண்டில், உலகளவில் 161 மில்லியன் டன்னாக உயரக்கூடுமெனக் கணித்துள்ளார்கள். இதிலிருந்தே இ-வேஸ்ட்டின் அபாயகரமான வளர்ச்சியை நாம் புரிந்துகொள்ள முடியும்.
இப்படி கழிவாகக் கொட்டப்படும் இ-வேஸ்ட் பொருட்களில் 15% கழிவுகள்தான் முறையாகப் பிரித்தெடுக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாதவகையில் அழிக்கப்படுகின்றன. 85% மின்னணுக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான முறையில் எரிக்கப்பட்டோ, மண்ணுக்குள் புதைக்கப்பட்டோ, கடல், ஏரி, குளங்களில் வீசப்பட்டோ அழிக்கப்படுகின்றன. மின்னணுக் கழிவுகளை எரிக்கும்போது வெளியாகும் வாயுவில் மிகுந்திருக்கும் மெர்க்குரி, டையாக்சின் போன்ற நச்சுப்பொருட்களால் தோல் நோய்கள், சுவாசப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மின்னணுக் குப்பைகளை அள்ளக்கூடிய தொழிலில் ஈடுபடக் கூடிய குழந்தைக்கு ஐந்தே ஆண்டுகளில் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமென்பதிலிருந்தே இதன் வீரியத்தை நாம் உணர முடியும். இந்தியாவில் 70% நச்சு இந்த எலக்ட்ரானிக் கழிவுகளால் வருபவையே.
இவற்றை சுற்றுச்சூழலுக்குத் தீங்கில்லாமல் மறுசுழற்சி செய்வதற்கான பணியில், அரசின் அனுமதி பெற்று பல நிறுவனங்கள் செயல்படுகின் றன. லயன்ஸ் சங்கமானது, மின்னணுக் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பாக, உலகின் மிகப் பெரிய மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தை ஜனவரி 13ஆம் தேதியன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுக்க இதுகுறித்த விழிப்புணர்வை, கல்லூரிகளிலும், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை, எஃப்.எம். ரேடியோ விளம்பரங்கள் போன்றவற்றின் மூலமாக பொதுமக்களிடமும் கொண்டு செல் கிறோம். தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் இ-வேஸ்ட்களை சேகரிக்கிறோம். சென்னையில் சுமார் 20 இடங்களில் சேகரித்து, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் அனைத் தையும் மொத்தமாகக் குவித்து மறுசுழற்சிக்கான பணிகளைச் செய்கிறோம்.
அந்த இ-வேஸ்ட்களில் சிலவற்றைப் பழுதுநீக்கி மீண்டும் பயன்படுத்தும்விதமாக உருவாக்குவது, பயனற்றவைகளை மெட்டல், ப்ளாஸ்டிக், சிப்புகள் எனப் பிரித்து பாதுகாப்பான முறையில் அழிப்பதையும் செய்கிறோம். இதற்காக ஹிந்துஸ்தான் இ-வேஸ்ட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இவர்கள், லேப்டாப், கணினி போன்ற மின்னணு சாதனங்களில் சிறிய சிறிய பழுதுகளை நீக்கிக்கொடுத்தால், அவற்றை ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கு கிறோம். மேலும், உபயோகமான பொருட்களுக்கு ஒரு விலை நிர்ணயித்து, அந்த விற்பனையின்மூலம் கிடைக்கும் தொகையை எங்கள் லயன்ஸ் சங்கத்தின் மைய அமைப்பின்மூலமாக, சமூக சேவைகளுக்குப் பயன்படுத்தவுள்ளோம். இ-வேஸ்ட் குறித்த விழிப் புணர்வு மிகவும் அவசியமென்பதால், இந்த இயக் கத்தை காலவரையறையின்றி தொடர்ச்சியாகச் செயல்படுத்திவருகிறோம்'' என்றார். வருங்கால சமூகத்தின் நலனுக்கான லயன்ஸ் சங்கத்தின் இந்த முன்னெடுப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
-ஆதவன்