ழல் மலிந்துள்ள அரசுத் துறைகளின் பட்டியலில் நெடுஞ்சாலைத்துறைக்கும் இடமுண்டு. கொரோனா ஊரடங்கிலும் கோலாகலக் கொண்டாட்டத்தில் அத்துறையினர் குறை வைக்கவில்லை.

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாடு அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் சாலை அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர்களுடன் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை நடத்தினார். இந்த நேரத்தில், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகரோ, சாலை மற்றும் பாலப்பணிகளை ஆய்வு செய்வதாக சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலுக்கான ‘அஃபிசியல் நோட்’ எழுதி, அரசு முதன்மைச் செயலாள ருக்கு அனுப்பிவிட்டு, ஊரடங்கு நாளான 23-ஆம் தேதி திருநெல்வேலியில் நடந்த கண்காணிப்புப் பொறியாளர் சுப்பிரமணியனின் மகள் திருமணத்தில் குஷியாகக் கலந்துகொண்டார்.

pwd

Advertisment

ஒவ்வொரு டிவிஷனிலும் ரூ.5 லட்சம் வரை மொய் அளிக்கப்பட்ட இத்திருமணம், கொரோனா கால ஊரடங்குக் கட்டுப்பாடுகளை ஊதித்தள்ளிவிட்டு, பெரும் கூட்டத்தைக் கூட்டி குதூகலமாக நடந்ததாக நமக்கு தகவல் கிடைத்த நிலையில், கண்காணிப்புப் பொறியாளர் சுப்பிரமணியனை தொடர்புகொண்டோம். அவர் நமது லைனில் வருவதைத் தவிர்த்தார். பிறகு, தலைமைப் பொறியாளர் சந்திரசேகரை தொடர்புகொண்டபோது, "ஆய்வுப்பணி எதுவும் மேற்கொள்ளவில்லை. அந்த சுற்றுப்பயண நிகழ்ச்சியை நான் கேன்சல் பண்ணிட்டேன். நேற்றுவரையிலும் மீட்டிங் இருந்துச்சு. பெர்மிஷன் லீவு போட்டு கல்யாணத்தில் கலந்துகொண்டேன்''’என்று கூலாக மறுத்துவிட்டு, கல்யாண கலெக்ஷன்’குறித்து விசாரிப்பதாக சுரத்தில்லாமல் பேசினார்.

அந்த நெடுஞ்சாலைத்துறை ஆவணத்தில் (சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் எண் 3/2022 நாள் 21-1-2022) 22-ஆம் தேதி மாலை 4-10 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்று, மாலை 5-35 மணிக்கு மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக திருநெல்வேலி சென்றடைந்து, அன்றிரவு திருநெல்வேலியில் தங்கி, மறுநாள் 23-ஆம் தேதி திருநெல்வேலி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தில் நடைபெற்றுவரும் சாலை மற்றும் பாலப்பணிகளை ஆய்வு செய்துவிட்டு, அன்றிரவே தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் (சென்னை) தலைமையிடம் திரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியெல்லாம் நெடுஞ்சாலைத்துறையினர் விதிமீறலாக, தங்கள் இஷ்டத்துக்கு நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாம்பிள்!

-ராம்கி