தொகுதி மறுசீரமைப்பு எனும் பேரில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கத் துடிக் கும் பா.ஜ.க. ஒன்றிய அரசுக்கு கடிவாளம் போடுவதற்காக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்தின் ஒற்றுமையை டெல்லிக்கு உணர்த்தியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவின்படி கூட்டு நடவடிக்கைக் குழுவிற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காகவும், திங்கள்கிழமை (10-ந் தேதி) துவங்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் தி.மு.க.வின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவும் எம்.பி.க்களின் கூட்டத்தை 9-ந் தேதி கூட்டி அவர்களுடன் விவாதித்தார் ஸ்டாலின்.
கூட்டத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்சம், இந்தி மொழித்திணிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. இதில் எம்.பி.க்கள் தங்களின் கருத்துக்களை வலியுறுத்தினர். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் குரல் எப்படி இருக்க வேண்டும் என்பதை எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார் ஸ்டாலின்.
எம்.பி.க்கள் கூட்டம் குறித்து விசாரித்த போது, ‘’நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துபோனால், தமிழகத்தைப் பாதிக்கும் எந்த ஒரு மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்கிறபோதும், அதனை தமிழக எம்.பி.க்கள் ஒன்றிணைந்து எதிர்த்தாலும் எந்த பலனும் இருக்காது; தமிழ் நாட்டின் குரல் எடுபடவேபடாது. இந்தியாவில் மாநிலங்களே இல்லாத ஒரு நிலையை உருவாக்கும் சதிதான் தொகுதி மறுசீரமைப்பு.
தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி என்பது ஏழைகளுக்குப் பெரும் சுமை. இரு மொழிக் கொள்கையில

தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி என்பது ஏழைகளுக்குப் பெரும் சுமை. இரு மொழிக் கொள்கையில் தமிழ்நாடு பயணித்த தால் மற்ற மாநிலங்களை விட எல்லாத் துறை களிலும் நாம் முன்னேற்றம் அடைந்திருக் கிறோம். அந்த வகையில், மூன்றாவது மொழி என்பது நமக்குத் தேவையற்றதும், அவசிய மற்றதுமாகும். ஆனால், மூன்றாவது மொழி எனும் பேரில் இந்தியை தமிழ் நாட்டில் திணித்து, தாய்மொழியான தமிழை அழித்து, அதற்கு இணையாக இந்தி மொழியை நிலைநிறுத்தத் துடிக்கின்றனர்.
இதற்கு தமிழகம் ஒப்புக்கொள்ளாது என்பதால்தான், தமிழத்தின் நிதி உரிமையை பறிக்கின்றனர். குறிப்பாக, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிதியை விடுவிக்காமல் மிரட்டிப் பார்க்கிறார்கள். தமிழகத்திற்கு எதி ரான இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே கடிவாளம் போடப்படவேண் டும் என்கிற ரீதியில் எம்.பி.க்கள் பேசினர்.
இதனை சீர்தூக்கி ஆராய்ந்த பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், "தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட தி.மு.க. எனும் கட்சியின் பிரச்சனை அல்ல; இது தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனை; தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் பிரச்சனை; தென்மாநிலங்களின் பிரச்சனை. அதனால், மாநில உரிமைகளுக்கு எப்போதெல் லாம் ஆபத்து வருகிறதோ அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான முதல்குரல் தமிழ்நாட்டி லிருந்துதான் எழுந்திருக்கிறது. அதனையும் தி.மு.க.தான் செய்திருக்கிறது. அந்தவகையில், தமிழ் நாட்டிற்கு எதிரான தொகுதி மறு சீரமைப்பு பூதத்தை அடக்க, வரும்முன் காப்போம் எனும் நோக்கத்தில் இப்போதே நாம் செயலாற்ற வேண்டியதிருக்கிறது.
தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்பட வுள்ள 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளின் தலைவர்களுக்கும், முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். அவர்களை சந்தித்து, விரிவாக விவரித்து, மாநில உரிமைகளுக்காக அவர்களின் ஆதரவைப்பெற, ஒரு அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் அடங்கிய குழு அந்தந்த மாநிலங்களுக்கு செல்லவேண்டும்.
இது ஒரு தொடக்கப்புள்ளிதான். நமது கோரிக்கை முழுமையாக வெற்றி அடையும் வரை இப்படிப்பட்ட முன்னெடுப்புகளை தொடர்ச்சியாக நாம் எடுக்க வேண்டும். இதில் நாம் சோர்ந்துபோய்விடக் கூடாது. மும்மொழி கொள்கை, நிதிப்பகிர்வு, தொகுதி மறுவரை யறை ஆகிய வழிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. இந்த விவகாரத் தில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க, தமிழ் நாட்டின் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட நீங்கள் (எம்.பி.க்கள்) தீவிரம் காட்டவேண்டும். இந்த பிரச்சனை தி.மு.க.வின் பிரச்சனை அல்ல ; தமிழ்நாட்டின் பிரச்சனை என்பதை அனைத்து எம்.பி.க்களிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.
இதற்கான முயற்சியை டெல்லியில் எடுங் கள். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களின் கூட்டத்தை டெல்லியில் கூட்டி விவாதியுங்கள்; அவர்களின் கருத்துக்களை கேளுங்கள். ஒத்த கருத்தை உருவாக்கி அவர் களையும் உள்ளடக்கிய குரலை நாடாளுமன் றத்தில் எதிரொலிக்கச் செய்யவேண்டும்.
மும்மொழிக் கொள்கையைப் பொறுத்த வரை, இந்திக்கு எதிரானவர்கள் என நம்மை கட்டம்கட்டப் பார்ப்பார்கள். அதற்கு இடம் தராதீர்கள். இந்திக்கும் அதனை பேசும் மக்களுக் கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அதனை கற்றுக்கொள்வதற்கும் நாங்கள் தடையாக இல்லை. ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் மீது இந்தி திணிப்பை ஒன்றிய அரசு செய்வதைத் தான் எதிர்க்கிறோமே தவிர இந்தியை எதிர்க்கவில்லை. இதனை கவனமாக நாடாளுமன்றத்தில் கையாளவேண்டும். இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் எதிர்மறை வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
அதேசமயம், இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சியைப் பாரீர், உலகம் முழுக்க எம் இளைஞர்கள் பெரிய பெரிய பொறுப்புகளில் இருப்பதைக் கவனியுங்கள் என்று ஒன்றிய அரசுக்கும், அவர்களின் எம்.பி.க்களுக்கும் புரியும் வகையில் பேசுங்கள். நமது பக்கம் இருக்கும் நியாயத்தை அவர்களும் உணரவேண்டும்.
அதனை அவர்கள் உணருகிற வகையில், இந்தி படிக்கலைன்னா தமிழ் நாட்டிற்கு நிதி தரமாட்டோம் என ஒன்றிய அரசு சொல்வது சர்வாதிகாரம் இல்லையா? நாடாளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தி தமிழ் நாட்டை வஞ்சிப்பது சர்வாதிகாரம் இல்லையா? என்று கேள்வி கேளுங்கள். நம்முடைய கேள்வியில், எதிரிகளும் கூட யோசிக்க வேண்டும்.
அதேபோல, நாடாளுமன்றம் நடக்கும் அனைத்து நாட்களிலும் நம் எம்.பி.க்கள் அனைவரும் அவையில் இருக்க வேண்டும். கலந்து கொள்ளாமல் தவிர்க்கக்கூடாது. மாநில உரிமைகளுக்காகவும் தமிழ்நாட்டின் மக்கள் நலப் பிரச்சனைகளுக்காகவும் தி.மு.க. எம்.பி.க்கள் அவையில் இருந்தனர் என்கிற எண்ணத்தை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; வடமாநிலங்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டும்'' என அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
இதனையடுத்து, மூன்று முக்கிய தீர்மானங் கள் எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது. மாநில உரிமைகளையும், மொழி உரி மையையும் பாதுகாக்க முதல்வரின் அறிவுரை மிக ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது” என்று சுட்டிக்காட்டினார்கள் எம்.பி.க்கள்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பைப் பொறுத்தவரை மக்கள் தொகை அடிப்படை யில் இல்லாமல் இந்தியா முழுமைக்கும் ஒரே அளவுகோலில் சீரமைப்பை செய்யலாம். அதேசமயம், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தித்தான் ஆக வேண்டு மெனில், எந்த அளவுக்கு உயர்த்த தீர்மானிக் கிறீர்களோ அந்த எண்ணிக்கையில் ஒவ்வொரு மாநிலத்திற்குமுள்ள விகிதாச்சாரத்தின்படி எம்.பி.க்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசும்படி எம்.பி.க்களுக்கு அட்வைஸ் தரப்பட்டது.
அதாவது, நாடாளுமன்றத்தின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்த ஒன்றிய மோடி அரசு திட்டமிட்டால், அதில் தமிழகத்தின் விகிதாச்சாரமான 7.18 சதவீதம் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது. குறிப்பாக, 848-ல் 7.18 சதவீதத்தைக் கணக்கிட்டால், 61 எம்.பிக்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டும். இதனைக் குறைப்பதற்கு எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது. இதேபோல ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தான் தொகுதிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இதனை மடைமாற்றும் வகையில் ஒன்றிய அரசு திட்டமிட்டால், அதன் சூழ்ச்சிகளை நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் எடுத்துச்சொல்ல எம்.பி.க்கள் தயங்கக்கூடாது என்கிற அட்வைஸும் தரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் தலைவர்களையும், மாநில முதல்வரையும் சந்தித்து பேசுவதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மேற்கு வங்கத்திற்கு நாடாளுமன்ற தி.மு.க.வின் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, கேரளா வுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், ஒடிசாவுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமையில் எம்.பி.க்களின் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
"தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசுக்கு எதிரான சாட்டையைச் சுழற்றத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதன் வீரியத்தை டெல்லிக்கு உணர்த்த மாநில உணர்வு தீயாகப் பரவும்' என்கிறார்கள் தமிழ்மொழி உணர்வாளர்கள்.