ஊழலை ஒழிப்போம்’ என்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., ஊழல் ஒழிப்பாளர்களை ஒழித்துக்கட்ட ஆரம்பித்திருக்கிறது'' என்கிறார்கள், பா.ஜ.க. அரசு கொண்டுவந்த ஆர்.டி.ஐ. சட்டத்திருத்தத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள். "இது ஜனநாயகத்தின் கருப்பு நாள்'’என்று பாராளுமன்ற தி.மு.க. கொறடா ஆ.ராசா இச்சட்ட மசோதாவை எதிர்த்தார். மேலும், இதைக் கண்டித்து தி.மு.க. பாராளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் வெளிநடப்பும் செய்தனர். ""நீங்களே வந்து, நீங்களே பாஸ் பண்ணிக்கிட்டா நாங்க எதுக்கு பாராளுமன்றத்துக்கு வரணும்?'' என்று கொந் தளித்துள்ளார் காங்கிரஸ் மூத்தத்தலைவர் குலாம்நபி ஆசாத். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் பா.ஜ.க. அரசு நிறைவேற்ற என்ன காரணம்?
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அரசாங்கத்தைக் கேள்வி கேட்கமுடியும் என்ற சூழ்நிலையில் சாதாரண மனிதன்கூட 10 ரூபாய் செலவில் வீட்டிலிருந்தபடியே அரசாங்கத்தை கேள்வி கேட்க முடியும் என்ற உரிமையைப் பெற்றுத் தந்ததுதான் ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்திய மக்களுக்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரம்தான் ஆர்.டி.ஐ. சட்டம் என்று ஆர்ப்பரித்தார்கள் ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள். சுதந்திரம் எப்படி எளிதில் கிடைக்கவில்லையோ அதேபோல்தான், ஆர்.டி.ஐ. சட்டமும் எளிதில் கிடைத்துவிடவில்லை. பெயரளவில் இச்சட்டம் மகாராஷ்டிராவில் இருந்தாலும் 1997-ஆம் ஆண்டு முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது ராஜஸ்தான் மாநிலத்தில் தான். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம்.கே.எஸ்.எஸ்.(Mazdoor Kisan Shakti Sangathan) எனப்படும் "மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன்' இயக்கத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளரு மான அருணா ராய்.
வேலை கொடுக்காமலேயே கிரா

வேலை கொடுக்காமலேயே கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்ததுபோல, பஞ்ச நிவாரணப்பணிகள் வழங்காமலேயே வழங்கியதுபோல, தூர்வாரப்படாத ஏரிகள் தூர் வாரப்பட்டதுபோல் என பல்வேறு பொய்க் கணக்குகளை எழுதி ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள் மாபெரும் முறைகேட்டில் ஈடு பட்டதை அருணாராய், நிகில் தே, ஷங்கர்சிங் உள் ளிட்ட எம்.கே.எஸ்.எஸ். இயக்க செயற்பாட்டாளர் கள் தங்களுக்கு கிடைத்த ஆவணங்களை வைத்து கிராம மக்களிடம் விசாரித்து கண்டுபிடித்தனர்.
கிடைத்த ஆவணத்தை வைத்து விசாரித்த போதே இவ்வளவு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்றால்…அரசுத்திட்டங்கள் ஒவ் வொன்றையும் செயல்படுத்துகிறார்களா? என்பதை அரசு ஆவணங்களை ஆராய்ந்தால்... இன்னும் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றியிருப்பார்கள் என்பது கண்டுபிடிக்கப்படும் என்று யோசித்த போதுதான் அரசாங்கம் கொண்டுவரும் திட்டங் களைச் செயல்படுத்துவது குறித்த தகவல்களை பெறுவது பொதுமக்களின் அடிப்படை உரிமை என்று ‘தேசிய மக்கள் தகவல் அறியும் உரிமை இயக் கம்’ உருவாக்கப்பட்டது. அருணாராய் தலைமை யிலான எம்.கே.எஸ்.எஸ். இயக்கம், மனித உரிமை இயக்கங்கள் எல்லாம் போராடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான வரைவை உருவாக்கி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் கொடுத்தார்கள். 2004-ல் "என்.ஏ.சி.' எனப்படும் "நேஷனல் அட்வைசரி கமிட்டி'யை உருவாக்கி மக்களின் கருத்துகளை கேட்டறிந்துகொண்டிருந்த சோனியாகாந்தி மூலம் பரிந்துரை செய்யப்பட்டு பிரதமர் மன்மோகன்சிங் அரசால் கொண்டு வரப்பட்டதுதான் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005.
ஸ்பெக்ட்ரம் ஊழல், மகாராஷ்ட்ரா ஆதர்ஷ் ஹவுசிங் போர்டு ஊழல், ராணுவத் தளவாடங் களை வாடகைக்கு எடுத்ததில் ஊழல், தலித்து களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காமன்வெல்த் விளையாட்டுக்கு பயன்படுத்திய ஊழல், முட்டை ஊழல், நிலக்கரி ஊழல், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு, மோடியின் கல்வித்தகுதி, இந்தியாவையே அதிரவைத்த பல ஊழல்களை ஆர்.டி.ஐ. மூலம் கிடைத்த ஆவணங்கள்தான் வெளிப்படுத்தின. அதுவும், 111 நாடுகளில் ஆர்.டி.ஐ. சட்டங்கள் இருந்தாலும் "சென்டர் ஃபார் லா அண்ட் டெமாக்ரசி அண்ட் அக்சஸ் டூ இன்ஃபோ யூரோப்' அமைப்பு நடத் திய சர்வேயில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட ஆர்.டி.ஐ. சட்டம்தான் சிறப் பானது என்றும் 4-வது இடத்திலும் இடம்பெற் றுள்ளது. அப்பேர்ப்பட்ட, ஆர்.டி.ஐ. சட்டத்தில்தான் திருத்தம் என்கிற பெயரில் பின்னோக்கிப் போயிருக் கிறது பா.ஜ.க. அரசு என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.
இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? என்று ஆர்.டி.ஐ. குறித்து தொடர்ந்து விழிப் புணர்வு ஏற்படுத்துவதோடு பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டுவரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் நாம் கேட்டபோது, ""பா.ஜ.க. அரசின் ஆர்.டி.ஐ. சட்டத் திருத்த மசோதா மத்திய-மாநில தகவல் ஆணையர்கள்தான் முதலில் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்பவர்கள் ஐந்து வருடங்கள் பதவியில் இருக்கலாம். 65 வயதுவரைதான் பதவிக்காலம். அதாவது, ஒருவர் 60 வயதில் ஆணையராக பொறுப்பேற்கிறார் என்றால் 65 வயதுவரை ஐந்தாண்டுகள் பதவியில் இருக்கமுடியும். ஆனால், 63 வயதில் பொறுப் பேற்கிறார் என்றால் மீதமுள்ள இரண்டு வருடங்கள்தான் பணியில் இருக்கமுடியும். ஒருமுறை ஆணையர் பணியில் இருந்தவர் மறுமுறை பொறுப்பேற்க முடியாது.
தலைமைத் தகவல் ஆணையர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் சமமானவர்கள் என்பதால் ஐந்துவருட பணிக்காலம் குறித்துக் கவலையில்லை;…சம்பளமும் பிரச்சினை இல்லை என்று சுதந்திரமாக செயல்பட்டுவந்தார்கள். இப்படிப்பட்ட அதிகாரத்தை தகவல் ஆணையர் களுக்கு கொடுப்பதால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறிவிட்டது. காரணம், நரேந்திர மோடி தேர்வில் பாஸ் பண்ணினாரா? டிகிரி வாங்கினாரா? என்பது குறித்த ஆர்.டி.ஐ. தகவல், வெளிநாட்டு பயணங்கள் குறித்த செலவுகள், ஆர்.பி.ஐ.யில் கருப்புப்பணம் எவ்வளவு திரும்ப வந்தது என்று பல ஊழல்கள் குறித்து ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்டதால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி யாக மாறியது. குறிப்பாக, மோடியின் டிகிரி குறித்து அரசுத்துறை பொதுத்தகவல் அலுவலர் பதில் கொடுக்காததால் மத்திய தகவல் ஆணையத் துக்கு மேல்முறையீடாக வந்தபோது, "யாரா இருந்தா என்ன? அதுகுறித்த தகவலை கொடுக்க வேண்டும்' என்று அதிரடியாக உத்தரவிட்டார் மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு. இவர்கள் மூலம்தானே மத்திய அரசின் ஊழல் முறைகேடுகள், மறைக்கப் படும் தகவல்கள் சட்டப்படி வெளியாகி விடுகின்றன. அதனால், இவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட் டால் தங்களை மீறி தகவல் போகாது என்பதால் இப்படியொரு சட்டத்திருத் தத்தை கொண்டுவந்திருக்கிறது'' என்கிறார்.
ஆர்.டி.ஐ. மூலம் தமிழக அரசாங்கத்தின் பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டுவரும் லஞ்ச ஊழலுக்கு எதிரான அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம் வெங்கடேஷிடம் நாம் கேட்ட போது, “""மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காக மக்கள் கருத்தை கேட்காமலேயே சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஜனநாயக விரோதப் போக்கு. பாராளுமன்ற நிலைக்குழுவின் கருத்தைக் கேட்டு விவாதிக்கக்கூட இல்லை. ஊழலை ஒழிக்கவேண்டும் என்றால் ஊழல் செய்யக்கூடாது. ஆனால், அதுகுறித்த தகவலே கொடுக்காமல் இருந்தால் ஊழல் இல்லை என்று மறைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறது மோடி அரசு'' என்று குற்றஞ்சாட்டுகிறார்.
பிரபல ஆர்.டி.ஐ. ஆர்வலர் கோபாலகிருஷ்ண னின் கருத்து மாறுபடுகிறது, ""ஆர்.டி.ஐ. ஆர்வலர் கள், பத்திரிகையாளர்கள் என சமூக அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்கள்கூட தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், பெரும்பாலும் அரசு அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் கள் என மாநில அரசுக்கு சார்பானவர்கள்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இப்போது ஆணையர்களைத்தானே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுபோகிறது என்று அலட்சியமாக இருந்துவிட்டால் ஆணையர்கள் மூலம் ஆக்டிவிஸ்ட்களுக்கு கடிவாளம் போடப் பார்க்கிறது மோடி அரசு'' என்கிறார் கொந் தளிப்பாக.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் வெளிவரு வதற்கு மிக முக்கிய பங்காற்றியவரும் சட்டத் திருத்தம் கொண்டுவரும்போது பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருந்தவர் சுதர்சன நாச்சியப்பன். 20 மக்களவை உறுப்பினர்கள், 11 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 31 உறுப்பினர்களைக்கொண்ட கமிட்டியில் உறுப்பின ராக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இதுகுறித்து, சுதர்சன நாச்சியப்ப னிடம் நாம் கேட்டபோது... “""ஆர்.டி.ஐ. சட்டம் மாநிலங்களின் உரிமைகளில் தலையிடக்கூடாது என்று லா செகரட்டரி, லெஜிஸ்ட் டேட்டிவ் செகரட்டரி, பர்சனல் செகரட்டரி மூவருமே சொன்னார் கள். ஆனால் மாநில அரசின் உரிமை களில் ஒவ்வொன்றாக தலையிடும் பா.ஜ.க. இதிலும் தலையிடுகிறது. இனி, ஒரு தகவலும் கிடைக்காது.
முதலில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை மட்டும்தான் நியமிக்கவேண்டும் என்று சட்ட முன்வடிவு இருந்தது. அதைத் தடுத்து, பத்திரிகை யாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என 6 வகையான மக்கள் ஆணையராக வரலாம் என்று மாற்றினோம். நாங்கள் வலிமைப்படுத்திய திருத்தம் கொண்டுவந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் சரி என்று ஒப்புக்கொண்டது. தற்போதைய ஜனாதிபதி யும் அப்போது ஒப்புக்கொண்டார். ஆனால், இதையெல்லாம் மீறி சட்டத் திருத்தம் என்கிற பெயரில் உச்சக்கட்ட அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழலை மறைக்கத்தான் இப்படி செய்கிறார் மோடி. "ஊழலை ஒழிப்போம்' என்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., ஊழலுக்கு துணைபோகிற அரசாகி விட்டது'' என்கிறார் அவர்.
-மனோசௌந்தர்