Advertisment

அண்டை மாநிலங்களுக்கு அரிசி கடத்தல்! -மூட்டைக்குள் மறைந்துள்ள பெருந்தலைகள்!

rc

கொரோனா -தேர்தல் ரிசல்ட் பரபரப்பு ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசி கடத்தல் மட்டும் குறையவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளில் உள்ள தமிழகத்தின் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக, சாலை மற்றும் இரயில்கள் வழியாகத் தினம் தினம் ரேஷன் அரிசி கடத்தப்படுகின்றன.

Advertisment

r

கடந்த பிப்ரவரி மாதம், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகேயுள்ள சுங்கச் சாவடியில் காவல்துறை நடத்திய சோதனையில், கண்டெய்னர் மூலம் கர்நாடகாவுக்கு கடத்திய 20 டன் ரேஷன் அரிசியைப் பிடித்தனர். ஓட்டுநர் நாகராஜை கைது செய்தனர். அதே பிப்ரவரி மாதத்தில் வேலூர் பைபாஸில் சர்வீஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு லாரியை பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ் வரன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமை யிலான படையினர் சோதனை செய்தபோது, அதில் 213 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. மொத்தம் 16 டன். "திரு வள்ளூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்

கொரோனா -தேர்தல் ரிசல்ட் பரபரப்பு ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசி கடத்தல் மட்டும் குறையவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளில் உள்ள தமிழகத்தின் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக, சாலை மற்றும் இரயில்கள் வழியாகத் தினம் தினம் ரேஷன் அரிசி கடத்தப்படுகின்றன.

Advertisment

r

கடந்த பிப்ரவரி மாதம், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகேயுள்ள சுங்கச் சாவடியில் காவல்துறை நடத்திய சோதனையில், கண்டெய்னர் மூலம் கர்நாடகாவுக்கு கடத்திய 20 டன் ரேஷன் அரிசியைப் பிடித்தனர். ஓட்டுநர் நாகராஜை கைது செய்தனர். அதே பிப்ரவரி மாதத்தில் வேலூர் பைபாஸில் சர்வீஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு லாரியை பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ் வரன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமை யிலான படையினர் சோதனை செய்தபோது, அதில் 213 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. மொத்தம் 16 டன். "திரு வள்ளூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்தேன்' என்ற அதன் ஓட்டுநர் லோகநாதனை கைது செய்தனர்.

Advertisment

வேலூர் பள்ளிகொண்டா டோல்கேட்டில் காட்பாடி தாசில்தார், பறக்கும் படை தாசில்தார் டீம்கள் இணைந்து சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டதில், அதில் 5 டன் ரேஷன்அரிசி மூட்டைகள் இருந்தன. அதனைத் தொடர்ந்து டிரைவர் ரமேஷை போலீஸார் விசாரித்தபோது, "காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு செல்வதாக' வாக்குமூலம் தந்துள்ளார்.

r

"சென்னை டூ பெங்களூரு செல்லும் இரயில் பாதையில் நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் கிராம இரயில்நிலையத்தில் இருந்து இரயில் பெட்டிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு செல்கிறது' என்கிற தகவலைத் தொடர்ந்து நாட்றாம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் தலைமை யில் இரயில் நிலையத்தில் சோதனை நடத்திய போது, சிப்பம் சிப்ப மாக கட்டி வைக்கப் பட்டியிருந்த ஆயிரம் கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். "அதனைக் கொண்டு வந்தவர்கள் யார் எனத் தெரியவில்லை' என்ற னர் ரயில்வே போலீ ஸார்.

குடியாத்தம் அடுத்த பேரணாம் பட்டு நகரில் பேருந்து நிலையம் அருகே ஒரு கடையில் இருந்து மினி டெம்போவில் சிலர் அரிசி சிப்பங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்த வழியாகச் சென்றவர்கள், இதுகுறித்து உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கூற... பறக்கும்படை அலுவலர் கோட்டீஸ்வரன் வந்துள்ளார். அதிகாரிகளைப் பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அப்சல், சமர் அஹ்மத், அபுபக்கர் என்கிற 3 இளைஞர்களைப் பிடித்தபோது, சோதனையில் அவை ரேஷன்அரிசி மூட்டைகள் எனத் தெரியவந்தது.. 5 ஆயிரம் கிலோவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கர்நாடகா மாநிலத்துக்கு அனுப்பவிருந்த தாகத் தகவல் கூறியுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கார், மினி டெம்போவை பறிமுதல் செய்ததோடு, அவர்களை சிறையில் அடைத்தனர்.

கடந்த 3 மாதத்தில் மட்டும் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் 50-க்கும் அதிகமான அரிசி கடத்தல் வழக்குகள் பதிவாகி, சுமார் 200 டன்னுக்கு மேல் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

r

இதுபற்றி வாணியம்பாடி சமூக ஆர்வலர் அன்பரசு நம்மிடம், "நமது மாநிலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்போதெல்லாம் புரோக்கர்கள் வழியாக ஆந்திராவில் இருந்து குண்டுநெல் மூட்டை களை 1000, 1100 ரூபாய் என வாங்கி, தமிழகத்துக்கு கொண்டுவந்து, விவசாயிகள் பெயரில் நேரடி கொள்முதல் நிலையங்களில் 1800 வரை விற்கிறார்கள். இதுபற்றி அதிகாரிகளுக்குத் தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த நெல் அரிசியாகி அரசின் குடோன்களில் வைக்கப்பட்டு, பின்னர் நியாயவிலைக் கடைகள் மூலமாக, புழுத்துப்போன அரிசியாக பொதுமக்களுக்குத் தருகிறார்கள். வாங்காத ரேஷன் கார்டுக்கான அரிசியை லோக்கல் அரசியல்வாதிகள், ரேஷன் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் வாங்கியதாக கணக்கு எழுதிவிட்டு அதனை அரிசி மாபியாக்களிடம் விற்கிறார்கள்.

r

அரிசி மூட்டைகளை கன்டெய்னர்கள், லாரிகள், மினி டெம்போக்கள், இரயில்கள் மூலமாக கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப், பெங்களுரூ, ஆந்திரா மாநிலம் சித்தூர், குப்பம், நகரி, நெல்லூர் போன்ற நகரங் களில் உள்ள ரைஸ்மில்களில் பாலிஷ் செய்கின்றனர். பின்னர் ஆந்திரா பொன்னி, கர்நாடகா பொன்னி என்கிற விதவிதமான பெயர்களில் பில்லோடு நம்ம ஊர் சந்தைக்கு வருகின்றன. இதனை போட்டி போட்டுக்கொண்டு நம்ம ஊர் நடுத்தர மக்கள் வாங்கி உண்கிறார்கள்'' என்றார்.

"கடத்தல்காரர்கள் கைது செய்யப் படுவதெல்லாம் கண் துடைப்புக்காக' என்கிற குற்றச்சாட்டு குறித்து, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ள அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "சென்னையில் இருந்து பெங்களுரூ செல்லும் சாலை தமிழகத்தில் மிக முக்கியமானது. இதில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்வதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதேபோல் தேசிய நெடுஞ்சாலையைத் தவிர குறுக்கு வழிகளை அதிகளவில் கடத்தல் காரர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா அரசிடம், அரிசியைக் கடத்தும் மாபியாக்களை பிடிக்க உதவி கேட்டாலும் செய்வதில்லை. அதோடு, பிடிபடுபவர் களுக்குத் தகவல் தெரிவதில்லை. இங்கபோய் இறக்கச் சொன்னாங்க... அவ்ளோதான் தெரியும் என்கிறார்கள். சிக்கும் வாகனங்கள் திருட்டு வாகனங்களாக அல்லது முறையான ஆர்.சி. புக் இல்லாதவையாக உள்ளது, அதனால் மெயின் தலைகளை பிடிக்க முடிவதில்லை'' என்றார்.

nkn010521
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe