"பில்லி, சூனியம், மாந்திரீகம் மற்றும் புதையல் எடுப்பதில் தான் கெட்டிக்காரன் என்பது போல் காட்டிக்கொண்டு, தங்களுக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என நம்பிக்கையோடு வரும் பெண்களை வசியப்படுத்தி தன்வசம் வைத்துக் கொள்கின்றான் போலிச்சாமியார் சடையன். காவல்துறையிடம் நேரில் ஆஜராகி புகார் கொடுத்தாலும் அவனை நெருங்குவதில்லை போலீஸார். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் இவனைப்       பற்றி 2023, மே 16 நக்கீரன் இதழில் எழுதியிருந்தீர்கள். என்னைப் போன்ற பாதிக்கப்பட்டோர்        களுக்கு உதவுங்கள்'' என 'நக்கீரனை' அழைத்தார் உடுமலைப்பேட்டை குமரலிங்கபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்.

Advertisment

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியை சேர்ந்த ராஜராஜேஸ்வரிக்கு குறிபார்த்த சடையன் எனும் சபரீஸ்வரன், "நீ அரச குடும்பத்தில் பிறந்தவள். மதிப்பிட முடியாத அளவிற்கு பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான நகைகள் புதையலாய் புதைந்து கிடக்கின்றது. நான் சொல்வதை கேட்டு பூஜை செய்தால் அத்தனை நகையும் உனக்குத்தான்'' என ஆசைவார்த்தை காட்டி பலவித நிர்வாண பூஜைகள் செய்ததையும், அவரை ஏமாற்றி பல லட்சங்கள் பணம் பறித்ததையும், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது குறித்தும் "நக்கீரனில்' குறிப்பிட்டிருந்தோம். அத்துடன்  இவ்விஷயம் உடுமலைப் பேட்டை காவல்நிலையம் சென்றதையும் பதிவிட்டிருந்தோம். அதுபோல் இதுவுமா?

Advertisment

"என்னுடைய பெயர் மணிகண்டன். டாடா ஏஸ் வாகனம் ஓட்டும் டிரைவர் நான். எனக்கு மனைவி மற்றும் மகள் உண்டு. இதே பகுதியில் இரண்டு வீடு தள்ளியிருக்கின்றார் சடையன் என்கின்ற சபரீஸ்வரன். வெள்ளை வேஷ்டி, கறுப்பு பேண்ட் என பந்தாவாக தினம் ஒரு காரில் சுற்றும் சபரீஸ்வரனுக்கு தொழிலே இரிடியம், ரைஸ்புல்லிங் விற்பனை செய்வதுதான். என்னையும் சில நேரங்களில் வாகன ஓட்டுநராக அழைத்துச் செல்வார். கூலியாக, கூறிய பணத்தை விட அதிகம்தான் கொடுப்பார். காஷ்மோரா படத்தில் நடிகர் கார்த்தி போலிச் சாமியாராக நடித்து, அவரே வைத்துவிட்டு பில்லி சூனியம் எடுப்பது போன்று காட்சிகள் இருக்கும். அது மாதிரிதான் இவரும். தன்னைத் தேடி வருபவர்களை கணித்து முன்கூட்டியே அங்கே எங்களைப் போல் ஆட்களைக் கொண்டுவைத்து பின் அவரே எடுப்பது மாதிரி எடுப்பார். அவங்களும் மயங்கி, இவர் சொன்னதைச் செய்வார்கள். அவர்களின் பேராசையைத் தூண்டி அவர்களிடமே "என்னிடம் ஒரு பார்ட்டி இருக்கு. இரிடியம், ரைஸ்புல்லிங் வாங்கி விற்பனை செய்யலாம்' என தூண்டிலை போடுவார். நமக்கும் பல கோடி ரூபாய் கிடைக்குமே என ஏற்கனவே கடனில் இருக்கும் அவன் மேலும் கடன் வாங்கி இவரிடம் ஏமாந்திடுவான். இதில் சம்பந்தப்பட்ட வீட்டு பெண்களையும் ஆட்டையப் போட்டுவிடுவான். பெரிய இடத்து ஆட்கள் என்பதால் போலீஸ் வரை போவதில்லை. அதில் ஒரு பெண் மட்டும் "நக்கீரனை' தேடிவந்தாங்க. அவனுக்கு உதவியாக இருந்த என்னையே ஏமாற்றி என்னுடைய மனைவியையும், குழந்தையையும் தனியே ஒளித்து வைத்திருக்கின்றான். எனக்கு பெண்டாட்டி வேணாங்க.. குழந்தையை மட்டும் கொடுத்துட்டா போதும். என்னைய மாதிரி பல நபர்களின் மனைவிகள் அவன் பிடியில் இருக்கி றாங்க.. காப்பாத்துங்க. அவனுக்கு குமரலிங்க புரம் எஸ்.ஐ. விஜயகுமாரும் பக்கபலமாக இருக் கின்றார்'' என்றார் அவர்.

samyar1

நக்கீரன் செய்திக்குப் பிறகு சபரீஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்த உடுமலைப்பேட்டை காவல்துறை அவனை சிறைக்கு அனுப்பியது. அதன்பின் 4க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் போலிச்சாமியார் மீது. இதுபோல் அதிக அளவில் புகார்கள் குவிய, குமரலிங்கம் காவல்நிலைய எஸ்.ஐ. போலிச்சாமியாரை எச்சரிப்பதுபோல் எச்சரித்து எழுதி வாங்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டும் உண்டு.

Advertisment

"என்னுடைய பேத்தியை போலிச்சாமியார் சடையன் உட்பட நான்கிற்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய் தனர். போலீஸிடம் போய் புகார் கொடுத்தால் அதற்கு சாட்சி இருக்கா? படம் இருக்கா? என கேட்கிறாங்க. இப்பவரை அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டு அலையுறா. காவல்துறை உடனடியாக விசாரிச்சால் மாயமான பல பெண்களை மீட்கலாம்'' என்கின்றார் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்.

இது குறித்துக் கருத்தறிய குமரலிங்கபுரம் காவல் நிலைய எஸ்.ஐ. விஜயகுமாரை (94ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்02, 82ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்37) அழைத்தோம். பதிலில்லை. 

மோசடி புகார்களும், பெண்களை மீட்டுத் தாருங்கள் என பல புகார்களும் காவல் நிலையத்தை தட்டிய நிலையில்... என்ன செய்கின்றது திருப்பூர் மாவட்ட காவல்துறை?