செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் மீடியாகாரர்கள் என்கிற அளவுக்கு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப், ஷார்ட்ஸ், ரீல்ஸ் என்று அனைத்து சமூக ஊடகங்களிலும் செய்திகள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இதில் எது உண்மை, எது பொய் என்பதை கண்டறிவதற்கு முன், ஏதேனும் ஒன்று ‘வைரலாகி விடுகிறது. அதுவே ‘ட்ரெண்டிங்’ என்று பலரையும் ஈர்ப்ப தால், அதே வழியில் மற்றவர்களும் செல்ல நேரிடுகிறது. ஊடக அறம் என்பது ஏதேனும் ஒன்றின்பின்னே செல்வதல்ல. எது உண்மை என்று தேடிக் கண்டு அடைவதே உண்மையான இதழியலாகும்.
ஊடகத்துறை மீதான அக்கறையுடன், முறையான பயிற்சியும், அனுபவமும் வாய்க்கும்போது, உ
செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் மீடியாகாரர்கள் என்கிற அளவுக்கு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப், ஷார்ட்ஸ், ரீல்ஸ் என்று அனைத்து சமூக ஊடகங்களிலும் செய்திகள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இதில் எது உண்மை, எது பொய் என்பதை கண்டறிவதற்கு முன், ஏதேனும் ஒன்று ‘வைரலாகி விடுகிறது. அதுவே ‘ட்ரெண்டிங்’ என்று பலரையும் ஈர்ப்ப தால், அதே வழியில் மற்றவர்களும் செல்ல நேரிடுகிறது. ஊடக அறம் என்பது ஏதேனும் ஒன்றின்பின்னே செல்வதல்ல. எது உண்மை என்று தேடிக் கண்டு அடைவதே உண்மையான இதழியலாகும்.
ஊடகத்துறை மீதான அக்கறையுடன், முறையான பயிற்சியும், அனுபவமும் வாய்க்கும்போது, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடினமான பணியைத் துணிவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள முடியும். அதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. செய்தி மற்றும் மக்கள்தொடர்புத் துறை வாயிலாக சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஆகஸ்ட் 25 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்து குழுமத்தைச் சேர்ந்த ரவி, பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆகியோர் பொறுப்பு வகிக்கும் இந்த இதழியல் கல்வி நிறுவனத்தின் தொடக்க விழாவில், உண்மையைக் கண்டறியும் துணிச்சல்மிக்க புலனாய்வு இதழியலில் தனி முத்திரை பதித்த நக்கீரனுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பேட்ச்சிலும் 60 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அனைத்து வகை ஊடகங்கள் சார்ந்த பயிற்சிகளையும் வழங்குவதுதான் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் நோக்கம். முதல் பேட்ச்சில் தேர்வாகியுள்ள 60 பேரில் சென்னை முதல் தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட-மிக பிற்படுத்தப்பட்ட-பட்டியல் இன-பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவி கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளி மாணவர்களும் இதில் அடக்கம். மிகக் குறைந்த கட்டணத்தில், திறமையான ஊடகத்துறையினரைக் கொண்டு அச்சு இதழ், தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் உள்ளிட்ட முறையான ஊடகங்கள் குறித்த பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்படும்.
ஊடகத்துறைக்குப் புத்துயிர்ப்பு அளிக்கும் அரசின் இந்த முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மிகுந்த அக்கறையுடன் இருப்பதை தொடக்க விழாவிலேயே காண முடிந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது இளைஞரணி சார்பில் ‘கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்’ என்பதை ஆகஸ்ட் 7-கலைஞரின் நினைவுநாளன்று முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தில் தொடங்கினார். அதற்கான இலச்சினையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உங்கள் நக்கீரனுக்கு கிடைத்தது.
பன்முகத் திறமை கொண்டவர் கலைஞர். அவர் எழுத்தாளர், வசனகர்த்தா, கவிஞர், பாடலாசிரியர், நாடக நடிகர் எனப் பல திறமைகளைக் கொண்டிருந்தாலும் அவரது முதல் அடையாளம் பத்திரிகையாளர் என்பதுதான். இறுதிவரையிலும் அவர் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளராக இருந்தவர். அவர் பெயரிலான மாணவப் பத்திரிகையாளர் திட்டம், தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றிய தெளிவுகொண்ட இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சி சார்பிலும், கட்சி சார்பிலும் ஊடகத் துறைக்குப் புத்துயிர்ப்பு அளித்கும் முயற்சிகளைத் தொடங்கியுள்ள முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நக்கீரன் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. புதிய இளம் ஊடகத்தினரை வாழ்த்துகிறது.
-ஆசிரியர்